களமிறக்கப்பட்ட டால்பின்கள்! அமெரிக்காவுக்கு பயம் காட்ட.. ஈரான் புது பிளான்! சிக்கலில் டிரம்ப்
தெஹ்ரான்: ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான தற்போதைய பதற்றமான சூழலில், ஹார்முஸ் நீரிணையில் ஈரானிய இராணுவம் கண்ணிவெடி சுமக்கும் டால்பின்களை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான்-அமெரிக்கா இடையே நடந்து வந்த போர் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. மறுபுறம் ஹார்முஸ் நீரிணையை முழு கண்ட்ரோலில் எடுக்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இப்படி இருக்கையில், அமெரிக்காவுக்கு செக் வைக்கும் விதமாக ஈரான் டால்பின்களை பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டால்பின்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?
டால்பின்கள் இயற்கையிலேயே மிகச்சிறந்த சோனார் திறனைக் கொண்டவை. தண்ணீருக்கு அடியில் உள்ள பொருட்களைக் கண்டறிவதில் இவை மனித தொழில்நுட்பத்தை விடச் சிறந்தவை. இப்பேற்பட்ட டால்பின்களுக்கு பயிற்சி கொடுத்து, அதன் முதுகில் வெடிமருந்துகளைப் பொருத்தி, எதிரி நாட்டுப் போர்க்கப்பல்களை நோக்கி அவற்றை அனுப்ப ஈரான் பிளான் செய்திருக்கிறது.
இது ஈரானுக்குப் புதிய விஷயம் அல்ல. 2000ம் ஆண்டிலேயே சோவியத் யூனியனிடம் இருந்து இத்தகைய போர் பயிற்சி பெற்ற டால்பின்களை ஈரான் வாங்கியதாக பிபிசி தெரிவித்திருந்தது.
ஹார்முஸ் என்பது ஈரானின் ஹார்ட் போல. அதை அமெரிக்கா கைப்பற்றுவதை ஈரான் கொஞ்சம் கூட விரும்பவில்லை. எனவேதான் இப்படி ஒரு நடவடிக்கையை கையில் எடுத்திருக்கிறது. மட்டுமல்லாது ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் எண்ணெய் ஏற்றுமதி முடக்கம் காரணமாக அந்நாடு கடும் நெருக்கடியில் உள்ளது.
இப்படியான தடையை போர் நடவடிக்கையாகவே ஈரான் கருதுகிறது. எனவே நேரடிப் போரைத் தவிர்த்து, இத்தகைய நூதனமான மற்றும் குறைந்த செலவிலான ஆயுதங்கள் மூலம் அமெரிக்கப் போர்க்கப்பல்களுக்கு அச்சுறுத்தல் விடுக்க ஈரான் முயல்கிறது.
பிற அச்சுறுத்தல்கள்
இந்த பிளானில் டால்பின்கள் மட்டும்மல்லாது வேறு சில யோசனைகளையும் ஈரான் முயற்சித்து வருகிறது. அதாவது, ஹார்முஸ் நீரிணையில் நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்துவதன் மூலம் அமெரிக்காவுக்கு செக் வைக்க யோசித்திருக்கிறது. இது தவிர, கடலுக்கு அடியில் செல்லும் முக்கியமான டெலிபோன் மற்றும் இன்டர்நெட் கேபிள்களைத் துண்டிப்பதாக ஈரானின் புரட்சிகர காவல்படை மிரட்டல் விடுத்துள்ளது. இது உலகளாவிய தகவல் தொடர்பைப் பாதிக்கும். இப்படியெல்லாம் செய்து அமெரிக்காவை அச்சுறுத்தலாம் என்று ஈரான் நினைக்கிறது.
ஆனால் அமெரிக்கா என்ன லேசுபட்ட ஆளா? இதை எதிர்கொள்ள அமெரிக்க கடற்படை தயாராக உள்ளது. ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வைக்கும் எந்தவொரு ஈரானியப் படகையும் கண்டதும் சுட்டு தள்ள ட்ரம்ப் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். இதிது தவிர அமெரிக்காவும் சீ ட்ரோன்கள், தானியங்கி நீர்மூழ்கி வாகனங்களை பயன்படுத்துகிறது.
ரேதியோன் (RTX) மற்றும் ஜெனரல் டைனமிக்ஸ் நிறுவனங்களின் நவீன சோனார் கருவிகள் மூலம் கடலடியில் உள்ள கண்ணிவெடிகளை ஸ்கேன் செய்து அழிக்கும் தொழில்நுட்பத்தை அமெரிக்கா வைத்துள்ளது. எனவே ஈரானின் பிளான் 100% வெற்றியடையுமா? என்பது டவுட்தான்.
-
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
அடங்காத போர் வெறி.. அமெரிக்க தாக்குதலில் பறிபோன 3 இந்தியர்களின் உயிர்! ஓமனில் அதிர்ச்சி! -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா!











Click it and Unblock the Notifications