Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஃபிபா கால்பந்து.. புது ரசிகர்களை குழப்பி எடுக்கும் ஆப்ஸைட்! இது என்ன விதி.. சிம்பிள் விளக்கம் இதோ!

Subscribe to Oneindia Tamil

டோஹா: ஃபிபா உலகக் கோப்பை கத்தார் கால்பந்து தொடர் 2024 மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. தொடரின் தொடக்கத்தில் இருந்தே பல அதிர்ச்சிகரமான ட்விஸ்ட்கள் நடந்து வருகின்றன. இந்த தொடர் கவனம் பெற்றுள்ள நிலையில் மீண்டும் ஆப்சைட் என்றால் என்ன என்ற கேள்வி பலர் இடையே எழுந்துள்ளது.

முக்கியமாக புதிதாக கால்பந்து போட்டிகளை பார்க்க விரும்பும் பலருக்கும் இந்த குழப்பம் ஏற்பட்டு உள்ளது. வேகமாக வந்து ஒரு வீரர் கோல் போடுகிறார்.. எல்லோரும் ஓ என்று கத்துகிறார்கள்.. சரி கோல் போட்டாச்சு அந்த அணிக்கு பாயிண்ட்ஸ் கொடுக்கப்படும் என்று பார்த்தால் திடீரென கள நடுவர் ஆப் சைட் என்று கூறுவதை பலர் பார்த்து இருப்போம்.

கோல் போட்டாலும் ஆப்சைட் என்று கூறி கோல் இல்லை என்று கூறுகிறார்களே.. இது என்ன விதி என்ற குழப்பம் இருக்கலாம். பலருக்கும் ஆப்ஸைட் விதி மிகப்பெரிய மண்டை வலியை கொடுத்து இருக்கலாம். கிரிக்கெட்டில் இருக்கும் டக்வொர்த் லூயிஸ் முறை போல. அந்த குழப்பத்தை எளிதாக தீர்ப்பதற்குத்தான் இந்த கட்டுரை!

ஆப்ஸைட்

ஆப்ஸைட்

இது எல்லோரும் நினைப்பது போல மிகவும் குழப்ப கூடிய விதி கிடையாது. கீப்பர் கோல் போஸ்டில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். எதிரணி வீரர்.. புரிதலுக்காக மெஸ்ஸி என்று வைத்துக்கொள்வோம். மெஸ்ஸி தனி ஆளாக பந்தை எடுத்துக்கொண்டு கோலை நோக்கி வருகிறார். கோல் போஸ்ட் அருகே தன்னுடைய அணி ஆள் யாரும் கிடையாது. கோல் போஸ்ட் அருகே எதிரணி ஆளும் யாரும் கிடையாது. கோல் கீப்பர் மட்டுமே இருக்கிறார். இப்படி ஒரு சூழ்நிலையில் மெஸ்ஸி கோல் போட்டால் அது சோலோ கோல். இதில் எந்த தவறும் இல்லை.

 ஏன் குழப்பம்?

ஏன் குழப்பம்?

சரி இப்போது மெஸ்ஸி இப்படி கோல் போட போவதை வைத்துக்கொள்வோம். எதிரணி கீப்பர் கோல் போஸ்ட் அருகே இருக்கிறார். இப்போது மெஸ்ஸியின் அணியை சேர்ந்த இன்னொரு ஆள் எதிரணியின் கோல் போஸ்டுக்கு அருகில் இருக்கும் பெனால்டி பாக்ஸ் உள்ளே நிற்கிறார். இவர் மெஸ்ஸி அங்கிருந்து வீசும் பந்தை வாங்கி தூக்கி கோல் அடிக்கிறார். இப்படி செய்தால் அது ஆப்சைட். அதாவது ஏற்கனவே மெஸ்ஸி தனது டீம் ஆள் ஒருவரை எதிரணியின் பெனால்டி பாக்ஸ் எனப்படும் பாக்ஸுக்கு உள்ளே நிற்க வைத்து.

 என்ன விதி?

என்ன விதி?

