அகமதாபாத் போல லண்டனிலும் சோகம்! விமானம் டேக் ஆஃப் ஆன சில நொடிகளில் கீழே விழுந்து விபத்து
லண்டன்: லண்டன் சவுத்தெண்ட் விமான நிலையத்தில் விமான விபத்து ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பீச் கிராஃப்ட் சூப்பர் கிங் ஏர் ரக விமானம் இந்த விபத்தில் சிக்கியிருக்கிறது.
விமானத்தில் பயணித்தவர்கள் எத்தனை பேர்? உயிரிழப்புகள் எத்தனை என்பது மீட்பு பணிகளின் போது தான் தெரிய வரும். விமானம் ஓடுபாதையிலிருந்து, டேக் ஆஃப் ஆன கொஞ்ச நேரத்தில் தரையில் விழுந்து விபத்தில் சிக்கியுள்ளது. ஓடு பாதையிலிருந்து கொஞ்ச தூரத்தில் விமானம் விழுந்த இடத்தில் கரும் புகையும் நெருப்பும் மேலெழுவதை பார்க்க முடிகிறது. இத தொடர்பான வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்தியாவில், ஏர் இந்தியா விமானம் ஒன்று சமீபத்தில் அகமதாபாத்தில் விபத்தில் சிக்கியதில் 260 பேர் உயிரிழந்திருந்தனர். இதனையடுத்து உலகம் முழுவதும் விமான விபத்துக்கள் கவனம் பெற்று வருகின்றன.
ஒவ்வொரு முறை விமானங்கள் விபத்தில் சிக்கும்போதும், அதன் பாதுகாப்பு மேலும் மேலும் அதிகரிக்கப்படுகிறது. இருப்பினும் உலகம் முழுவதும் விமான விபத்துக்கள் குறையவில்லை.
சவுத்தெண்ட் விமான நிலையத்தில் நடந்த விபத்து குறித்து உள்ளூர் போலீசார் கூறுகையில், விபத்து மிகவும் கொடுமையானதாக இருந்ததாக தெரிவித்திருக்கின்றனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications