உச்சக்கட்டத்தில் போர்.. இஸ்ரேல் தாக்குதலால் அலறும் லெபனான்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
டெல்லி: லெபானான் மீது இஸ்ரேலின் தாக்குதல் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், லெபனானில் உள்ள இந்தியர்கள், கப்பல் மூலமாகவோ, விமானம் மூலமாகவோ உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கும்-பாலஸ்தீனத்திற்கும் இடையே இருந்த போர் தற்போது, லெபனான் நோக்கி நகர்ந்திருக்கிறது. இந்த போருக்கான தொடக்கமும் முடிவும், அமெரிக்கா கையில்தான் இருக்கிறது.

இரண்டாம் உலகப்போர் காலத்தில் அடைக்கலம் தேடி மத்திய கிழக்கு பகுதிக்கு வந்தவர்கள்தான் ஜியோனிஸ்ட்டுகள் எனப்படும் இஸ்ரேலியர்கள். மத்திய கிழக்கு முழுவதும் இஸ்லாம் பரவி இருக்க, இவர்கள் மட்டும் மாற்று மதத்தினராக இருந்தனர். இவர்களை பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியில் அமெரிக்காவும், பிரிட்டனும் தங்க வைத்தது. இனி இதுதான் உங்கள் நாடு என்றும் சிறிய நிலப்பரப்பை ஜியோனிஸ்ட்டுகளுக்கு பிரித்து கொடுத்தது. இந்த சிறிய நிலப்பரப்புக்கு இஸ்ரேல் என்று பெயரிடப்பட்டது.
ஆனால் அப்போது தொடங்கி இப்போது வரை, இஸ்ரேல் பெரிய அளவுக்கு விரிவடைந்திருக்கிறது. பாலஸ்தீனத்தின் பெரும்பாலான பகுதியை இஸ்ரேலாக மாற்றப்பட்டது. இதுதான் இன்று நடக்கும் போருக்கு தொடக்கப்புள்ளி. ஜியோனிஸ்ட்டுகளின் ஆட்சியாளர்களாக இருந்தவர்கள் மேலும் தங்கள் நாட்டின் பரப்பை விரிவுப்படுத்த முயல, அதற்கு பாலஸ்தீன மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்த எதிர்ப்பில் உருவான ஆயுதம் தாங்கிய குழுதான் ஹமாஸ்.
கடந்த அக்டோபர் மாதம் ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 1500க்கும் அதிகமானவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. ஆனால், இறந்தவர்களின் சடலங்கள் தொடர்பாக எந்த புகைப்படமும் பொதுவெளியில் பகிரப்படவில்லை. இப்படி இருக்கையில், இதனை காரணமாக வைத்துக்கொண்டு மிச்சம் மீதமிருக்கும் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. இதில் இதுவரை 41 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
லட்சக்கணக்கான மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர். குழந்தைகளும், கர்ப்பிணிகளும், முதியோரும் நோய் தொற்று அபாயத்தில் இருக்கிறார். போரின் தீவிரம் குறையவில்லை. ஒரு கட்டத்தில் இந்த தாக்குதலை பார்த்து 'ஹிஸ்புல்லா' அமைப்பு கொதித்து எழுந்தது.
இது ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸுக்கு சப்போர்ட் செய்யும் அமைப்பாகும். தற்போது லெபனானிலிருந்து இயங்கி வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக, ஹமாஸுடன் கைகோர்த்து ஹிஸ்புல்லா களத்தில் இறங்க.. இஸ்ரேல் கொஞ்சம் தடுமாறியது. இருப்பினும் அமெரிக்க உதவியால் சுதாரித்துக்கொண்ட அந்நாடு, தற்போது லெபனான் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது.
பேஜர், வாக்கி டாக்கி என சைபர் தாக்குதல் நடத்திய இஸ்ரேல், போர் விமானங்களை கொண்டு நேரடி தாக்குதலிலும் இறங்கியது. இதில் 600க்கும் அதிகமான லெபனான் மக்கள் உயிரிழந்தனர். இப்படியே விட்டா.. மத்திய கிழக்கு முழுவதும் போர் தீவிரமடையும் என்று உணர்ந்த ஐநா, உடனடியாக இது குறித்து விவாதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டியது. ஆனால் இப்போது வரை இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தவில்லை.
இப்படி இருக்கையில், லெபனானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. லெபனானில் உள்ள இந்திய தூதரகம் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications