பாகிஸ்தானின் அணு ஆயுத தந்தை...பிறப்பால் இந்தியர்.. காதிர் கான் மரணம்
இஸ்லாமாபாத் : இந்தியாவில் கடந்த 1936ம் ஆண்டு பிறந்து பாகிஸ்தானுக்கு 1947ம் ஆண்டு குடிபெயர்ந்தவர் அப்துல் காதிர் கான் (85). இவர் அந்நாட்டின் அணு ஆயுதத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார் இவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார் இந்நிலையில் பாகிஸ்தான் மக்களுக்கு அப்துல் காதிர் கான் மிகப்பெரிய அடையாளம் என அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் புகழாராம் சூட்டி உள்ளார்.
ஆங்கியேர்களை பிரிக்கப்படாத இந்தியாவை ஆண்டு கொண்டிருந்தபோது, மத்தியப்பிரதேசம் தலைநகர் போபால் நகரில் கடந்த 1936ம் ஆண்டு பிறந்தவர் தான் ஏ.கியூ.கான் என்று அழைக்கப்படும் அப்துல் காதிர் கான். 1947ல் நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்தியா, பாகிஸ்தான் என இரணடு தேசங்களாக ஆங்கிலேயர்கள் பிரித்தனர். அப்போது மத்திய பிரதேசத்தில் இருந்து கான் குடும்பத்தினர் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தனர்.
டாக்டர் அப்துல் காதிர் கான் பாகிஸ்தானை அணுசக்தியாக மாற்றியவர். சுமார் 25 வருடங்கள் 1976 இல் தொடங்கி பல்வேறு பேரழிவு ஆயுதங்களை உருவாக்கினார். 1998ம் ஆணடு முதல் அணுகுண்டு சோதனையை நடத்தினார். இதனால் பாகிஸ்தான் அணு ஆயுதத்தின் தந்தையாக அப்துல் காதிர்கான் போற்றப்படுகிறார். அந்நாட்டு மக்களால் ஹீரோவாக கருதப்படுகிறார்.

வீட்டு சிறை
இந்நிலையில் அப்துல் காதிர் கான் தனதுஅணு ஆயுத ரகசியத்தை வடகொரியா, சீனா மற்றும் ஈரான் உள்பட சில நாடுகளுக்கு விற்றதாக அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ சந்தேகம் தெரிவித்தது. அந்த சூழலில் பாகிஸ்தானில் 2004ம் ஆண்டு ராணுவ ஆட்சி நடந்த சமயத்தில் அதிபர் முஷாரப்பால் அப்துல் காதிர் கான் வீ்ட்டுக் காவலில் வைக்கப்பட்டார். ஆனால் கடந்த 2009ம் ஆண்டு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், அப்துல் காதிர் கான் நாட்டுக்குள் எங்குவேண்டுமானாலும் சுதந்திரமாகச் செல்ல உரிமை உண்டு என தீர்ப்பு அளித்தது.

தாக்கும் வல்லமை
இதனிடையே 2016ம் ஆண்டு மே மாதம் அப்துல் காதிர் கான் அளித்த பேட்டியில் "பாகிஸ்தான் கடந்த 1984-ம் ஆண்டே அணுஆயுத நாடாக மாறியிருக்கும். ஆனால், அப்போது அதிபராக இருந்த ஜியா உல் ஹக் அந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். ராவல் பிண்டி நகலிருந்து வெறும் 5 நிமிடங்களில் டெல்லியை தாக்கி அழிக்க முடியும் அதற்கான வல்லமை பாகிஸ்தான் அணு ஆயுதத்துக்கு இருக்கிறது என்று கூறி அதிரவைத்தார். இவரது ககுதா ஆராய்ச்சிக் கூடம் ராவல்பிண்டி நகரில் உள்ள ககுதா எனும் இடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்குதான் யுரேனியம் செறிவூட்டலும் நடந்து வருகிறது.

உயிரிழப்பு
இந்நிலையில் உடல்நலக்குறைவு மற்றும் திடீர் மூச்சு திணறலால் அவதிப்பட்ட அப்துல் காதிர் கான் இன்று அதிகாலை கான் ஆராய்ச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை 7மணிக்கு உயிரிழந்தார். உயிரிழந்ததற்கு என்ன காரணம் என்பதை மருத்துவமனை தரப்பு விளக்கம் அளித்துள்ளது. அதில் "கானின் நுரையீரலில் ரத்தப் போக்கு ஏற்படத் தொடங்கியது. பின்னர் அவரின் உடல்நிலை படிப்படியாக மோசமடைந்து இறந்தார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசம் மறக்காது
அப்துல் காதிர் கான் மறைவு மறைவுசெய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன் என பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்வி வெளியிட்ட பதிவில் கூறினார். அப்துல் காதிர் கானை தனிப்பட்ட முறையில் கடந்த 1982்ம் ஆண்டு முதல் எனக்குஅவரைத் தெரியும் என்றும் தேசத்துக்கான அணு ஆயுதத் திட்டத்தை உருவாக்க உதவியவர், அவரின் சேவையை இந்த தேசம் மறக்காது என்றும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பெரிய அடையாளம்
டாக்டர் அப்துல் காதிர் கான் மறைவு செய்திகேட்டு மிகவும் துன்பப்பட்டேன் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். "தேசத்துக்கு அணு ஆயுதத்தை வடிவமைத்த கானின் சேவை தேசத்தால் விரும்பப்பட்டது, தேசமும் அவரை நேசித்தது. அணுஆயுதத்தைவிட பெரிய ஆக்ரோஷமான அண்டை நாட்டினரிடம் இருந்து பாதுகாக்க கானின் சேவை உதவியது. பாகிஸ்தான் மக்களுக்கு அப்துல் காதிர் கான் மிகப்பெரிய அடையாளம்" என இரங்கல் தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications