இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
 • search

10 கோடி மதிப்புள்ள அழகிய ஓவியம்.. ஏலம் விடப்பட்டதும் கிழிக்கப்பட்டது.. ஏன் தெரியுமா?

FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  லண்டன்: சிறிய ஓவியம் ஒன்று லண்டனில் 10 கோடி ரூபாய்க்கு ஏலம் போய் உள்ளது. ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த ஏலம் முடிந்த அடுத்த நொடி அது சுக்குநூறாக கிழிக்கப்பட்டுள்ளது.

  லண்டனை சேர்ந்த ஓவியர் பாங்சி. இவர் தன்னுடைய அடையாளத்தை பல வருடமாக மறைத்து வருகிறார். இவர் பெயரும் கூட செல்லப் பெயர்தான்.

  மிகவும் பிரபலமான ஓவியரான இவர் லண்டனில் தனது ஓவியங்களை, தன்னுடைய குழு மூலம் ஏலம்விட்டு இருக்கிறார். உலக நாடுகளில் இருந்து பலர் இதை வாங்க வந்து இருக்கிறார்கள்.

  ஏலம்

  ஏலம்

  இதில் அவரது ஓவியம் ஒன்று 10 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. ''கேர்ள் வித் ரெட் பலூன்'' என்று ஓவியம் 10 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு இருக்கிறது. 2006ல் ஆயில் பெயிண்ட் மூலம் வரையப்பட்ட ஓவியம் ஆகும் இது.

  View this post on Instagram

  . "The urge to destroy is also a creative urge" - Picasso

  A post shared by Banksy (@banksy) on Oct 6, 2018 at 10:09am PDT

  உடனே கிழிக்கப்ட்டது

  ஆனால் ஏலம் முடிந்த அடுத்த நொடி, இந்த ஓவியம் சுக்குநூறாக கிழிக்கப்பட்டது. ஏலம் எடுக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட அடுத்த நொடியே, இந்த ஓவியம், அப்படியே கீழே இருந்த மிஷன் ஒன்றின் வழியே சென்று கிழிந்தது. கிழிக்கும் எந்திர ஒன்றின் வழியே சென்று கிழிந்துள்ளது.

  View this post on Instagram

  Going, going, gone...

  A post shared by Banksy (@banksy) on Oct 5, 2018 at 6:45pm PDT

  கிழிக்கப்பட்டது

  இதற்காக 2006 ஆம் ஆண்டே அந்த ஓவியத்துடன் ஒரு கிழிக்கும் எந்திரத்தை வைத்துள்ளார் ஓவியர் பாங்சி. இதில் 12 வருடமாக இயங்கும் பேட்டரி ஒன்றையும் வைத்துள்ளார். ஓவியம் விற்கப்பட்டவுடன் அதை ரிமோட் கன்ட்ரோல் வைத்து கிழித்துள்ளார்கள். இந்த ரிமோட்டை யார் இயக்கியது என்று யாருக்கும் தெரியாது.

  ஏன் இப்படி

  ஏன் இப்படி

  அழிவுதான் பெரிய கலை, பெரிய அரசியல் என்று ஓவியர் பாங்சி தெரிவித்துள்ளார். அதை மக்களுக்கு உணர்த்தவே இப்படி செய்ததாக அவர் கூறி இருக்கிறார்கள். இதை அவர் வீடியோவாகவும் வெளியிட்டு இருக்கிறார். இது விற்கப்பட்டவுடன் கிழிக்கப்பட வேண்டும் என்பதே நோக்கம் என்றும் கூறியுள்ளார்.

  என்ன நடக்கும்

  என்ன நடக்கும்

  இந்த நிலையில் இது ஏலம் எடுத்தவருக்கு கொடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்று பலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அவர் இதனால் வழக்கு தொடுக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால் வேறு சிலர், இப்போதுதான் இது அழகாக இருக்கிறது, இதை வாங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

  வரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்! - பதிவு இலவசம்!

  English summary
  Famous Banksy paintings shredded after went for $1.4 Million in action.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more