துபாயில் நடைபெற்ற கார்ஸ் நிறுவனத்தின் 35வது ஆண்டு விழா
துபாய்: துபாயில் ஈடிஏ கார்ஸ் நிறுவனத்தின் 35 ஆம் ஆண்டு விழா 'கார்ஸ் டே' என கடந்த 11ம் தேதி மாலை ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் வெகு சிறப்புற நடைபெற்றது.

கார்ஸ் டாக்ஸி எக்ஸிகியூடிவ் டைரக்டர் அப்துல்லா சுல்தான், மனிதவள மேம்பாட்டுத்துறை எக்ஸிகியூடிவ் டைரக்டர் எம். அக்பர் கான், கார்ஸ் எக்ஸிகியூடிவ் டைரக்டர் ஏ.ஜே. கமால், சென்ட்ரல் அகௌண்ட்ஸ் எக்ஸிகியூடிவ் டைரக்டர் எஸ்.எம். கத்தீப் மற்றும் ஈடிஏ நிர்வாகத்தினரின் முன்னிலையில் கார்ஸ் டே கொண்டாடப்பட்டது.

ராசல் கைமா கார்ஸ் துணைப் பொது மேலாளர் ஹபிபுல்லா வரவேற்புரை நிகழ்த்தினார். துணைப் பொது மேலாளர் கோபால் கார்ஸ் நிறுவனத்தின் 35 வருட கால சாதனைகள் மற்றும் முன்னேற்றம் பற்றி விவரித்தார்.
ஏ.ஜே. கமால் கார்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட அனைவரையும் நினைவு கூர்ந்தார்.

2012 ஆம் ஆண்டில் நூறு சதவீதம் பணிக்கு வருகை புரிந்த ஊழியர்களுக்கு தங்க பதக்கம் வழங்கி பொது மேலாளர் வலித் எல் அமின் தத்தய் கௌரவித்தார். மேலும் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு விருதுகளையும், பரிசுகளையும் வழங்கினார்.
ஊழியர்களை மகிழ்விக்கும் விதமாக மேஜிக் ஷோ மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
துணைப் பொது மேலாளர் குருமூர்த்தி நன்றி கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications