ஆர்சிபி வீரர்களால் விராட் கோலிக்கு தொல்லை.. தோனி பேட்டிங்கால் மொத்த சிஎஸ்கே வீரர்களுக்கும் தொல்லை!

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஒட்டுமொத்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி பேட்ஸ்மேன்களால், கேப்டன் விராட் கோலிக்கு தலைவலி என்றால்.. சிஎஸ்கே கேப்டன் தோனியால் ஒட்டுமொத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் திருகு வலி என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு கேப்டன் இன்னிங்ஸ் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நேற்று மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி ஆகியோர் விளையாடி கிளாஸ் எடுத்தனர்.

28 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார் ரோஹித் சர்மா. 42 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார் விராட்கோலி. இதில் 3 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் உண்டு.

கேப்டன் மாதிரி ஆடுகிறார்

கேப்டன் மாதிரி ஆடுகிறார்

எப்படி ஒரு கேப்டன் இன்னிங்ஸ் இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணம் சிஎஸ்கே அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆட்டம். முக்கியமான இக்கட்டான நேரத்தில் களத்துக்கு வந்து 4 பந்துகளில் 1 ரன்கள் எடுத்து நடையைக்கட்டினார் தோனி. இதையெல்லாம் பார்த்துவிட்டு தான் ரசிகர்கள் உச்சகட்ட வெறுப்புக்கு சென்று மீம்ஸ் போட்டு தோனியை கலாய்த்து வருகிறார்கள்.

பெங்களூர் வீரர்கள் சொதப்பல்

பெங்களூர் வீரர்கள் சொதப்பல்

நடப்பு ஐபிஎல் சீசனில் ஒரு விஷயத்தை கவனித்தீர்கள் என்றால் தெரியும். பெங்களூரு அணியின் கடைசி கட்டத்தில் களமிறங்கும் வீரர்கள் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். துவக்க வீரர்களாக களமிறங்கும் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் சிறப்பாக அடித்தளம் அமைத்து செல்வதும் பின்னர், குறிப்பாக மிடில் ஆர்டருக்கு பிறகு வரும் வீரர்கள் சொதப்பி தள்ளி ரன்களை குவிக்க முடியாமல் செல்வதும் வாடிக்கை.

அணியால் கோலிக்கு தொல்லை

அணியால் கோலிக்கு தொல்லை

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் இப்படித்தான் துவக்க பார்ட்னர்ஷிப் 111 ரன்கள். ஆனால் மொத்தம் சேர்த்தது 156 ரன்கள் மட்டுமே. ஏபி டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் போன்ற அதிரடி வீரர்கள் இருந்த போதிலும் கூட அந்த அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது. விராட் கோலி தனது முழு அளவிலான ஃபார்ம் இல்லாத நிலையிலும்கூட அணிக்காக கஷ்டப்பட்டு தொடர்ந்து இரு போட்டிகளிலும் அரை சதம் அடித்துள்ளார். ஆனால் இறுதி கட்டத்தில் இறங்கும் வீரர்கள் அந்த ரன் ரேட் வேகத்தைக் கொண்டு செல்லாததால் எதிர்பார்க்கும் ரன்கள், வருவது கிடையாது. நல்லவேளையாக நேற்று ஆர்சிபி பந்து வீச்சு அபாரமாக இருந்ததன் காரணமாக மும்பை அணி எளிதாக சுருண்டது. ஒருவேளை வழக்கமான மும்பை அணியாக இருந்தால் இந்த ஸ்கோரை 15 ஓவர்களுக்கு உள்ளே யே அடித்திருப்பார்கள்.

தோனியால் சிஎஸ்கே டீமுக்கு தொல்லை

தோனியால் சிஎஸ்கே டீமுக்கு தொல்லை

அப்படியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பக்கம் திரும்பினால், இங்கே எல்லாமே நன்றாக இருக்கிறது. கேப்டன் பேட்டி ங் பிரச்சினையைத் தவிர. ருதுராஜ் கெய்க்வார்டு, டுப்லஸ்ஸிஸ், மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா என பல பேட்ஸ்மேன்கள் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார்கள். எப்படியும் ரன் ரேட்டை அதிகரிப்பார்கள், கணிசமாக ரன் அடித்து விடுகிறார்கள். ஆனால் இங்கு ஸ்பீடு பிரேக்கர் என்று சொல்வது போல இருப்பது தோனி மட்டும்தான். நடப்பு ஐபிஎல் சீசனில் 10 போட்டிகளில் ஆடியுள்ள தோனி மொத்தம் எடுத்துள்ள ரன்கள் 52 மட்டுமே. பல அணிகளில் பவுலர்கள் கூட இதை விட அதிக ரன்கள் எடுத்து உள்ளனர் என்பதுதான் இதில் நகைமுரண். தோனி ஸ்ட்ரைக் ரேட் வெறும் 108.33 என்ற அளவில் உள்ளது. இப்போதெல்லாம் ஒருநாள் போட்டிகளில் கூட பேட்ஸ்மேன்கள் இந்த அளவு ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்கள்.

