9 வயது சிறுமியை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி மணந்தாரா?: உண்மையில் நடந்தது என்ன?
துனிஸ்: 9 வயது சிறுமியை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்பு துனிசியாவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி 9 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டதாகவும், அப்போது சிறுமி அழுதபடியே அந்த நபருடன் நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
உண்மையில் அந்த நபர் சிறுமியை திருமணம் செய்து கொள்ளவில்லை.

போட்டி
குர்ஆனில் உள்ள சூராக்களை மனப்பாடமாக கூறும் போட்டியில் கலந்து கொண்ட சிறுமி ஒரு சூராவை தவறாக கூறியதால் அழுதுள்ளார். அவரை போட்டிக்கு ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரான அந்த வாலிபர் சமாதானம் செய்ததை பார்த்து அவர்களுக்கு திருமணமாகிவிட்டதாக செய்திகள் வெளியாகின.

வீடியோ
இந்நிலையில் இது குறித்த வீடியோ ஃபேஸ்புக்கில் வெளியாகியுள்ளது. அரபு மொழியில் உள்ள வீடியோவின் தலைப்பில் துனிசியாவைச் சேர்ந்த போராளி 9 வயது சிறுமியை திருமணம் செய்ய விரும்புகிறார். அதனால் சிறுமி அழுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
துனிசியர்
இந்த வீடியோவை பார்த்த அரபு மொழி தெரிந்த ஒருவர் ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, துனிசிய போராளி ஒருவர் 9 வயது சிறுமியை திருமணம் செய்ய விரும்புவதாக கூறப்பட்ட வீடியோவை பார்த்தேன். நான் துனிசியாவைச் சேர்ந்தவன் என்றாலும், முஸ்லீம் என்றாலும் போராளிகளை அவமதிக்க தயங்காதவன். தங்களை போராளிகள் என்று கூறிக் கொள்ளும் தீவிரவாதிகளை ஐரோப்பியர்கள் மட்டும் இன்றி முஸ்லீம்களும் வெறுக்கிறார்கள்.

குரான் போட்டி
ஆனால் அந்த வீடியோவில் குரான் போட்டியை நடத்தும் நபரை பார்த்தேன். சிறுமி ஒரு சூராவை தவறாக கூறியதுடன் மறந்துவிட்டதாலும் அழுதார். நல்ல காலம் எனக்கு அரபு மொழி தெரிந்ததால் அது புரிந்தது. அரபு மொழி தெரியாதவர்கள் அந்த வீடியோ குறித்து என்னவெல்லாம் சொல்வார்களோ என்று அந்த நபர் தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications