For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம்! 28 நாடுகளில் தடை நீக்கம்!!

By Mathi
Google Oneindia Tamil News

European Court annuls EU restrictions on LTTE
லக்சம்பர்க்: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கி தீர்ப்பளித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவானது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து 2011-ல் லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் சார்பாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்டர் கோப் ஆஜராகி வாதாடி வந்தார். இந்த வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த விசாரணையின் போது 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தவில்லை; தங்களது மக்களுக்காக வன்முறையற்ற வழிகளில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் போராட விரும்புகின்றனர் என்று வாதிடப்பட்டது.

மேலும் விக்கிபீடியா தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இலங்கையில் இனப்படுகொலை என்று கூறுமளவிற்கான ஒரு ஒடுக்குமுறை ஆட்சிக்கு எதிராகத்தான் நியாயமான போராட்டத்தை விடுதலைப் புலிகள் நடத்தினர் என்றும் புலிகளின் வழக்கறிஞர் கோப் வாதிட்டார்.

இன்று இந்த வழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் தற்போது பொருத்தமற்றவை. இந்த வழக்குக்கான செலவை விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஐரோப்பிய யூனியன் செலுத்தவும் வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் கிடைத்த சட்ட ரீதியான அங்கீகாரமாக கருதப்படுகிறது.

மகிழ்ச்சி கொண்டாட்டம்

ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 28 நாடுகளில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் சுதந்திரமாக செயல்பட முடியும் என்பதால் விடுதலைப் புலிகளின் புலம்பெயர் ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கியும் வெடி வெடித்தும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

English summary
In a landmark judgement delivered on Thursday the Court of Justice of the European Union, has ordered the Council of European Union to annul the restrictive measures taken against the Liberation Tigers of Tamil Eelam (LTTE).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X