தோனி சொதப்பல்

தோனி சொதப்பல்

நேற்று இப்படித்தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைத்திருந்த போது திடீரென அம்பத்தி ராயுடு சுரேஷ் ரெய்னா ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆகினர். அணியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருந்தது தோனி. ஆனால், வருண் சக்கரவர்த்தி வீசிய பந்தில் கிளீன் போல்ட் ஆனார் தோனி. அதிலும் சுரேஷ் ரெய்னா ரன் அவுட்டாக தோனி ஒரு முக்கிய காரணம்.

ரெய்னா ரன் அவுட்டுக்கும் காரணம்

ரெய்னா ரன் அவுட்டுக்கும் காரணம்

ஒரு ரன் ஓட வேண்டிய இடத்தில் இரண்டு நாட்கள் ஓட வைத்து 7 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து நன்கு ஆடிக்கொண்டிருந்த சுரேஷ் ரெய்னா கிரிக்கெட்டை பறிகொடுக்க தோனி ஒரு காரணமாக மாறினார் . சரி இவரவது அடிப்பார் என்று பார்த்தால், 4 பந்துகளில் ஒரு ரன் எடுத்துவிட்டு, கடைசியில் ஸ்பின் பந்தில் போல்ட்டாகி வெளியேற்றி பெரும் ஏமாற்றம் கொடுத்தார்.

Recommended Video

    RCB Vs MI Bangalore crushes Mumbai by 54 runs | Oneindia Tamil
    ஜடேஜா அபாரம்

    ஜடேஜா அபாரம்

    தோனி விக்கெட் விழுந்ததும் சிஎஸ்கே அணியின் தலை மீது மிகப் பெரிய பாறாங்கல் வைக்கப்பட்டது போல பாரம் அதிகரித்தது. நல்லவேளையாக ரவீந்திர ஜடேஜா 8 பந்துகளில் 22 ரன்கள் விளாசி அணியை வெற்றிக்கு அருகே கொண்டுவந்தார். இதன் பிறகு வந்த வீரர்கள் ரன் சேர்த்ததால் ஆட்டத்தின் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது சிஎஸ்கே . எளிதாக வெற்றி பெறவேண்டிய போட்டியை தோல்வியின் விளிம்புக்கு அழைத்து சென்றது தோனி ஆட்டம். இதன் காரணமாகத்தான் தோனியை கிண்டல் செய்து மீம்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    தோனி மீம்ஸ்

    தோனி மீம்ஸ்

    தோனி பந்துகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரை ஏன் அவுட் செய்தீர்கள் என கொல்கத்தா கேப்டன் மோர்கன் கேட்பது போலவும், எப்படி போட்டாலும் தோனி அவுட்டாகிறார் என்று பவுலர் கூறுவதை போலவும் கிண்டல் செய்கிறது இந்த மீம்.

    கோலி கூட ஒப்புமை தேவையா

    கோலி கூட ஒப்புமை தேவையா

    கோலி நேற்றைய மும்பைக்கு எதிரான போட்டியில், 42 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். அதிக பால்களை கோலி சந்தித்து விட்டார் என்று சிஎஸ்கே ரசிகர்கள் சிலர் கிண்டல் செய்ததை, தோனி எடுத்த 1 ரன்னுக்கு இந்த அனலைசிஸ் தேவையா என கேட்கிறது இந்த மீம்.

    முடிந்து போன ஆட்டத் திறன்

    முடிந்து போன ஆட்டத் திறன்

    தோனி இன்று உறும வேண்டும் என்று சிஎஸ்கே ரசிகர் ஒருவர் போட்ட மீமுக்கு பதில் மீம் இது. இனி அவ்வளவுதான். முடிஞ்சி போச்சி. அதிரடி ஆட்டமெல்லாம் இனியும் எதிர்பார்க்க முடியாது என்று சொல்கிறது இந்த மீம்.

    தோனிக்கு கிண்டல்

    தோனிக்கு கிண்டல்

    "கேப்டன் இன்னிங்ஸ் பாக்கனும்னா MI vs RCB மேட்ச் பாருங்க, டீம் ஆடுது கேப்டன் ஓப்பி அடிக்கிற மாதிரி இன்னிங்ஸ் பாக்கனுமா அப்போ CSK vs KKR மேட்ச் பாருங்க," என்று சொல்லி, தோனி ஆட்டத்தை கிண்டல் செய்கிறது இந்த ட்வீட்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+