தொடர் எரிமலை வெடிப்பு.. புதிதாக உருவான நிலப்பரப்பு.. ஹவாய் தீவின் வரைபடமே மாறியது!
ஹவாய் தீவில் வெடித்த எரிமலை காரணமாக அங்கு புதிய நிலப்பரப்பு உருவாகி உள்ளது.
ஹவாய்: ஹவாய் தீவில் வெடித்த எரிமலை காரணமாக அங்கு புதிய நிலப்பரப்பு உருவாகி உள்ளது. இதனால் அந்த தீவின் வரைபடம் மாற்றப்பட உள்ளது.
மத்திய பசுபிக் கடல் அருகே இருக்கும் அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான ஹவாய் எரிமலை வெடிப்பு நிகழந்து வருகிறது. கடந்த இரண்டு வாரமாக எரிமலை தொடர்ந்து வெடித்துக் கொண்டுள்ளது.
ஹவாய் தீவில் உள்ள கிலாயூ என்ற எரிமலைதான் இப்படி வெடித்தது. இந்த ஒரு எரிமலை மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 13 முறை வெடித்துள்ளது.

பல கோடி ஏக்கர்
இந்த தொடர் வெடிப்பு காரணமாக அங்கு ஊர் முழுக்க எரிமலை குழம்பு பரவி இருக்கிறது. இதனால் பல லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு அங்கு எரிந்து நாசமாகி உள்ளது. எரிமலை மொத்தமாக வெடித்த காரணத்தால் மக்கள் அவர்கள் இருந்த பகுதியைவிட்டு வெளியேறினார்கள். மக்கள் வசிப்பிடத்தை நோக்கி இந்த எரிமலை குழம்புகள் வந்துள்ளது. மக்கள் வெளியேறும் பகுதியையும் எரிமலை குழம்பு மூடி விட்டது.ஆனால் 70 சதவீத மக்கள் ஏற்கனவே தீவை காலி செய்துவிட்டார்கள்.

கிலாயூ வரலாயூர்
1975ல் இருந்தே இந்த தீவில் எரிமலை வெடிக்கும் நிலையில் இருந்தது. முக்கியமாக கிலாயூ என்ற எரிமலைதான் அதிக வீரியத்துடன் காணப்பட்டது. தற்போது இந்த எரிமலைதான் வெடித்துள்ளது. அந்த வகையில் கிலாயூ எரிமலை இரன்டு வாரம் முன்பு வெடித்தது. இதுவரை 300 க்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளது. 50000 பேர் வரை வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் பலர் மரணம் அடைந்துள்ளனர்.

புதுசு
இந்த லாவா குழம்புகள் பரவிய காரணத்தால், ஹவாயில் உள்ள கபோஹோ என்ற இடமே மொத்தமாக அழிந்து போய் உள்ளது. இது அந்த தீவில் இருக்கும் மிக முக்கியமான நகரங்களில் ஒன்று. இங்கு இருக்கும், ஹவாயின் பெரிய ஏரி ஒன்று மொத்தமாக ஆவி ஆகி, அங்கு மலை பொருட்கள் உருகி நுழைந்து, புதிய நிலப்பரப்பு உருவாகி உள்ளது. புதிய மலை போல அந்த பகுதி மாறியுள்ளது.

அமெரிக்கா
இதனால் அமெரிக்கா, ஹவாய் தீவின் வரைப்படத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. அதேபோல் மக்களின் உணவு பழக்க வழக்கம், பயிர்கள் விளைவிக்கும் சுழற்சி எல்லாம் மொத்தாமாக மாற்றப்பட உள்ளது. இந்த புதிய நிலப்பரப்பு அரசுக்கு சொந்தமானது என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications