நாங்க ‛துருக்கி’ இல்லை.. இனி ‛துர்க்கியே’.. அவரசமாய் பெயர் மாற்றியும் மாறாத நிலநடுக்க சோகவடு!பின்னணி

Subscribe to Oneindia Tamil

அங்காரா: நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடாக துருக்கி உள்ளது. இதற்கிடையே தான் ‛துருக்கி' நாட்டின் பெயர் கடந்த 2020ல் ‛துர்க்கியே'என அந்நாட்டு மக்களால் மாற்றப்பட்டது. இதற்கு ஐநா கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கியது. இந்த பெயர் மாற்றத்தின் பின்னணியில் முக்கிய நோக்கம் இருந்த நிலையிலும் கூட தற்போதும் அந்நாடு தொடர்ந்து சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் சோகம் மட்டும் இன்னும் மாறாத நிலையில் உள்ளது என அந்நாட்டு மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

துருக்கி.. குழப்பங்கள் கொண்ட நாடுகளில் ஒன்று. அங்காரா என்பது தலைநகராக உள்ள நிலையில் இஸ்தான்புல் என்பது மிகப்பெரிய நகராக உள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி துருக்கியில் மக்கள்தொகை என்பது சுமார் 8 கோடியே 52 லட்சத்து 79 ஆயிரத்து 553 ஆக இருந்தது.

தென்கிழக்கு ஐரோப்பா நாடுகளில் ஒன்றாக துருக்கி. இது கிரீஸ், பல்கேரியாவுடன் வடமேற்காக எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. ஐரோப்பா கண்டத்தில் இருந்தாலும் கூட துருக்கி ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கவில்லை. இதனால் சிலரால் மத்திய கிழக்கு நாடாகவும் அடையாளம் காணப்படுகிறது. இந்த நாட்டின் அதிபராக ரெசப் தாயிப் எர்டோகன் உள்ளார்.

தொடர்ந்து 3 நிலநடுக்கம்

தொடர்ந்து 3 நிலநடுக்கம்

இந்நிலையில் தான் நேற்று துருக்கியில் 3 சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கி- சிரியாவின் எல்லைப்பகுதியில் உள்ள துருக்கியின் காசியான்டெப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 5 மணிக்கு 7.8 ரிக்டரிலும், மாலையில் 2வதாக 7.5 ரிக்டரிலும், அதன்பிறகு 3வதாக ரிக்டரில் 6 என்ற அளவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. பெரிய பெரிய கட்டடங்கள் கண்இமைக்கும் நொடியில் தரைமட்டமாகின. துருக்கியில் 4 ஆயிரத்துக்கும் மேலானவர்கள் பலியாகி உள்ளனர். பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. தற்போது இந்தியா உள்பட உலக நாடுகள் துருக்கிக்கு உதவிக்கரம் நீட்ட தொடங்கி உள்ளன. மீட்பு படையினர், மருத்துவ குழுவினர் மற்றும் உணவு, மருந்து பொருட்களை அனுப்பி வைத்து வருகின்றனர்.

இஸ்தான்புல் நகருக்கு ஆபத்து

இஸ்தான்புல் நகருக்கு ஆபத்து

உலகில் அதிகளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நாடாக துருக்கி உள்ளது. இதற்கு அந்த நாடு அமைந்துள்ள நிலப்பரப்பு தான் முக்கிய காரணமாகும். இதனால் உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் துருக்கியும் உள்ளது. மேலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் இஸ்தான்புல் நகர் முழுமையாக கூட அழிய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் தற்போதைய சூழலில் துருக்கி நாட்டின் 95 சதவீத நிலப்பரப்பு நிலநடுக்க பாதிப்புக்கு உள்ளாகும் எனவும், 3ல் ஒருவர் நிலநடுக்கத்தால் பாதிப்புக்கு உள்ளாகலாம் எனவும் கூறப்படுகிறது.

பெயர் மாற்றத்துக்கான காரணம்

பெயர் மாற்றத்துக்கான காரணம்

இந்நிலையில் தான் துருக்கியின் சோகம் என்பது அந்த நாட்டின் பெயரை மாற்றியும் கூட விடவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதாவது ‛துருக்கி' (Turkey) நாடு தனது பெயரை ‛துர்க்கியே' (Turkiye) என மாற்றம் செய்ய விரும்பியது. Turkey என்பது ஆங்கிலத்தில் வான்கோழி என பொருள்படும். அதோடு மோசமான தோல்வி, முட்டாள் என்பதையும் இந்த வார்த்தை குறிக்கும். இதனால் துருக்கி மக்கள் தங்கள் நாட்டின் பெயரை மாற்ற முடிவு செய்தனர். 2020ல் இருந்தே துர்க்கியே (Turkiye) என அழைக்க தொடங்கினர். மேலும் துருக்கியில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்ள் மீது Made In Turkiye என எழுதி வைக்கப்பட்டது.

 ஐநா அங்கீகரித்தாலும் மாறாத சோகம்

ஐநா அங்கீகரித்தாலும் மாறாத சோகம்

அதன்பிறகு இந்த பெயரை உலக நாடுகள் அங்கீகரிக்க வழிவகை செய்யப்பட்டது. அதன்படி துருக்கிக்கு பதில் துர்க்கியே என தங்கள் நாட்டின் பெயரை அழைக்க அந்நாட்டு அரசு தீர்மானம் நிறைவேற்றி ஐநா ஒப்புதலுக்கு அனுப்பியது. இது கிடப்பில் இருந்த நிலையி்ல கடந்த ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதாவது துருக்கி நாட்டின் பெயரை துர்க்கியே என பெயர் மாற்ற ஐநா ஒப்புதல் வழங்கியது. தற்போது ஐநாவால் துருக்கி என்பது துர்க்கியே என அழைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பெயர் மாற்றியும் கூட அந்தநாடு நிலநடுக்கத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. கடந்த 1900 முதல் 2023 வரை சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்களை துருக்கி நாடு நிலநடுக்கத்தால் இழந்துள்ளது என்பது சோகமான விஷயமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+