அமெரிக்காவில் தமிழர்களுக்காக நடத்தப்படும் முதல் தமிழ் ஒளிபரப்பு சேனல் தமெரிக்கா டிவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: நமக்கெல்லாம் "அமெரிக்கா" தெரியும், இங்கே நியூயார்க் நகருக்கு மதுரையில் இருந்து வந்தவர் நம் தமிழருக்காக நடத்தும் வெற்றிகரமான தமிழ் சேனல் ஒளிபரப்புதான் "தமெரிக்கா டிவி (tamericaTV)" மஹேஷ் இந்த தமிழ் ஒளிபரப்பு சேனலை அமெரிக்காவில் நிறுவி, பல்வேறு சுவையான நிகழ்ச்சிகளை நமக்கு வழங்கிவருகிறார்.

இவர் ஒரு பன்முகவித்தகர், இசை, கதை, கவிதை, சினிமா என தன்னைஅமைத்துக்கொண்டுள்ளதால் அதன்மேல் உள்ள தீராத காதலால், மக்களுக்கு மிகவும் விருப்பமான பொழுது போக்கு நிகழ்ச்சிகளை தமெரிக்கா டிவி மூலம் நமக்கு வழங்கி வருகிறார்.

 First Tamil Broadcast Channel for Tamils in America

மேலும், கருத்தாழம்மிக்க சிறுமற்றும் குறு படங்களை தயாரித்து வெளியிடுகிறார். மதுரைக்கு புகழ் சேர்ப்பவை, மீனாட்சி அம்மன் கோயில், மரியாதை மிகுந்த எந்நேரமும் உழைக்கும் மக்கள் மற்றும் மனதை மயக்கும் வாசம் மிகுந்த அடர்த்தியான மல்லிகைப்பூ , ஒருவேளை அந்த மண்ணில் இருந்து வந்தாலோ என்னவோ அவருக்கும் அனைவரிடத்திலும் ஒரு அன்பான வாஞ்சையான தொடர் நட்பு அவரின் வெற்றிக்கு வித்தாகிவிட்டது.

தமெரிக்கா டிவி, அமெரிக்காவின் முதல் தமிழ் ஒளிபரப்பு சேனல்.மக்களுக்கு மிகவும் விருப்பமான நிகழ்ச்சிகளை வழங்குவதில் இந்த சேனல் முதன்மை பெறுகிறது என்றால் அது மிகையாகாது. அமெரிக்காவில் நடக்கும் பல சுவாரஸ்யமான தகவல்கள் பற்றி "அமெரிக்காவில் இந்தவாரம்", அமெரிக்கா நகரங்களை பற்றி "எங்கஏரியா", அமெரிக்காவில் இருக்கும் கோவில்கள் பற்றி "அமெரிக்க ஆலயங்கள்", அமெரிக்காவில் சாதித்த தமிழர்களை பற்றி "ரைசிங்ஸ்டார்ஸ்",அமெரிக்கவில் இருக்கும் தமிழ் டாக்டர்களிடம் பல நோய்களை பற்றி நேர்காணல் " இட்ஸ்மெடிக்கல்மிரகில்", கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரைக்கும் நடக்கும் சுவையான சினிமா தகவல்கள் "தமெரிக்கா டாக்கீஸ்", அமெரிக்காவில் இருக்கும் தன்னார்வர்களுடன் நேர்காணல் "அறம் செய்ய விரும்பு", அமெரிக்காவில் இருக்கும் தமிழ் தொழில் அதிபர்களுடன் நேர்காணல் "Money மே(கிங்)கலை", இசைபிரியர்களுக்கு "ஒரு Song ப்ளீஸ்" என பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவதால் ஒவ்வொன்றிற்கும் தனித் தனியாக ரசிகர்கள் கூட்டம் குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை என அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. அரசியல் நிகழ்வா? சினிமா நிகழ்வா? பொதுநிகழ்வா? விளையாட்டு நிகழ்வா? ஆன்மீக நிகழ்வா? மருத்துவ நிகழ்வா? என அனைத்து பகுதி நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்படுவது இந்தசேனலின் சிறப்பம்சம்.