அல்லது பாக்ஸுக்கு அருகே நிற்க வைத்து, மெஸ்ஸி பந்தை வீசி அவர் பாக்ஸுக்கு உள்ளே சென்று அதை பிடித்து கோல் போட்டால் அது ஆப்சைட். கோல் போடாத வரை ஆப்சைட் கிடையாது. உதாரணமாக பேஸ்கெட் பால் போட்டிகளில் நாம் பார்த்து இருப்போம். எதிரணி வீரர் ஒருவர் எப்போதும் தங்களின் போஸ்ட் பக்கத்திலேயே இருப்பார். எதிரணி சூட் செய்து பாயிண்ட் போட்டதும் சட்டென பந்தை பிடித்து எதிர் பக்கம் வீசி தன்னிடம் உள்ள ஆளை வைத்து பாயிண்ட்ஸ் எடுப்பார்கள். கால்பந்தில் இப்படி செய்ய முடியாது.

விளக்கம்

விளக்கம்

சரி அப்போது எப்படித்தான் கோல் போடுவது என்ற குழப்பம் உங்களுக்கு ஏற்படலாம். இப்போது அதே மெஸ்ஸி கதையை எடுப்போம். மெஸ்ஸி வேகமாக கோல் போட பந்தோடு ஓடுகிறார். அப்போது அவரின் அணி ஆள் ஒருவர் எதிரணியின் கோல் போஸ்டுக்கு அருகில் பெனால்டி பாக்ஸ் உள்ளே இருக்கிறார். இப்போது மெஸ்ஸியின் எதிரணி கோல் கீப்பரும் அங்குதான் இருப்பார். இன்னொரு எதிரணி வீரர் அங்கே இருந்தால் பிரச்சனை இல்லை.

 ஏன் முக்கியம்?

ஏன் முக்கியம்?

அதாவது குறைந்தபட்சம் கோல் கீப்பரோடு சேர்த்து இரண்டு எதிரணி வீரர்களாவது மெஸ்ஸி மற்றும் அவரது அணி வீரர்களை தடுக்க பாக்ஸுக்குள் இருக்க வேண்டும். கோல் கீப்பர் மட்டும் பாக்ஸுக்குள் இருந்தால் அது நியாயமாக இருக்காது. குறைந்தபட்சம் கோல் கீப்பரோடு சேர்த்து இரண்டு எதிரணி வீரர்களாவது மெஸ்ஸி மற்றும் அவரது அணி வீரர்களை தடுக்க பாக்ஸுக்குள் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அது ஆப்சைட் கிடையாது.

ரூல்ஸ் என்ன ?

ரூல்ஸ் என்ன ?

இந்த ரூல்ஸ் ஏன் இருக்கிறது என்றால் கால்பந்து போட்டிகளில் கோல் கீப்பரை இரண்டு எதிரணி வீரர்கள் அருகிலேயே நின்று குழப்பி கோல் போடுவதை தடுப்பதற்காக. அதோடு ஆட்டம் நியாயமாக இருக்க வேண்டும் என்பதற்காக. இது இல்லை என்றால் பெனால்டி பாக்சில் இரண்டு பேர் நின்று கொண்டு ஒருவர் கோல் கீப்பரை தன் பக்கம் வர வைத்து திடீரென பாலை அந்த பக்கம் பாஸ் செய்து தனது சக வீரர் மூலம் கோல் அடிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதை தடுக்கவே இந்த விதிமுறையை கொண்டுவந்துள்ளனர் .

பெனால்டி பாக்ஸ்

பெனால்டி பாக்ஸ்

அதிலும் ஒரு அணி வீரர் எதிரணியின் பெனால்டி பாக்ஸ் உள்ளே செல்கிறார் என்றால், அவருடைய அணி வீரர் அப்போது பந்தை ஆக்டிவாக வைத்து இருக்க வேண்டும். அப்போதுதான் அது ஆப்ஸைட். ஆனால் அதுவே எதிரணியின் காலில் பால் இருந்தால் அது ஆப்சைட்டாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. இதுதான் சிம்பிள் ரூல். சரியாக சொல்ல வேண்டும் என்றால் விளையாட்டு நியாயமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த விதி கொண்டு வரப்பட்டு உள்ளது. புதிதாக கால்பந்து பார்க்கும் பலருக்கு இந்த குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இது போன்ற ஆப்ஸைட் தவறு நடக்கும் பட்சத்தில், தவறு நடந்த இடத்தில் இருந்து எதிரணிக்கு ஒரு indirect free kick நடுவரால் கொடுக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+