பெண்ணின் தலையில் சிசிடிவி மாட்டிய தந்தை.. தெருவெல்லாம் கேமராவுடன் திரியும் மகள்.. காரணம் தெரியுமா?
கராச்சி: பாகிஸ்தானில், பெற்ற மகளுக்காக தந்தை செய்த காரியம் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் ஏராளமான கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.
சமீபகாலமாகவே பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது. அதிலும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புகள் குறைந்து கொண்டே வருவதுடன், பெண்கள் மீதான வன்முறை தாக்குதல்களும் அதிகரித்தபடியே உள்ளன.

இந்தியா: இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மலிந்துகொண்டேயிருக்கின்றன. பெண் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே சென்றால், அவர்கள் வீடு திரும்பும்வரை பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு இருக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. சில கல்வி நிறுவனங்களிலேயே பாதுகாப்பு இல்லாதபோது, மிகப்பெரிய கலக்கம் பெற்றோர்களை சூழ்ந்து வருகிறது.
இதுஒருபுறமிருந்தாலும், பாகிஸ்தானில் ஒரு அப்பா, தன்னுடைய மகளுக்காக செய்துள்ள காரியம்தான், வியப்பை தந்து வருகிறது.. தன்னுடைய செல்ல மகள், எங்கு சென்றாலும் அதை கண்காணிப்பதற்காகவே, மகளின் தலையில் ஒரு சிசிடிவி கேமராவை பொருத்தியிருக்கிறாராம்..
கேமரா: இந்த கேமராவை எங்கிருந்து வேண்டுமானாலும் தன்னுடைய செல்போன் மூலமாக 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும். இப்போதெல்லாம் அந்த பெண், பாகிஸ்தானின் தெருக்களில் எங்கு போனாலும், தலையில் கேமராவுடன்தான் நடமாடி வருகிறாராம்.. இதை அம்மக்களே ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர். இந்த விஷயம் மீடியா வரைக்கும் சென்று, செய்தியாளர் ஒருவர் அந்த பெண்ணை பேட்டி எடுத்துள்ளர்..
இப்படி தலை மேலே, கேமராவை மாட்டியிருப்பது உங்களுக்கு அசௌகரியமாக இல்லையா? என்று செய்தியாளர் கேட்டிருக்கிறார்.. அதற்கு அந்த பெண், "இந்த கேமராவுக்கான அக்ஸஸுடன் வீட்டிலிருந்தபடியே,, நான் எங்கெல்லாம் செல்கிறேன் என்ன செய்கிறேன் என்பதை என் அப்பா கண்காணித்து வருகிறார்..
ஆட்சேபம்: என்னுடைய அப்பா எது செய்தாலும், அது என்னுடைய நல்லதுக்குதான் செய்வார்.. அதனால் என்னுடைய அப்பாவின் முடிவுக்கு நான் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்றார்.
மகளின் பாதுகாப்புக்காக தந்தை இவ்வாறு செய்தாலும், இந்த செயல்பாடு சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.. பெண் அளித்த இந்த பேட்டிதான், இணையத்தில் வீடியோவாக வைரலாகி கொண்டிருக்கிறது. அதுவும் தலைமேல் சிசிடிவி கேமராவுடன்....!!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications