For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வந்துவிட்டது பேஸ்புக் டேட்டிங் வசதி.. வெற்றிபெற்ற சோதனை.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?

பேஸ்புக்கில் டேட்டிங் வசதி செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

நியூயார்க்: பேஸ்புக்கில் டேட்டிங் வசதி செயல்பாட்டிற்கு வந்துள்ளது. தற்போது இதன் சோதனை வெற்றிகரமாக முடிந்து இருக்கிறது.

இன்னும் சில நாளில் இது இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும். பேஸ்புக்கில் டேட்டிங் செய்யும் வசதியை கடந்த சில வாரங்களுக்கு முன் அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் அறிமுகப்படுத்தினார்.

தற்போது இதை வைத்து விதவிதமான சோதனைகள் செய்து வருகிறார்கள். இன்னும் சில நாட்களில் எல்லா மக்களுக்கும் இது பயன்படும் வகையில் வெளியாகும்.

 வேலை ஆட்கள்

வேலை ஆட்கள்

தற்போது இந்த வசதியை, அமெரிக்காவில் உள்ள பேஸ்புக் தலைமையகத்தில், உள்ள பணியாளர்கள் சோதனை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு மட்டும் இந்த வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை 95 சதவிகிதம் வெற்றிபெற்றுவிட்டதாக கூறப்படுகிறது.

தனியாக கிடையாதா

அதேபோல் இந்த வசதியை முதலில் தனி ஆப்பாக வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தற்போது இதை தனி ஆப்பாக இல்லாமல் பேஸ்புக்கில் ஒரு கூடுதல் வசதியாக சேர்க்க இருக்கிறார்கள். அதன்படி பேஸ்புக் மூலமாகவே டேட்டிங் செய்ய முடியும். இது பேஸ்புக்கை இன்னும் பிரபலபடுத்தும்.

எப்படி

எப்படி

பேஸ்புக்கில் மொத்தம் 200 மில்லியன் பேர் காதலிக்காமல், திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள் என்று மார்க் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.அடுத்த பேஸ்புக் அப்டேட்டில், நம்முடைய புரொஃபைல் படத்திற்கு மேல் ஓரத்தில் ஒரு 'இதயம்' இருக்கும். அதை கிளிக் செய்தால், நம்முடைய ''டேட்டிங் ஹோம்'' என்ற பக்கம் திறக்கும். அதில் நாம் நமக்கு என்று புதிய புரொஃபைலை உருவாக்கிக் கொள்ள முடியும். இதன் மூலம் டேட்டிங் செய்ய முடியும்.

 வழிமுறை

வழிமுறை

இந்த பக்கத்தில் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், விழாக்கள் குறித்த தகவல் வெளியாகும். இதில் நமக்கு பிடித்த விழாக்களை நாம் தேர்வு செய்து கொள்ளலாம். நாம் செல்லும் விழாவிற்கு யாரெல்லாம் செல்ல இருக்கிறார்கள் என்று இதன் மூலம் பார்க்க முடியும். அதில் நமக்கு பிடித்த நபர்களுடன் பொதுவில் உரையாடலாம், தனியாகவும் உரையாடலாம். இதுதான் பேஸ்புக் டேட்டிங் ஆகும்.

English summary
Facebook Dating test runs successfully within the company. Facebook Dating has been successfully launched by Mark Zuckerberg. The details how it works has been released. It will be a fun one in the future.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X