For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"சூப்பர் வேரியண்ட்.." பரவுகிறது 32 வகையில் உருமாறும் 'மோசமான' கொரோனா வைரஸ்! தடுப்பூசி பலன் சந்தேகம்

Google Oneindia Tamil News

ஜெனிவா: மிக அதிக எண்ணிக்கையிலான உருமாற்றங்களை கொண்ட மற்றும் தடுப்பூசிகளில் இருந்து தப்பிக்கக்கூடிய புதிய உருமாறிய கொரோனா பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

B.1.1 எனப்படும் பழைய உருமாறிய கொரோனாவின் மற்றொரு வடிவம் B.1.1.529 ஆகும். இது மிகவும் ஆபத்தானதாக கூறப்படுகிறது. ஏனெனில், இந்த வகை கொரோனா வைரஸ், 32 ஸ்பைக் உருமாற்றங்களை எடுக்க கூடியதாகும்.

கொரோனா வைரசின் ஸ்பைக்கை குறி வைத்துதான் தடுப்பூசிகள் செயல்படுகின்றன. ஸ்பைக் மாறினால் தடுப்பூசி வேலை செய்யாது. எனவேதான், இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா உருமாற்றங்களிலேயே இதுதான் மோசமானது என்கிறார்கள். இது தவிர 50 வகைகளில் உருமாற்றம் அடையக் கூடியது, இந்த B.1.1.529 வகை கொரோனா.

முதலில் உங்கள் லெவல் பாருங்கள் அதுக்குப்பிறகு குறை கூறலாம்...அமீருக்கு அட்வைஸ் செய்யும் ரசிகர்கள்முதலில் உங்கள் லெவல் பாருங்கள் அதுக்குப்பிறகு குறை கூறலாம்...அமீருக்கு அட்வைஸ் செய்யும் ரசிகர்கள்

ஆன்டிபாடிகளை தடுக்கிறது

ஆன்டிபாடிகளை தடுக்கிறது

தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா நாடுகளிலும், ஹாங்காங்கில் ஒரு கேஸ் இப்படி உருமாறிய கொரோனா என கண்டறியப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில்தான் இந்த வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை மரபணு வரிசைமுறை மூலம் 10 கேஸ்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் விஞ்ஞானிகள் இன்னும் அடையாளம் காணப்படாமல் பல கேஸ்கள் இருக்க கூடும் என்ற சந்தேகம் உள்ளது. வைரஸை எதிர்த்துப் போராடக்கூடிய ஆன்டிபாடிகளைத் தடுக்கும் திறன் காரணமாக இந்த வகை உருமாறிய கொரோனா பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

பரவாமல் ஒடுங்க வேண்டும்

பரவாமல் ஒடுங்க வேண்டும்

பொதுவாக உருமாறிய கொரோனா வைரஸ்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்ற போதிலும் கூட அவை அதிக அளவுக்குப் பரவாவிட்டால், குறிப்பிட்ட பகுதியிலேயே அடங்கி ஒடுங்கிவிடும். தென்னாப்பிரிக்காவிலிருந்து ஹாங்காங் நாட்டுக்கு சென்ற ஒருவரால் அந்த நாட்டிலும் இந்த புதிய வகை உருமாறிய வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. சர்வதேச போக்குவரத்து காரணமாக இந்த பாதிப்பு அதிகரித்து உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

 சர்வதேச பயணங்களால்

சர்வதேச பயணங்களால்

UK ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சியின் (UKHSA) அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் இதை கண்காணித்து விசாரணை செய்து வருகின்றனர். ஹாங்காங்கில் பாதிக்கப்பட்ட நபருக்கு 36 வயதாகும். அவர் அக்டோபர் 23 அன்று தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று நவம்பர் 11 அன்று திரும்பியிருந்தார். அவர் ஹாங்காங்கிற்கு திரும்பியபோது கொரோனா நெகட்டிவ் என பரிசோதனை முடிவுகள் வந்தன. ஆனால் தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் இருந்தபோது பரிசோதனை செய்து பார்த்தார்கள். அப்போது அந்த நபருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரிய வந்தது.

சூப்பர் வேரியண்ட்

சூப்பர் வேரியண்ட்

தென்னாப்பிரிக்காவில், உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் கேஸ் எண்ணிக்கை திங்கட்கிழமை 312 இலிருந்து செவ்வாய்கிழமை 860 க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது, இருப்பினும் புதிய "சூப்பர் வேரியண்டுடன்" இந்த அதிகரிப்புக்கு, தொடர்பு உள்ளதா என்பது தெரியவில்லை.

Recommended Video

    உலக நாடுகளை அச்சுறுத்தும் உருமாறிய Coronavirus.. Ind vs SA series நடக்குமா?
     மோசமானது

    மோசமானது

    தற்போது உலகம் முழுக்க அச்சுறுத்தலாக இருப்பது டெல்டா வேரியண்ட்தான். இது ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது. அது 16 வகையாக உருமாறியது. ஆனால், புதிய வேரியண்ட் 32 வகையாக உருமாறக் கூடியது என்பது அதிர்ச்சியளிக்கிறது. டாக்டர் பீகாக், இதுகுறித்து கூறுகையில், புதிய வகை உருமாறிய கொரோனா "மிகவும் மோசமானது" மற்றும் "கொடூரமானது" என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    New mutant corona has been found in many countries with a very high number of mutations and can escape from vaccines. Another form of the old variant corona B.1.1 is called B.1.1.529. It is said to be very dangerous.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X