For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டொனாட் ட்ரம்ப்புடன் இணைந்த மைக் பென்ஸ்: ஹிலரிக்கு ஆதரவளிக்கும் பெர்னி சான்டர்ஸ்!

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்க அரசியலில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன்.

குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், துணை அதிபர் வேட்பாளராக, இண்டியான கவர்னர் மைக் பென்ஸ் - ஐ அறிவித்துள்ளார். திங்கட்கிழமை நடைபெற உள்ள கட்சி மாநாட்டிற்கு முன்னதாக வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு குடியரசுக் கட்சியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

முன்னதாக ஹிலரி க்ளிண்டனுக்கு ஆதரவளிப்பதாக, அவரை எதிர்த்து உட்கட்சி தேற்தலில் போட்டியிட்ட பெர்னி சான்டர்ஸ் அறிவித்துள்ளார். சான் டர்ஸின் ஆதரவு ஹிலரி ஆதரவாளர்களையும் ஜனநாயகக் கட்சியினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

யார் இந்த பென்ஸ் ?

யார் இந்த பென்ஸ் ?

2012 ஆம் ஆண்டு இண்டியானா மாநிலத்தில் கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட மைக் பென்ஸ், முன்னதாக அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினராக 2001ம் ஆண்டு முதல் 12 ஆண்டுகள் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். தீவிர 'டீ பார்ட்டி' பிரிவு ஆதரவாளரான பென்ஸ், நிதானத்துடனும் அமைதியாகவும் செயல்படுபவர். 57 வயது நிரம்பியவர்.

கட்சிக்குள்ளும், வெளியிலும் எந்த சர்ச்சையிலும் சிக்காதவர். டொனால்ட் ட்ரம்ப் ஐ தீவிரமாக எதிர்க்கும் ஜெப் புஷ் கூட பென்ஸ்-ன் துணை அதிபர் வேட்பாளர் தேர்வைப் பாராட்டியுள்ளார்.

பென்ஸ்-ன் வருகை குடியரசுக் கட்சிக்குள் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதிரடி டொனால்ட் ட்ரம்ப் - அமைதியான மைக் பென்ஸ் கூட்டணி இருவர் மீது புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

கடைசி வரை சஸ்பென்ஸ் காட்டிய ட்ரம்ப்..

கடைசி வரை சஸ்பென்ஸ் காட்டிய ட்ரம்ப்..

துணை அதிபர் வேட்பாளர் அறிவிப்பை எதிர்பார்த்து, வியாழக்கிழமை இரவே மைக் பென்ஸ் நியூயார்க் நகரத்திற்கு வந்து விட்டார். வெள்ளிக்கிழமை அதிகாலை கலிஃபோர்னியா ரேடியோ ஒன்றுக்கு பேட்டியளித்த ட்ரம்ப், தான் இன்னும் முடிவெடுக்க வில்லை என்று கூறியுள்ளார்.

ட்ரம்ப்-க்கு நியூ ஜெர்ஸி கவர்னர் க்ரிஸ் கிறிஸ்டியை கொண்டுவர விருப்பம். குடும்பத்தின் சிலர் வற்புறுத்தலால் விருப்பம் இல்லாமல் தான் மைக் பென்ஸ் -ஐ அறிவித்தார் என்றும் தகவல்கள் வந்துள்ளன. வியாழக்கிழமை இரவு, முடிவை மாற்ற முடியாதா என்று குடும்பத்தினரிடம் கேட்டதாகவும், அவர்கள் இனி முடியாது என்று சொல்லிவிட்டதாகவும் ஒரு தகவல் பரவியது. ட்ரம்பின் மகன் அதை மறுத்துள்ளார்.

ஹிலரிக்கு சான்டர்ஸ் ஆதரவு

ஹிலரிக்கு சான்டர்ஸ் ஆதரவு

முன்னதாக நியூஹாம்ஷைர் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பெர்னி சான்டர்ஸ் ஹிலரி க்ளிண்டனுடனுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.

இந்த தேர்தலில் ஹிலரி, ட்ரம்ப் அல்லது சான்டர்ஸ் என்பது முக்கியமல்ல, மக்களுக்கான தேவைகளையும், முக்கிய பிரச்சனைகளையும் பற்றி விவாதித்து தீர்வு காண்பதற்கான களம்.

வரப் போகும் நவம்பர் தேர்தலில் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுக் காணும் வல்லமை பெற்ற வேட்பாளார் ஹிலரி க்ளிண்டன் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. என்னால் முடிந்த அனைத்தையும் செய்து ஹிலரி வெற்றி பெற்று அமெரிக்க அதிபர் ஆவதற்கு துணை நிற்பேன் என்று சான்டர்ஸ் சூளுரைத்தார்

பென்ஸ்-ஐ வெளுத்து வாங்கும் ஹிலரி

பென்ஸ்-ஐ வெளுத்து வாங்கும் ஹிலரி

மைக் பென்ஸ்-ஐ துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ள ட்ரம்ப், தன்னுடைய பிற்போக்கு கொள்கைகளுக்கு துணை போகும் ஒருத்தரைத்தான் தேர்ந்தெடுத்துள்ளார். குடியரசுக் கட்சியின் தீவிர வலது சாரி டீ-பார்ட்டி அமைப்பைச் சார்ந்த பென்ஸ், பொருளாதாரா ரீதியாகவும் நடுத்தர மக்களுக்கு எதிரான கொள்கைகளை செயல்படுத்தி வருகிறார்.

பணக்காரர்களுக்கு சாதகமாகவும், குடியேற்ற சீர்திருத்தத்திற்கு எதிரானவருமான பென்ஸ் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது, நடுநிலைக்கு ஒவ்வாத தீவிர வலது சாரி சிந்தனையாகும் என்று ஹிலரி சாடியுள்ளார்.

ஒரு புறம் மிட் ராம்னி, ஜெப் புஷ் போன்ற குடியரசுக் கட்சியின் ஜாம்பவான்கள் ட்ரம்பை இன்றளவும் தீவிரமாக எதிர்த்து வருகிறார்கள் . இன்னொரு பக்கம் ட்ரம்பின் அணுகுமுறைக்கு எதிராக பிளவுபட்டிருக்கும் குடியரசுக் கட்சியினரை, ஒரளவுக்காவது பென்ஸ் ஒருங்கிணைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சான்டர்ஸ் ஆதரவு கிடைத்த போதிலும் ஜனநாயக்கட்சியின் இளம் உறுபினர்களை கவர்வதற்கு, சான்டர்ஸ் போன்ற சோஷலிச எண்ணம் கொண்ட ஒருவர் ஹிலரிக்கு தேவைப்படுகிறது. கடும் போட்டி நிலவும் மாநிலங்களில் கட்சியினரின் ஓட்டு ஒவ்வொன்றும் ஹிலரிக்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது. எலிசபெத் வாரன் ஹிலரியின் தேர்வாக இருக்கும் என கருதப்படுகிறது.

ஹிலரியின் துணை அதிபர் தேர்வும் வெளி வந்த பிறகு அமெரிக்க தேர்தல் களத்தில் அனல் பறக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.

-இர தினகர்

English summary
Donald Trump announced Indiana Governor Mike Pence as his running mate and vice presidential candidate. 57 year old Pence was elected as Governor during 2012. Earlier he was elected as US Congress Representative since 2001. Trump –Pence ticket has created some home in Republican camp. It is told that Trump was convinced by family members in selecting Pence, irrespective of his own preference for New Jersey Governor Chris Christie.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X