"Doomstay" வால்ட்! உலகில் மாபெரும் பேரழிவு ஏற்பட்டால்.. மிஞ்சியுள்ள மனிதர்கள் இங்கு தான் செல்லணும்!
லண்டன்: நிச்சயமற்ற இந்த உலகில் எப்போது வேண்டுமானாலும் டைனோசர்களை அழித்தது போன்ற ஒரு மாபெரும் பேரழிவு பூமியைத் தாக்கலாம். அதுபோல பேரழிவு ஏற்படும்போது தப்பி பிழைக்கும் மனிதர்கள் எங்குச் செல்ல வேண்டும் தெரியுமா.. புதிய உலகம் அமையும்போது மனிதர்களுக்கு கை கொடுக்க ஏதுவாக ஆய்வாளர்கள் ஒரு பிரம்மாண்ட டூம்ஸ்டே பெட்டகத்தை உருவாக்கியுள்ளனர். அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.!
உலகில் எதுவுமே நிரந்தரம் இல்லை. பூமியைத் தனது கட்டுக்குள் வைத்த டைனோசர்கள் கூட நொடியில் அழிந்து போனது. பூமியைத் தாக்கிய அந்த எரிகல் கிட்டத்தட்ட உலகை மொத்தமாக அழித்தது. மீண்டும் அதேபோல ஒரு பேரழிவு நடக்குமா என்றால் நிச்சயம் நடக்கும்.. எப்போது நடக்கும் என்பது மட்டுமே கேள்வியாக இருக்கிறது.

பேரழிவு
அப்படிப் பேரழிவு ஏற்படும்போது நிச்சயம் பூமியின் பெரும்பகுதி அழிந்துபோகும். கோடிக் கணக்கான மனிதர்களும் கூட உயிரிழக்க நேரிடும். அப்படியொரு பேரழிவு ஏற்பட்டால் மிஞ்சி இருக்கும் மனிதர்கள் செல்ல வேண்டிய இடம் ஆர்க்டிக் தான். அங்கு உறைந்த மலையின் ஆழத்தில் தான் பூமியின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் ஒரு மையம் உள்ளது. நார்வேயின் ஸ்வால்பார்ட் பகுதியிலுள்ள ஸ்பிட்ஸ்பெர்கன் தீவில் அமைந்துள்ள இது, உலக விதை வங்கி (Global Seed Vault) என்றும் அழைக்கப்படுகிறது.
கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலிருந்தும் 12 லட்சத்திற்கும் அதிகமான விதைகள் இங்குப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதில் அன்றாட உணவுக்கான முக்கிய பயிர் விதைகளும் அடங்கும். பேரழிவு ஏற்படும்போது அனைத்து விதமான விதைகளையும் இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்துள்ளன. சுமார் 120 மீட்டர் ஆழத்தில் பாறைக்குள் பயங்கரப் பாதுகாப்பாக இது வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பெட்டகத்தைச் சுற்றி இயற்கை பனி அமைந்துள்ளதால் அது ஆண்டு முழுவதும் குளிர்ச்சியாக இருக்கும்.
டூம்ஸ்டே வாலட்
பேரழிவு ஏற்படும்போது இது மக்களுக்கு உதவும் என்பதால் இதை டூம்ஸ்டே வாலட் என்றும் கூட பலரும் அழைக்கின்றனர். விதைகளுடன் அதே இடத்தில் உலக ஆவணக் காப்பகம் (Arctic World Archive) உள்ளது. இது முக்கியமான பதிவுகளையும் ஆவணங்களையும் வைத்துள்ளது. உலகம் புதிய தொடக்கத்தை எதிர்கொண்டால் நாம் மீண்டும் முதலில் இருந்து அனைத்தையும் செய்யத் தேவையில்லை. இது ஒரு வழிகாட்டியாக இருக்கும்.
ஏன் இந்த ஸ்வால்பார்ட் பகுதியில் இதைச் சேமித்து வைத்தனர் என்ற சந்தேகம் வரலாம்.. இந்தப் பகுதி நார்வேயின் லாங்யியர்பியனுக்கு அருகிலுள்ள தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ளது. இது உலகின் மற்ற பகுதிகளில் இருந்து தனித்து இருக்கிறது. பவர் பெயிலர் ஏற்பட்டாலும் கூட விதைகளுக்கு எதுவும் ஆகாது. ஏனென்றால் நிரந்தரப் பனியால் மூடியிருக்கும் permafrost என்ற பகுதியில் இது அமைந்துள்ளது. இங்குள்ள குளிர்ச்சியான வானிலை விதைகளைப் பல வாரங்கள் வரையிலும் கூட பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்.
130 மீட்டர் உயரம்
மேலும், இது கடல் மட்டத்தில் இருந்தும் பல மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இதனால் கடல் நீர் மட்டம் உயர்ந்து பேரழிவு ஏற்பட்டாலும் கூட அதனால் பாதிக்கப்படாது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சீல் செய்யப்பட்ட பெட்டிகளில் விதைகள் அனுப்பப்படும். அந்தச் சீலை திறக்கவோ, சரிபார்க்கவோ அல்லது பயன்படுத்தவோ பெட்டகத்தைப் பராமரிக்கும் குழுவுக்குக் கூட உரிமை இல்லை. அவர்கள் அப்படியே அதைப் பெட்டகத்தில் வைத்துவிடுவார்கள்.
கை கொடுத்த டூம்ஸ்டே வாலட்
அந்த விதைகள் அதை அனுப்பிய குழுவுக்குச் சொந்தமானவை.தேவைப்பட்டால் அவை மட்டுமே அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும். கடந்த காலங்களில் கூட போரினால் சில வகைப் பயிர்கள் அழிந்தபோது இங்குச் சேமிக்கப்பட்ட விதைகளை மீண்டும் அந்தப் பயிர்களை வளர்க்கக் காரணமாக இருந்தது.
இந்த ஸ்வால்பார்ட் உலக விதை வங்கியில் தற்போது 12 லட்சத்திற்கும் அதிகமான விதைகள் உள்ளன. சேமிக்கப்பட்ட விதைகளில் தானிய வகைகள், அரிசி வகைகள், பருப்பு வகைகள் தான் அதிகம் உள்ளன. மற்றவை பழங்கள், காய்கறிகள், மூலிகைகள் மற்றும் பிற தாவரங்களின் கலவையாகும்.
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications