மின்சாரம், உணவு, குடிநீர், எரிவாயு எல்லாம் கட்.. காசாவை முழுமையாக முற்றுகையிட இஸ்ரேல் உத்தரவு
ஜெருசலேம்: பாலஸ்தீனத்துக்கு உட்பட்ட காசா எல்லை முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக அறிவித்துள்ள இ|ஸ்ரேல் காசாவை முழுமையாக முற்றுகையிட உத்தரவிட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. குறிப்பாக பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான்
கடந்த 7ம் தேதி, காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் திடீரென தாக்குதலை தொடங்கினர்.

ஆபரேஷன் அல் அக்ஷா புயல் என்ற பெயரில் தாக்குதலை ஹமாஸ் பயங்கரவாதிகள் தொடங்கினர். இந்த தாக்குதலில் இஸ்ரேல் திக்கு முக்காடிப்போனது. ராக்கெட் மழை பொழிந்து ஒருபக்கம் தாக்குதல் என்றால் மற்றொரு பக்கம் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி சரமாரி தாக்குதலை தொடுத்தனர். இதையடுத்து, ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போரை அறிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன் யாகூ தாக்குதலை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.
இதையடுத்து, இஸ்ரேலின் போர் விமானங்கள் காசா நகரம் மீது குண்டு மழை பொழிந்தது. இதனால் ஹமாஸ் - இஸ்ரேல் இடையேயான சண்டை உக்கிரம் அடைந்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் காசா நகரில் பொழிந்த குண்டு மழைகளால் காசாவில் உள்ள பல கட்டிடங்கள் தரை மட்டமாகின. இதனிடையே, ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலில் தங்கள் கட்டுப்பாடுகளில் இருக்கும் பகுதிகளில் உள்ள ஏராளமானோரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக துருக்கி உதவியை இஸ்ரேல் நாடியிருப்பதாகவும் துருக்கியும் பேச்சுவார்த்தையை தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 600 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் படைகள் நடத்திய பதில் தக்குதலில் பயங்கரவாதிகள் 400 பேர், பொதுமக்கள் 300 பேருக்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரால் இரு தரப்பிலும் சேர்த்து பலி எண்ணிக்கை 1,300 ஐ கடந்துள்ளது. தாக்குதல்கள் தீவிரம் அடைந்து இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. பாலஸ்தீன பகுதிகளில் இருந்து இதுவரை 1,20,000 மக்கள் வெளியேறியுள்ளனர். காசா பகுதியில் 1,00,000 ரிசர்வ் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
அங்கு 130 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் இயக்கத்தினர் பிடித்துவைத்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது. பல் ஆண்டுகளாக நடந்து வரும் இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலில் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமாகியுள்ளது. இதனிடையே, காசா பகுதியை முழுமையாக முடக்க உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவவ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், காசா பகுதியை முழுமையாக முற்றுகையிட்டுள்ளோம். அப்பகுதி அனைத்தும்கட்டுப்பாட்டில் உள்ளன. மின்சாரம், உணவு, குடிநீர், எரிவாயு என எதுவும் கிடைக்க அனுமதிக்க போவதில்லை. எல்லாம் முடக்கப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.
-
அதிபருக்கு நெருக்கமானவர்களை தூக்கிய.. மாஜி இஸ்ரேல் மொசாட் ஏஜென்ட்கள்... அதிரும் ஐரோப்பா! -
நேக்கா 2 கப்பலை வெளியேற்றிய ஈரான்.. ஹார்முஸ்-ல் தவிக்கும் 800 கப்பல்.. இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் அச்சம்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ்












Click it and Unblock the Notifications