ஜப்பான் அணுகுண்டு தாக்குதல்களில்.. ஒரே ஒருவர் மட்டும் உயிர் பிழைத்த அதிசயம்! இவர்தான் அது
டோக்கியோ: உலகின் மிக மோசமான குண்டு வீச்சு ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வீச்சுதான். ஆனால் இந்த இரண்டு குண்டு வீச்சிலும் சிக்கி ஒரே ஒருவர் மட்டும் நீண்ட நாட்கள் உயிர் பிழைத்து வாழ்ந்திருக்கிறார்.
நிலத்திற்காகவும், ராஜ்ஜியத்திற்காகவும் போட்ட சண்டைகள் எல்லாம் முடிந்த பின்னர், சந்தைக்கான போட்டியாக இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. இந்த போரில் லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். குறிப்பாக ஜப்பான் இந்த போரில் ஏராளமான உயிர் இழப்புகளை சந்தித்திருந்தது. இதற்கு காரணம் அமெரிக்கா வீசிய அணுகுண்டு தான்.

ஆனால் இந்த இரண்டு அணுகுண்டு தாக்குதலில் இருந்து ஒருவர் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்து நீண்ட நாட்கள் வாழ்ந்திருக்கிறார். இது குறித்த தகவல்கள் தற்போது மீண்டும் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
சுடோமு யமகுச்சி என்பவர்தான் அந்த அதிசய மனிதர். இவர் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி என இரண்டு குண்டு வீச்சுகளிலும் சிக்கி உயிர் பிழைத்திருக்கிறார். முதல் குண்டு வீச்சில் சிக்கும்போது இவருக்கு வயது 29. யமகுச்சி ஒரு கடற்படை பொறியாளர். இவர் மூன்று மாத கடற் பயணத்தை ஜப்பானின் ஹிரோஷிமாவில் முடித்திருந்தார். இங்கிருந்து கிளம்புவதற்கு இன்னும் ஒரு நாள் பாக்கி இருந்தது.
அன்று 1945 ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி. காலை 8.15 மணியளவில், அவர் தனது நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளத்தில் நடந்து கொண்டிருந்தபோது அமெரிக்க விமானத்திலிருந்து அணுகுண்டு கீழே விழுவதை காண்கிறார். குண்டு கீழே விழும்போது சத்தம் எழுந்திருக்கிறது. இந்த குண்டு தரைக்கு சில நூறு அடி உயரத்திலேயே வெடித்தது. இதனால் வானத்தில் சக்தி வாய்ந்த மின்னல் ஏற்பட்டது. இத அனைத்தையும் அவர் பார்த்திருக்கிறார்.
வீசப்பட்டிருப்பது வெடிகுண்டு என்பதை உணர்ந்த அவர், உடனடியாக ஒரு பதுங்கு குழிக்குள் தாவ முயன்றார். ஆனால் வெடிகுண்டின் சக்தி அவரை இழுத்து அருகில் இருந்த உருளைக்கிழங்கு தோட்டத்திற்குள் வீசியது. இந்த சம்பவத்தில் அவரது முகம் மற்றும் கைகள் பயங்கர தீக்காயம் ஏற்பட்டது. காது ஜவ்வுகள் உடனடியாக கிழிந்தன.
இருப்பினும் உயிரோடிருந்தார். வானம் கருத்திருந்தது. சூரிய ஒளி உள்ளே புகாததால், ஹிரோஷிமா இருளாக இருந்தது. எனினும் உயிர் பிழைக்க உதவியை தேடினார். மருத்துவக்குழுக்கள் இவருக்கு உதவி உயிரை காப்பாற்றியது.
மேல் சிகிச்சைக்காக அவர் நாகசாகிக்கு மாற்றப்பட்டிருந்தார். ஆனால் இவர் சிகிச்சை பெற்ற போதுதான் நாகசாகியில் இரண்டாவது அணுகுண்டு வீசப்பட்டது. இதில் மருத்துவமனையின் கண்ணாடிகள் உடைந்து சுக்குநூறாக ஆனது. நோயாளிகள் தூக்கி வீசப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்திலும் அவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இந்த இரண்டு அணுகுண்டு தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், இவர் மட்டும் உயிர் பிழைத்திருந்தார்.
அமெரிக்காவின் கோர முகத்தின் சான்றாக கடந்த 2010 வரை உயிருடன் வாழ்ந்த யமகுச்சி பின்னர் உயிரிழந்தார். கடுமையான வயிற்று புற்றுநோயால் இவர் பாதிக்கப்பட்டிருந்தார்.
யமகுச்சியை விட கொடூரமான முறையில் உயிரிழந்தவர்களின் வரலாற்றை ஜப்பான் கொண்டிருக்கிறது. இருப்பினும், யமகுச்சியின் வரலாற்றை அம்மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து வருகிறார்கள். இவர் மட்டும்தான் இரண்டு அணுகுண்டு தாக்குதலிலிருந்து உயிர் பிழைத்த ஒரே நபர். இவருடைய தன்னம்பிக்கையும், வாழ்வின் மீதான பற்றும், அமெரிக்காவின் கோர முகமும் யமகுச்சியின் வரலாறு மூலம் மீண்டும் மீண்டும் பிரதிபலித்துக்கொண்டே இருக்கிறது.
-
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது? -
புஷ் போட்ட அதே உத்தரவு.. ராணுவ வீரர்கள் வயதை உயர்த்திய டிரம்ப்! பல லட்சம் பேரை ஈரானில் இறக்க முடிவு? -
இந்தியாவில் இன்னும் 1 மாதத்திற்கான எல்பிஜிதான் இருக்கு.. அப்போ 1 மாசத்திற்கு பின்? என்ன நடக்கும்? -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
ட்ரம்ப் அகராதியில் இல்லாத அந்த வார்த்தை.. ஈரான் போரில் நடக்கும் செம ட்விஸ்ட்! உலக நாடுகள் வெயிட்டிங் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications