கொரோனா வைரஸ்... இளைஞர்களுக்கு அதிகம் பரவுகிறது... உலக சுகாதார நிறுவனம் தகவல்!!
ஜெனீவா: இளைஞர்களை கொரோனா தொற்று அதிகளவில் பாதித்து வருகிறது. இது அவர்களுக்கு தெரியாமல் கூட இருக்கலாம். அல்லது அவர்களுக்கு சிறிய அறிகுறிகள் இருக்கலாம் என்று உலக சுகாதார மையத்தின் மேற்கு பசிபிக் இயக்குநர் டாக்டர் டாகேஷி கசை தெரிவித்துள்ளார்.
Recommended Video
உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் குறையவில்லை. பல்வேறு நிறுவனங்கள் தடுப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு இருந்தாலும், நடப்பாண்டு இறுதியில்தான் மருந்து போடப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. கொரோனா தொற்றின் துவக்கத்தில் பத்து வயதுக்கு குறைந்தவர்கள் மற்றும் 60 வயதுக்கு அதிகமானவர்களுக்குத்தான் இந்த தொற்று பரவும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், நாடுகளைப் பொறுத்து அதன் வைரஸ் உருமாற்றம் பொருத்து மாறுபட்டு வருகிறது. தற்போது இதுகுறித்து தகவல் வெளியிட்டு இருக்கும் உலக சுகாதார மையத்தின் மேற்கு பசிபிக் இயக்குநர் டாக்டர் டாகேஷி கசை தெரிவித்து இருக்கும் தகவலில், ''20, 30 மற்றும் 40 வயதுகளில் இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது. அவர்களுக்கு இந்த தொற்று ஏற்பட்டு இருக்கிறது என்பது கூட தெரியாமல் இருக்கலாம். அல்லது அதன் அறிகுறிகள் குறைவாக இருக்கலாம். இவர்கள் மூலம் பெரியவர்களுக்கும் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. மேலும், நெருக்கடியான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் இந்த தொற்று எளிதில் பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
ஏன் இந்த வைரஸ் சிலரை மட்டும் பெரிய அளவில் பாதிக்கிறது. மற்றவர்களை பாதிக்கவில்லை என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்'' என்று தெரிவித்துள்ளார்.
உலக அளவில் 22 மில்லியன் மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 774,600 பேர் உயிரிழந்துள்ளனர். பிப்ரவரி 24 முதல் ஜூலை 12 ஆம் தேதி வரை 6 மில்லியன் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்த கால கட்டத்தில் வைரஸ் தொற்று 15 முதல் 24 வயது வரையிலான இளைஞர்களுக்கு 4.5% இருந்து 15%ஆக அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications