ரஷ்யா vs ஐரோப்பிய நாடுகள்.. இந்தியாவிற்கு அடிச்ச லக்.. சலுகை விலையில் கச்சா எண்ணை.. சூப்பர் சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: உக்ரைன் மீதான போர் நடவடிக்கையால் ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெயில் 90 சதவீதத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறுத்த ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்துள்ளது. இதனால் ரஷ்யா அதிபர் விலாடிமிர் புதினின் பார்வை இந்தியா பக்கம் மீண்டும் திரும்ப வாய்ப்புள்ளது. இதன்மூலம் இந்தியாவுக்கு சலுகை விலையில் கூடுதலாக கச்சா எண்ணெய் கிடைக்க வாய்ப்புள்ளது.

உக்ரைன் மீதான போர் நடவடிக்கையால் ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால் ஐரோப்பா உள்பட பல நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை சில நாடுகள் குறைத்துள்ளன. பல நாடுகள் நிறுத்தியுள்ளன.

குறிப்பாக ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு கொள்முதல் செய்யும் ஐரோப்பிய நாடுகள் 90 சதவீதத்தை நிறுத்த முடிவு செய்துள்ளன. இது இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்குள் வர உள்ளது.

ரஷ்யாவுக்கு சிக்கல்

ரஷ்யாவுக்கு சிக்கல்

இதனால் ரஷ்யாவுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது ஐரோப்பிய நாடுகள் கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்துவன் மூலம் ரஷ்யாவுக்கு ஆண்டுக்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான ஏற்றுமதி வருவாய் இழப்பு ஏற்படும். இந்த நெருக்கடியை ரஷ்யா சமாளிக்க வேண்டியத அவசியமாகும். இதனால் ஐரோப்பியா வாங்க மறுக்கும் கச்சா எண்ணெயை ஆசிய நாடுகளில் விற்பனை செய்ய சீனா முயற்சி மேற்கொள்ள உள்ளது.

இந்தியாவின் பக்கம் பார்வை

இந்தியாவின் பக்கம் பார்வை

ஏனென்றால் அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக ரஷ்யாவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயை வாங்க பல நாடுகள் அஞ்சும் நிலையில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் தள்ளுபடி விலையில் அதனை பெற்று வருகின்றன. இதனால் தான் மீண்டும் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினின் பார்வை இந்தியா, சீனா பக்கம் திரும்ப வாய்ப்புள்ளது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

இந்தியா, சீனா நாடுகள் கச்சா எண்ணெய் சேமிப்பு கலன்கள் உள்பட அதற்கு அதிநவீன இயந்திரங்களை கையாண்டு வருகின்றன. இதனால் இருநாடுகளும் கச்சா எண்ணெயை அதிகமாக வாங்கி சேமித்து வைத்து கொள்ள முடியும். இதனால் ஐரோப்பிய நாடுகள் வாங்க மறுக்கும் கச்சா எண்ணெயை இந்தியா-சீனாவுக்கு வழங்குவது தான் சரியாக இருக்கும் என ரஷ்யா நினைக்கிறது. இதனால் இதுதொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வாங்கி குவிக்கும் இந்தியா

வாங்கி குவிக்கும் இந்தியா

முன்னதாக உக்ரைன் போருக்கு முன்பு இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து குறைந்த அளவு அதாவது மொத்த தேவையில் வெறும் 5 சதவீதம் மட்டுமே கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ததுன. இந்நிலையில் தான் பொருளாதார தடைகள் காரணமாக ரஷ்யா தனது நட்புநாடான இந்தியா மற்றும் சீனாவுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய முன்வந்தது. இதனால் இருநாடுகளும் போட்டிப்போட்டு ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன. இதனால் பிப்ரவரியில் 2.7 கோடி பீப்பாயாக இருந்த இந்தியாவின் இறக்குமதி மே மாதம் ஏறக்குறை 8 கோடி பீப்பாயை தொட்டுள்ளது. இந்நிலையில் தான் மீண்டும் இன்னொரு அதிர்ஷ்ட காற்று இந்தியா நோக்கி வீச வாய்ப்புள்ளது.

ஆசிய சந்தைக்கு அதிகம்

ஆசிய சந்தைக்கு அதிகம்

மேலும் போர் காலக்கட்டத்தில் விதிக்கப்பட்ட பொருளாதார தடை காரணமாக முதல் முறையாக ஐரோப்பிய சந்தையை விட ஆசிய சந்தைக்கு அதிக அளவு கச்சா எண்ணெயை ரஷ்யா விற்றுள்ளது. பால்டிக், கருங்கடல் வழியாக இந்த கச்சா எண்ணெய் கப்பலில் இந்தியா, சீனாவுக்கு அனுப்பப்படுகிறது. மே 26வரை கடல் மார்க்கமாக 5.7 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யும், பைப்லைன் வழியாக 73 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+