நம் அனைத்து இசைஞானி இளையராஜாவின் ரசிகர்ளை இணைக்கும் அவரின் பிறந்தநாள் இசை நிகழ்ச்சியாக தொகுத்து அளித்தது மிகவும் அருமை மற்றும் மறக்க இயலாத நிகழ்வு. ஒவ்வொரு நிகழ்ச்சியும், நிகழ்ச்சி நிரல்படி நன்கு தொகுத்து வழங்குவதால் அதன் முழுமை தன்மைநன்கு காப்பாற்றப்படுகிறது. மேலும், அமெரிக்கா மாகாணங்களிலும் வெளி நாடுகளிலும் ஆங்காங்கே நடைபெறும் நிகழ்வுகள்அவ்வப்போது சரியான சமயத்தில் ஒளிபரப்பப்படுவதால் நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகள் நமக்கு உடனடியாக வந்து சேர்ந்து விடுகிறது.

ஜல்லிக்கட்டு போராளிகள் மற்றும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவை குடுத்து நடந்த நிகழ்வுகளை பல மாகாணங்களில் இருந்து ஒளிபரப்பினார்கள் அமெரிக்காவில் இருக்கும் பல தமிழ்சங்கம், தமிழ் பள்ளிக்கூடம் மற்றும் கோவில்களில் நடக்கும் நிகழ்வுகள் உடனடியாக ஒளிபரப்புகிறார்கள், அதற்கான நல்ல முயற்சிகளுக்கு நாம் பாராட்டியே தீரவேண்டும். இவர்களின் பணி மென்மேலும் சிறந்து விளங்க வேண்டும் என்று வாழ்த்துவோம்.

புதிய உணவுப்பண்டங்களின் செய்முறைகளை சுவைபட செய்வதற்காக "செஞ்சிருவோம்" என்று ஒரு நிகழ்ச்சி நிச்சயம் நம் குடும்ப மகளிர்க்கு பிடிக்கும், அப்படின்னா நமக்கும் புதுதின்பண்டங்கள் கிடைக்கும். சுவையான நேரடி பேட்டி மற்றும் சூடான விவாதங்கள் என சரவெடி நிகழ்ச்சிகள் உண்டு. புதிய மற்றும் பழைய பாடல் ஒளிபரப்பு எல்லோருக்கும் எப்போதும் பிடித்தமான ஒருநிகழ்ச்சி.

காமெடி, கிண்டல், கலாட்டா என இளமைத்தும்பும் தமெரிக்கா டிவி ஒரு முழுநேர பொழுதுபோக்கு சேனல் நம் தமிழர்களுக்கு கிடைத்த ஒரு விருந்து. அமெரிக்காவில் இருக்கும் தமிழர்களை ஊக்கிவிப்பதற்கு tamerica TV நீங்கள் பாடியோ, ஆடியோ, சமைத்தோ இல்லை கூறும்படம் எடுத்து எங்கள் சேனல்ளுக்கு contact@tamerica.tv அனுப்பினால் நன்றாக இருக்கும்பட்சத்தில் கண்டிப்பா உங்கள் வீடியோவை ஒளிபரப்புவோம். சிறுதொழில் மற்றும் மிட்சைஸ் தொழில் செய்பவர்கள் உங்கள்ப்ரோடுக்ட் ஓர் சர்வீசஸ் அமெரிக்க தமிழர்களிடம் கொண்டு செல்ல எங்கள் சேனல் மூலம் sponsor செய்ய contact@tamerica.tv க்கு அணுகவும்.

- கணேஷ்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamerica TV is the First Tamil Broadcast Channel for Tamils in America
Please Wait while comments are loading...