For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹிக்ஸ் போஸான்: ”இருக்கா, இல்லையா?”- கடவுள் துகள் பற்றிய புதிய சர்ச்சை!

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஜெனீவா: கடந்த 2012ம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரைச் சேர்ந்த ‘செர்ன்' அறிவியல் மைய விஞ்ஞானிகள் தங்களது நீண்ட கால ஆராய்ச்சியில் தேடி வந்த கடவுளின் துகள் அல்லது ஹிக்ஸ போசன் என்று கூறப்படும் துகளை கண்டுபிடித்து சாதனை படைத்திருப்பதாக அறிவித்தனர்.

நோபல் பரிசு

நோபல் பரிசு

இது, இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று எனவும் பாராட்டப்பட்டது. இதற்காக விஞ்ஞானிகள் பீட்டர் ஹிக்ஸ் மற்றும் பிரான்கோயிஸ் இங்லர்ட் ஆகியோருக்கு நோபல் பரிசும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

வேறு துகளாமே

வேறு துகளாமே

ஆனால் ஜெனீவா விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது, உண்மையில் கடவுளின் துகள் அல்ல. அது வேறு ஏதோ ஒன்று என்கிற கருத்து தற்போது வலுப்பெற்று உள்ளது. செர்ன் மையத்தின் விஞ்ஞானிகளே கூட கடவுள் துகள் கண்டுபிடிப்பு பற்றிய தங்கள் கருத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

பிர்லா மைய இயக்குநரும் மறுப்பு

பிர்லா மைய இயக்குநரும் மறுப்பு

இந்த நிலையில் இதற்கு வலுச் சேர்க்கும் விதமாக ஐதராபாத்தைச் சேர்ந்த பி.எம். பிர்லா அறிவியல் மைய இயக்குனர் சித்தார்த், தனது சர்வதேச ஆய்வறிக்கை கட்டுரையில் மறுத்து இருக்கிறார்.

வாய்ப்பே இல்லை

வாய்ப்பே இல்லை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கட்டுரையில், ‘‘வானவெளியை நீண்டகாலமாக ஆய்வு செய்து வரும் இயற்பியல் விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை கடவுளின் துகள் என்பவை விண்வெளியில் மிகவும் புதிரானவை. இது போன்ற துகள் எதுவும் இருந்தாலும் அவற்றை விண்வெளியின் புறப்பரப்பு உறிஞ்சிக்கொண்டு விடும். எனவே கடவுள்களின் துகளோ, அதிகமான ஈர்ப்பு விசை கொண்ட கறுந்துகளை பகுதியோ இயற்பியல் விஞ்ஞான கொள்கையின்படி இருப்பதற்கான வாய்ப்பு இல்லை'' என்று தெரிவித்து உள்ளார்.

இது வேறு

இது வேறு

கடவுளின் துகள் என்பது ஆங்கிலத்தில் Higgs boson என்று அழைக்கப்பட்டது. ஆனால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கடவுளின் துகள் இல்லை என்றும், இந்த துகளின் ஆங்கில பெயர் techni-higgs என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

தெய்வம் இருப்பது எங்கே..

தெய்வம் இருப்பது எங்கே..

கடவுளின் துகள் என்றால், அந்த ஒரு துகளில் இருந்துதான் இந்த பிரபஞ்சத்தின் அனைத்து படைப்புகளும் உருவாகியிருக்க வேண்டும். ஆனால் டெக்னி ஹிக்ஸ் துகளுக்கு அந்த ஆற்றல் இல்லை, எனவே இதை கடவுளின் துகள் என கருதக்கூடாது என்கின்றனர் விஞ்ஞானிகள். கடவுள் அவ்வளவு எளிதில் கண்ணுக்கு தென்படுவாரா என்ன?

English summary
The discovered elusive Higgs boson, first predicted theoretically, turns out to may have been a different particle after all. A team of international researchers have claimed that it could be an even more mysterious techni-higgs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X