For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெகாசஸ்.. குற்றச்சாட்டு எழுந்ததால் பிரான்ஸ் அரசு அதிரடி.. விசாரணை ஆரம்பம்

Google Oneindia Tamil News

இஸ்ரேலின் "பெகாஸஸ்" உளவு மென்பொருளைப் பயன்படுத்தி, தங்களுக்கு எதிரானவா்களை பிரான்ஸ் அரசு உளவு பாா்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

பெகாஸஸ் ஸ்பைவேர் பயன்படுத்தி, பிரான்ஸில் செய்தியாளா்கள், மனித உரிமை ஆா்வலா்கள், எதிா்க்கட்சியினா் ஆகியோரது மொபைல் போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிபர் இம்மானுவேல் மெக்ரான் செல்போனும் இதில் தப்பவில்லையாம். சர்வதேச மீடியாக்களில் இது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

France launches probe into Pegasus spying issue

இந்தியாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, 2 மத்திய அமைச்சர்கள், பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோர் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இருப்பினும் மத்திய அரசு தாங்கள் அதுபோல உளவு பார்க்கவில்லை என விளக்கம் அளித்துள்ளது, விசாரணைக்கு உத்தரவிடவில்லை.

அதேநேரம், பிரான்சில் தனிநபா் ரகசியத் தகவல்கள் பாதுகாப்பு மீறப்பட்டுள்ளதா, தகவல்கள் சட்டத்துக்குப் புறம்பாகப் பயன்படுத்தப்பட்டனவா, சட்டவிரோதமாக விற்பனை நடைபெற்றதா என விசாரணை நடைபெறும் என்று பிரான்ஸ் அரசின் நீதி அமலாக்கத் துறை அலுவலகம் அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி, இந்தியா உள்ளிட்ட 50 நாடுகளில் அந்த நாடுகளின் அரசுக்கு எதிரான 1000த்திற்கும் மேற்பட்டவா்களின் மொபைல்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளன. 2019ல் நடைபெற்ற இந்த சம்பவம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறிப்பிட்ட இந்த சாப்ட்வேர், அரசு கேட்டால் மட்டும்தான் வழங்கப்படுமே தவிர தனி நபர்களுக்கு தரப்படாது என்பதால், அரசு மீது குற்றச்சாட்டு எழுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The cellphones of French President Emmanuel Macron and 15 members of the French government may have been among potential cyber attack using Pegasus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X