தெற்கு லெபனானில் சிதறும் இஸ்ரேல் ஆக்கிரமிப்புகள்! ஆட்டம் காட்டும் ஹிஸ்புல்லா.. தப்பிக்க வழி இதுதான்

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: காசா மீது இஸ்ரேல் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து தீவிர தாக்குதலை தொடுத்து வரும் நிலையில், தற்போது தெற்கு லெனானில் உள்ள இஸ்ரேல் ராணுவ ஆக்கிரமிப்பு மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதலை தொடங்கியுள்ளது.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் கிளர்ச்சி குழுக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுப்பதும், அதற்கு எதிராக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்துவதும் பாலஸ்தீனத்தில் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்களாகும். ஆனால் கடந்த 2021ம் ஆண்டு அன்று 11 நாள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி நிலவியது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி இந்த அமைதியை குலைக்கும் வண்ணம் ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

 Hezbollah Attacks Israeli Military Occupation in Southern Lebanon

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்தான் பலமான நாடு என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையில், இந்த ஏவுகணை தாக்குதல் அந்நாட்டின் ஆத்திரத்தை அதிகமாக தூண்டியது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அதேபோல பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் படையினர் பெண்களையும், குழந்தைகளையும், ராணுவ வீரர்களையும் பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். இந்த கைதிகளை வைத்துதான் தற்போது இஸ்ரேலுக்கு, ஹமாஸ் போக்கு காட்டி வருகிறது. ஹமாஸின் இந்த பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா, பிரிட்டன் தொடங்கி பெரும்பாலான மேற்கு நாடுகள் கண்டித்திருக்கின்றன.

மறுபுறம் இஸ்ரேல், காசா மீது அதிரடி தாக்குதலை தொடுத்திருக்கிறது. கடந்த 15 நாட்களாக வான்வழி தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேல் தற்போது தரை வழியாக ஊடுருவி வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட பதில் தாக்குததில் தங்கள் நாட்டை சேர்ந்த சில பிணை கைதிகளை மீட்டிருக்கின்றனர். இருப்பினும் இன்னும் அதிகமான பிணை கைதிகளை இஸ்ரேல் மீட்க வேண்டியிருக்கிறது. மட்டுமல்லாது காசாவையும், ஹமாஸ் படையையும் முற்றிலுமாக அழிப்போம் என இஸ்ரேலிய ராணுவம் உறுதியேற்றுள்ளதால், இந்த தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

தற்போது வரை காசாவில் 1,500 குழந்தைகள் உட்பட 4,137 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல 13,400 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களுக்கான மருத்துவ சிகிச்சையை அளிக்க போதுமான அளவில் மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் தற்போது காசா வசம் கிடையாது. குடியிருப்புகள் மீதும் இஸ்ரேல் குண்டுகளை வீசுவதால், சுமார் 4.25 லட்சம் மக்களை ஐநா, பள்ளிக்கூடங்களில் தங்க வைத்திருகிருக்கிறது. பெண்கள், குழந்தைகள் தவிர்த்து 15 மருத்துவர்களும் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். மேலும் 23 ஆம்புலன்ஸ்கள், 10 மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு படை தரை மார்க்கமாக காசாவுக்குள் ஊடுருவ முயன்று வருகிறது. ஆனால் ஹமாஸ் படையினரின் எதிர் தாக்குதலால் தற்போதுவரை அவர்களால் ஊடுருவ முடியவில்லை. மறுபுறம் தெற்கு லெபனானில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியில் இருக்கும் அந்நாட்டின் ராணுவ தளவாடங்களை ராக்கெட் தாக்குதல் மூலம் அழித்து வருகிறது ஹிஸ்புல்லா அமைப்பு. நேற்று மாலை 'ரமிம்' எனும் லெபனான் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த இஸ்ரேலிய ராணுவ கூடாரம் ஒன்று அழிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஹிஸ்புல்லா அமைப்பின் துணை பொதுச்செயலாளர் கூறுகையில், "தென் மூலை எனப்படும் வடக்கு இஸ்ரேல் போருக்கு தயாராகி வருகிறது. தற்போது நாங்கள் முடிந்தவரை இஸ்ரேலின் ராணுவ கூடாரங்களை தாக்கி அழித்து வருகிறோம். எங்களது முன்னேற்றத்திற்கு வலுவான தாக்குதல் தேவைப்பட்டால் அதையும் நாங்கள் கொடுக்க தயார். தற்போது இஸ்ரேல் ஒரு நிலையற்ற தன்மையில் இருக்கிறது. எங்கள் தாக்குதலை குறைக்க வேண்டும் எனில் அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, காசாவை ஆக்கிரமிக்கும் எண்ணத்தை கைவிடுவதுதான்" என்று எச்சரித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+