Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இந்தியாவுக்கு 50% வரி.." டிரம்ப்பை தொடர்ந்து மற்றொரு முக்கிய நாடும் தடாலடி அறிவிப்பு! பெரிய சிக்கல்

Subscribe to Oneindia Tamil

மெக்சிகோ: அமெரிக்கா அதிபர் டிரம்ப் இந்தாண்டு தொடக்கத்தில் உலகின் பல்வேறு நாடுகள் மீதும் இறக்குமதி வரிகளை அறிவித்தார். அதன்படி இப்போது இந்தியா மீது 50% வரி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அமெரிக்காவைப் போலவே மெக்சிகோவும் இப்போது இந்தியா மீது வரி அறிவித்துள்ளது. இந்தியா உட்பட வர்த்தக ஒப்பந்தம் இல்லாத நாடுகளில் இருந்து வரும் பொருட்களுக்கு 50% வரியை மெக்சிகோ அறிவித்துள்ளது.

இந்தாண்டு தொடக்கத்தில் அமெரிக்க அதிபரானது முதலே டிரம்ப் ஏகப்பட்ட குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார். அதில் முக்கியமானது தான் இறக்குமதி வரி. உலக நாடுகள் மீது டிரம்ப் இறக்குமதி வரிகளை அறிவித்திருந்தார். முதலில் கடந்த ஏப்ரல் மாதம் இந்த வரிகள் அறிவிக்கப்பட்டன. பிறகு சில காரணங்களால் வரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஆகஸ்ட் மாதம் வரிகள் அறிவிக்கப்பட்டன.

Following to USA Mexico Slaps 50 Tariffs on Indian Imports to Please Trump Autos amp amp Steel Hit hard

அமெரிக்கா வரி

இந்தியாவுக்கு டிரம்ப் 50% வரிகளை அறிவித்துள்ளார். ரஷ்யா கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குவதாகக் குறிப்பிட்ட புதின், உக்ரைன் போர் தொடர இதுவே காரணம் என சொல்லி இந்தியாவுக்கு வரிகளை அறிவித்தார். இந்த 50% வரியால் இந்தியா அமெரிக்கா வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டிற்கு அங்குச் செல்லும் சரக்குகள் எண்ணிக்கை கடுமையாகச் சரிந்தன.

மெக்சிகோ

இந்தச் சூழலில் அமெரிக்காவைத் தொடர்ந்து மற்றொரு நாடும் இந்தியா மீது வரிகளை அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்குத் தெற்கே அமைந்துள்ள மெக்சிகோ நாட்டிலும் இந்தியா மீது வரிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி சீனா உட்படப் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரிகளை விதிக்க மெக்சிகோ நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

வரும் 2026 ஜனவரி 1ம் தேதி முதல் இந்த வரி அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ நாட்டுடன் எந்த நாடுகளுக்கு எல்லாம் வர்த்தக ஒப்பந்தம் இல்லையோ.. அந்த நாடுகளில் இருந்து வரும் வாகனங்கள், வாகனப் பாகங்கள், ஜவுளி, பிளாஸ்டிக், ஸ்டீல் போன்ற பொருட்களுக்கு 50% வரை வரி விதிக்கப்படும். இதனால் இந்தியா, தென் கொரியா, சீனா, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகள் பாதிக்கப்படும்.

எதற்காக

உள்நாட்டுப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கவே இந்த வரியை விதித்துள்ளதாக மெக்சிகோ அதிபர் கூறுகிறார். இருப்பினும், டிரம்பின் அச்சுறுத்தலுக்குப் பயந்தே வரிகளை வித்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். கடந்த சில வாரங்களாக, மெக்ஸிகோ ஸ்டீல் மற்றும் அலுமினியப் பொருட்களுக்கு 50% இறக்குமதி வரி விதிக்கப்படும் என டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். மேலும், இந்த வாரத் தொடக்கத்தில் அமெரிக்க விவசாயிகளுக்கு நீர் அணுகலை வழங்கும் ஒப்பந்தத்தை மெக்சிகோ மீறியதாகச் சொல்லிக் கூடுதலாக, 5% வரி விதிப்பேன் என்று டிரம்ப் விடுத்துள்ளார். எனவே, டிரம்பை மகிழ்விக்கவே மெக்சிகோ இந்த வரிகளை விதித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

என்ன நடக்கும்

வரி விதிப்பால் உள்நாட்டில் உற்பத்தி உயரும் என்றே இவர்கள் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் அதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. மேலும், தொழிற்சாலையை அமைத்து உற்பத்தியை ஆரம்பிப்பது ஓவர்நைட்டில் நடந்துவிடாது. அதற்குக் குறைந்தபட்சம் சில ஆண்டுகளாவது ஆகும். எனவே, அதுவரை அதிக விலைக்கே பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டி இருக்கும். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது சம்பந்தப்பட்ட நாட்டு மக்கள் தான். அமெரிக்காவிலேயே பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்துவிட்டதாக அந்த நாட்டு மக்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.!

இந்தியாவுக்கு பாதிப்பு?

இந்த வரி இந்தியா அமெரிக்கா வர்த்தக உறவுகளைப் பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024ல் இந்திய-மெக்சிகோ இருதரப்பு வர்த்தகம் $11.7 பில்லியன் என்ற புதிய உச்சத்தை எட்டி இருந்தது. இந்தியா வர்த்தக உபரியைக் கொண்டிருக்கும் ஒரு சில நாடுகளில் மெக்சிகோவும் ஒன்று! அதாவது மெக்சிகோவில் இருந்து இந்தியாவுக்கு வரும் பொருட்களை விட நாம் மெக்சிகோவுக்கு அனுப்பும் பொருட்கள் அதிகம். அந்நிய செலாவணிக்கு இது ரொம்பவே முக்கியம்.

2024ல் இந்தியாவில் இருந்து மெக்சிகோவுக்கு $8.9 பில்லியன் பொருள் அனுப்பப்பட்ட நிலையில், மெக்சிகோவிலிருந்து இந்தியாவுக்கு $2.8 பில்லியன் பொருட்கள் மட்டுமே வந்தது.! மோட்டார் கார்கள், வாகன உதிரி ப்பாகங்கள் ஆகியவை இந்தியாவில் இருந்து மெக்சிகோவுக்கு அதிகம் செல்கிறது. இப்போது மெக்சிகோ வரியை அறிவித்துள்ளதால் இந்திய வர்த்தகர்களுக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+