விண்கல்லை விடுங்க.. பூமியை தூர தூக்கி வீசும் நட்சத்திரங்கள்! ஆய்வில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சூரிய குடும்பத்தில் நிம்மதியாக சுற்றிக்கொண்டிருக்கும் நமது பூமியை விண்கற்கள் தாக்கி அழிக்க வாய்ப்பிருக்கிறது என்பதை நாம் பல முறை படித்திருப்போம். ஆனால், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் மற்றொரு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ரொம்ப தூரம் உள்ள நட்சத்திரம், நமது பூமியை சூரிய குடும்பத்திலிருந்து தூக்கி வீசும் என்று கண்டறியப்பட்டிருக்கிறது.

இக்ரஸ் (Icarus) இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு தற்போது புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வில், பூமியின் சுற்றுப்பாதையை மாற்றக்கூடிய ஆபத்துகள் விண்வெளியில் இருந்து வரலாம் என்று தெரிய வந்திருக்கிறது.

Earth space US

தூரத்து நட்சத்திரங்களால் கிரகங்களின் சுற்றுப்பாதையில் மாற்றம்

ஆய்வில், நமது சூரிய மண்டலம் முன்பு கருதியதை விட அதிகமாக நிலையற்றதாக இருக்கலாம் என்று தெரிய வந்திருக்கிறது. இப்படி இருக்கையில், சூரியனைப் போன்ற நிறையுடைய மற்றொரு நட்சத்திரம் அருகில் வந்தாலே பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நமக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தொலைவை AU என்று சொல்வார்கள். கி.மீ போலத்தான் இதுவும். இதுபோல 10,000 AU தொலைவில், ஒரு நட்சத்திரம் வந்தால் அதன் ஈர்ப்பு சக்தி நமது பூமியை பாதிக்கும்.

அது சூரிய மண்டலத்தின் எல்லையில் இருக்கும் ஊர்ட் மேக கூட்டத்தை அசைக்கக்கூடும். இதனால் ஈர்ப்பு விசையின் தாக்கம் ஏற்பட்டு, பூமி மற்றும் பிற கிரகங்களின் சுற்றுப்பாதைகளில் மாற்றங்கள் நிகழலாம்.

இப்படி ஒரு சூரியன் பக்கத்தில் வந்தால் எப்படி இருக்கும் என்பது குறித்து, மாதிரி ஆய்வை விஞ்ஞானிகள் நடத்தியிருந்தனர். இதற்கு முன்னர் நடத்தப்பட்ட ஆய்வை விட, தற்போது நடத்தப்பட்ட ஆய்வில், பூமிக்கு அதிக பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எதிர் வரும் நான்கு பில்லியன் ஆண்டுகளில் இதுபோன்று நிஜமாகவே நட்சத்திரங்கள் பூமியை கடந்து செல்ல இருக்கின்றன. இதனால் பூமியின் சுற்றுப்பாதையில் நிலைமாறுதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

பூமி மட்டுமல்ல புதனின் சுற்றுப்பாதையும் பாதிக்கப்படலாம். புதனின் சுற்றுப்பாதையில் குழப்பம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 50% முதல் 80% வரை அதிகரிக்கலாம். மேலும், செவ்வாய் கிரகமும் விலகி போகலாம்.

பூமியின் எதிர்காலம் கணிக்கப்பட்டதை விட மோசமாகலாம்

பூமி மற்றொரு கிரகத்துடன் மோதுவதற்கு 0.2% வாய்ப்பு உள்ளது. ஒருவேளை பூமி சூரியனுக்குள் விழலாம் அல்லது விண்வெளியில் வீசப்படலாம். புதனின் சுற்றுப்பாதை மாறினால், அது சங்கிலி எதிர்வினையைத் தொடங்கக்கூடும். வெள்ளி அல்லது செவ்வாய் பூமி மீது மோதலாம் அல்லது அதை வியாழனை நோக்கித் தள்ளலாம். வியாழனின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு, பூமி சூரிய மண்டலத்திலிருந்து நிரந்தரமாக வெளியேற்றப்படலாம். தூரத்தில் இருக்கும் புளூட்டோ கூட பாதுகாப்பாக இல்லை.

தற்போதைய கணிப்புகள் அபாயங்களை குறைத்து மதிப்பிடுகின்றன என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். முந்தைய ஆய்வுகளை விட பெரிய கிரகங்கள் நீண்ட கால மாற்றங்களுக்கு உட்படலாம் எனறும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+