சிக்னல் வந்தால் ஏற்காதீர்கள்.. வேற்றுகிரகவாசிகள் நம்மை அழித்து விடுவார்கள்.. எச்சரிக்கும் ஹாக்கிங்
லண்டன்: வேற்றுகிரகவாசிகளை நாம் ஒரு வேளை கண்டுபிடித்தாலும் கூட அவர்களை நாம் தொடர்பு கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் அவர்கள் நமது பூமியைக் கைப்பற்றி விடும் அபாயம் உள்ளதாக பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரித்துள்ளார்.
வேற்றுகிரகவாசிகள் குறித்த ஆய்வுகளில் தவறில்லை. அதேசமயம், நாம் அவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சிப்பது சரியான செயல் அல்ல. அது நமது அழிவுக்கு வித்திட்டு விடும் என்றும் கூறியுள்ளார் ஹாக்கிங். இதற்கு முன்பும் கூட அவர் இதே எச்சரிக்கையை விடுத்திருந்தார்.
விஞ்ஞானிகள் கிளீஸ் 832சி (Gliese 832c) என்ற கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அங்கு வேற்றுகிரகவாசிகள் வசிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆய்வுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆனால் அவர்களைத் தொடர்பு கொண்டால் நமக்குத்தான் சிக்கல் என்று ஹாக்கிங் எச்சரித்துள்ளார்.

அவ்வளவுதான் நாம காலி!
இதுகுறித்து ஹாக்கிங் கூறுகையில், வேற்றுகிரகவாசிகளை நாம் தொடர்பு கொள்ளாதவரை தப்பித்தோம். ஒரு வேளை தொடர்பு கொண்டால் பிறகு மனித இனமே பூண்டோடு அழிந்து விடும். அவர்கள் நம்மை அழித்து விடுவார்கள்.

நிச்சயம் சிக்னல் வரும்
கண்டிப்பாக ஒரு நாள் வேற்றுகிரகவாசிகளிடமிருந்து நமக்கு சிக்னல் வரும். ஆனால் அதற்குப் பதிலளிப்பதில் நாம் மிகுந்த புத்திசாலித்தனத்தோடு செயல்பட வேண்டும்.

நம்மை விட புத்திசாலிகள்
வேற்றுகிரகவாசிகள் நம்மை விட புத்திசாலிகளாக இருப்பார்கள். அவர்களைத் தொடர்பு கொள்வது என்பது, கொலம்பஸை எதிர்கொண்ட செவ்விந்தியர்களின் கதை போல. அந்தக் கதையை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். மிகுந்த கவனமாக இருந்தால் மட்டுமே அழிவைத் தவிர்க்க முடியும்.

பயங்கரமாக இருக்கும்
நம்மைப் போலத்தான் வேற்றுகிரகவாசிகளும் பிற கிரகங்களைத் தேடிக் கொண்டிருப்பார்கள். நாம் அவர்களிடம் சிக்கினால் பூமியையும் தங்கள் வயப்படுத்தவே அவர்கள் முயல்வார்கள் என்று கூறியுள்ளார் ஹாக்கிங்.

2010 முதல் எச்சரிக்கிறார்
கடந்த 2010ம் ஆண்டு முதலே இந்த எச்சரிக்கையைக் கொடுத்து வருகிறார் ஹாக்கிங். ஆரம்பத்தில் மனிதர்கள் மட்டும்தான் இருப்பதாக நான் கருதினேன். ஆனால் இப்போது வேற்றுகிரகவாசிகளும் இருப்பதாக நான் நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார் ஹாக்கிங்.
ஹாக்கிங்கே சொல்கிறார்.. எதுக்கும் கவனமாவே இருப்போம்ய்யா!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications