அமெரிக்க பள்ளியில் 17 பேரை சுட்டு கொன்ற திக், திக் சம்பவத்தை செல்போன்களில் படமெடுத்த மாணவர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 17 பேர் பலி

  வாஷிங்டன்: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள உயர்நிலை பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தை மாணவர்கள் மொபைல் போன்களில் பதிவு செய்துள்ளனர். அவை வைரலாகியுள்ளன.

  புளோரிடாவின் ப்ரோவார்ட்கவுண்டியிலுள்ள ஸ்டோன்மேன் டக்லஸ் பள்ளிக் கூடத்தில் திடீரென துப்பாகி சூடு சப்தம் கேட்டது. இதையடுத்து மாணவர்கள் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

  உள்ளே சிக்கிய 17 மாணவர்கள் துப்பாக்கி குண்டுக்கு இரையாகினர். 30000 மாணவர்களை கொண்ட பெரிய பள்ளி இதுவாகும்.

  சக்தி வாய்ந்த துப்பாக்கி

  சக்தி வாய்ந்த துப்பாக்கி

  துப்பாக்கியால் சுட்ட கொடூரனின் பெயர் நிகோலஸ் டி ஜீசஸ் க்ரூஸ் ஆகும். ஏஆர்-15 வகை சக்தி வாய்ந்த ஃரைபிளை வைத்து இந்த தாக்குதலை அவன் நடத்தியுள்ளான். காவல்துறையினர் அவனை துப்பாக்கி முனையில் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். இதனிடையே நடந்த கொடூர சம்பவங்களை சில மாணவ, மாணவிகள் செல்போன் அல்லது லேப்டாப்பில் பதிவு செய்து அவற்றை சோஷியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

  ஆசிரியர்கள் ஓடினர்

  ஆசிரியர்கள் ஓடினர்

  மிலன் பரோடி என்ற 15 வயது மாணவி நடந்த சம்பவம் குறித்து கூறுகையில், துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும், மாணவர்கள் அச்சத்தில் ஓடினர். நான் பள்ளிக்கு வெளியே ஓடி வந்தேன். ஆசிரியர்களும் அச்சத்தோடு ஓடினர். ஆசிரியர்கள் இப்படி ஓடியதை நான் முதல் முறையாக இப்போதுதான் பார்த்தேன். இதனால் எனக்கு பயம் அதிகரித்தது. எனது சகோதரன் ரோமன், பள்ளி வகுப்பறையொன்றில் மறைந்து கொண்டான்.

  சகோதரன் படம்

  அந்த வகுப்பறைக்குள் பிற மாணவர்கள் சுட்டு கொலை செய்யப்பட்டதை ரோமன் எனக்கு அனுப்பி வைத்தார். இதேபோல பல மாணவர்களும் சம்பவத்தை படம் பிடித்துள்ளனர் என்றார் மிலன். இதுபோன்ற வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் மாணவர்களால் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் துப்பாக்கி சத்தம், மாணவர்கள் அலறல் சத்தம் போன்றவை கேட்கிறது.

  தப்பிய வழி

  தப்பிய வழி

  மிலனின் தோழி ஒருவர் கூறுகையில் "நான் ஏறத்தாழ இறந்துவிட்டேன் என்றுதான் நினைத்தேன். ஆனால் வேறு ஒரு சடலத்தை மேலே தூக்கி போட்டு கீழே படுத்து துப்பாக்கி குண்டில் இருந்து உயிர் தப்பினேன்" என்று கூறியுள்ளார். 2012ம் ஆண்டு சாண்டே ஹூக்கில் நடைபெற்றதற்கு பிறகு அமெரிக்காவில் நடைபெற்ற மிகப்பெரிய துப்பாக்கி சூடு சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Florida—A gunman killed 17 people at a south Florida high school. Throughout the school, students recorded the shooting on their phones and uploaded the harrowing footage to social media.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற