ப்பா.. எவ்ளோ பெருசு.. இப்பவே கண்ணைக் கட்டுதே.. வைரலான ‘ராட்சச’ கொசுவின் புகைப்படம்!
ராட்சச கொசு ஒன்றின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
புவெனஸ் ஐரிஸ் : அர்ஜெண்டினாவைச் சேர்ந்த ஒருவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள மாபெரும் கொசுவின் புகைப்படம் நெட்டிசன்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஊடகங்களை விட சமூகவலைதளங்களில் வெளியாகும் தகவல்கள் விரைவில் வைரலாகி விடுகின்றன என்றுதான் சொல்ல வேண்டும். அந்தவகையில் தற்போது ராட்சச கொசு ஒன்றின் புகைப்படம் வைரலாகி இருக்கிறது.

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த எசுவேல் லோபோ என்பவர் அந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவரது வீட்டு ஜன்னல் வழியே அந்த கொசு உள்ளே வந்ததாகவும், அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய் கொசு மருந்து அடித்து அதனைக் கொன்றதாகவும் அப்பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தக் கொசுவின் உருவத்தை வெளிக்காட்டும் வகையில், அதன் அருகிலேயே சாதாரண கொசு ஒன்றையும் வைத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார் எசுவேல். அதில் சாதாரண கொசுவின் அருகில் இருக்கும் அந்த கொசு ராட்சச தனத்துடன் காட்சி அளிக்கிறது.
இந்தப் புகைப்படத்தைப் பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான கமெண்டுகளையும், லட்சக்கணக்கான லைக்குகளையும் அள்ளி வருகிறது அந்த கொசு புகைப்படம்.
வெள்ளத்திற்குப் பிறகு வரும் அரிய வகை கொசு இது என பூச்சி வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கொசு கடித்தால் வலி அதிகமாக இருக்கும் என்றும், ஆனால் நோய் பாதிப்பு எதுவும் இருக்காது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications