பிரபாகரன், மனைவி, மகளுக்கு 15 ஆண்டுக்குப் பின் முதல் முறையாக வீரவணக்க நிகழ்வை நடத்திய சகோதரர்!
கோபன்ஹேகன்: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவரது மனைவி மதிவதினி, மகள் துவாரகா, மகன்கள் சார்லஸ் ஆண்டனி, பாலச்சந்திரன் ஆகியோருக்கு முதல் முறையாக வீரவணக்க நினைவு நிகழ்வை அவரது சகோதரர் குடும்பத்தினர் டென்மார்க்கில் நடத்தினர். இந்த நிகழ்வில் தமிழர்கள் பெருந்திரளாக பங்கேற்று பிரபாகரன் குடும்பத்தினருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்தியது. இலங்கையில் ஆயுதம் போராட்டம் நடத்திய பல விடுதலை அமைப்புகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பலமானதாக இருந்தது. இலங்கை அரசுக்கு எதிராக 40 ஆண்டுகளாக தொடர்ந்து யுத்தம் நடத்திய விடுதலைப் புலிகள் இயக்கம் 2019-ம் ஆண்டு மே 18-ந் தேதி முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் அழிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் ஈழத் தமிழர்கள் 2 லட்சம் பேர் இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும் வீர மரணம் அடைந்தார் என கூறப்பட்டது. ஆனால் இதனை உலகத் தமிழர்களில் ஒரு தரப்பினர் ஏற்காமல் இருந்தனர்.

தமிழ்நாட்டில் கூட, பிரபாகரன் இன்னமும் உயிரோடு இருக்கிறார்; மனைவி, மகள் உள்ளிட்டோர் உயிருடன் இருக்கின்றனர் என நெடுமாறன் உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர். அத்துடன் பிரபாகரன் மகள் துவாரகா என அழைத்துக் கொண்ட பெண் ஒருவர், நவம்பர் மாதம் மாவீரர் நாள் உரையற்றி இருந்தார். பின்னர் அந்த பெண் துவாரகா இல்லை உறுதியானது.
இந்த நிலையில் 2009-ம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக பிரபாகரன் குடும்பத்தினருக்கு அவரது சகோதரர் மனோகர் தலைமையில் வீரவணக்க நினைவு நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. மே 18-ந் தேதி ஒவ்வொரு ஆண்டும் முள்ளிவாய்க்காலில் வீரமரணம் அடைந்த விடுதலைப் புலிகள், ஈழத் தமிழ் பொதுமக்களுக்கு உலகத் தமிழர் அஞ்சலி செலுத்தும் வகையில் வீரவணக்க நிகழ்வுகள், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படும். இம்முறை பிரபாகரன் குடும்பத்தினருக்கு வீரவணக்க நினைவு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

டென்மார்க்கின் DGI HUSET VEJLE என்ற இடத்தில் பிரபாகரன் குடும்பத்தினருக்கான 15 ஆண்டுகளுக்குப் பின்னர் முதலாவது வீரவணக்க நிகழ்வு நடத்தப்பட்டது.
இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியிலும் ஈழத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு உயிரிழந்த உறவுகளுக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications