For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோரிக்கையை ஏற்கிறோம்.. இளைஞர்கள் போராட்டத்திற்கு அடி பணிந்த ஹாங்காங்.. பின்வாங்கிய சீன அரசு!

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Hong Kong protest leader activist Joshua Wong arrested

    ஹாங்காங்: ஹாங்காங் போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்கிறோம் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து நடந்து வந்த போராட்டத்தில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

    1997ல்தான் ஹாங்காங் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து பிரிந்து, சீனாவுடன் இணைந்தது. அப்போது ஹாங்காங்கிற்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டது.

    தன்னாட்சி அதிகாரம், தனி சட்டம், தனி கொள்கைகள், தனி ஆட்சியாளர்கள், பட்ஜெட், பாதுகாப்பு மற்றும் ஒன்றாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. இத்தனை வருடமாக இந்த சிறப்பு அதிகாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஹாங்காங் சிறப்பு அதிகாரத்தை நீக்கிவிட்டு மொத்தமாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சீனா முயன்று கொண்டு இருக்கிறது. கடந்த 20 வருடங்களில் பல முறை நீக்குவதற்கு சீனா முயன்று இருக்கிறது. இதற்கு எதிராக அங்கு இளைஞர்கள் கடந்த சில வருடங்களாக போராடி வருகிறார்கள்.

    என்ன சட்டம்

    என்ன சட்டம்

    இந்த நிலையில்தான் சீனாவில் புதிதாக நாடுகடத்தல் சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினார்கள். கடந்த ஜூன் மாதம் இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை ஹாங்காங்கில் கொண்டு வர சீனா முயன்று அந்த மசோதாவை தாக்கல் செய்தது. இதன் மூலம் ஹாங்காங்கில் இருக்கும் யாரை வேண்டுமானாலும் எளிதாக நாடு கடத்த முடியும்.

    சீனா திட்டம்

    சீனா திட்டம்

    சீனாவிற்கு எதிராக பேசும் யாரையும் ஹாங்காங்கில், ஹாங்காங் ஆட்சியாளர் அனுமதி இன்றி நாடு கடத்த முடியும். அவர்களை சீனா உள்ளிட்ட எங்கும் நாடு கடத்த முடியும் .இதற்கு எதிராகத்தான் அங்கு மக்கள் தினமும் போராட்டம் செய்து வருகிறார்கள். சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து ஹாங்காங் மக்கள் களத்தில் இறங்கி போராடி வருகின்றனர்.

    என்ன கைது

    என்ன கைது

    ஆனால் இவர்களை சீனா தனது ராணுவத்தை ஏவி கைது செய்வது, கொடுமை செய்வது என்று பல அடக்குமுறைகளை ஏவி முடக்கி வருகிறது. ஹாங்காங் ஆட்சியாளராக இருக்கும் கேரி லாம் கூட சீனாவின் பேச்சை கேட்கும் நபர்தான். இவர்தான் போராட்டத்திற்கு எதிராக போலீசை களமிறக்கி உள்ளார். இதனால் அவரை பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் மக்கள் களமிறங்கி போராடி வருகின்றனர்.

    ஐந்து கோரிக்கை

    ஐந்து கோரிக்கை

    மொத்தம் போராட்டம் செய்பவர்கள் ஐந்து கோரிக்கையை வைத்துள்ளனர். அதன்படி,

    1. நாடு கடத்தல் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்.

    2. கலவரம் செய்தோம் என்ற வார்த்தையை புகாரில் இருந்து நீக்க வேண்டும்.

    3. போராட்டத்தில் போலீஸ் செய்த அத்துமீறலை விசாரிக்க வேண்டும்.

    4.கேரி லாம் பதவி விலக வேண்டும். புதிதாக தேர்தல் நடத்த வேண்டும்.

    5. மொத்தமாக ஹாங்காங்கிற்கு முழு அதிகாரம் அளிக்க வேண்டும்.

    ஏற்றது

    ஏற்றது

    இந்த நிலையில் முதல் கோரிக்கையான, நாடு கடத்தல் சட்டத்தை மொத்தமாக வாபஸ் பெறுவதாக ஹாங்காங் அரசு தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தை இனி தாக்கல் செய்யவே மாட்டோம். மொத்தமாக வாபஸ் பெறுகிறோம் என்று ஹாங்காங் அரசு தெரிவித்துள்ளது. இது போராட்டக்காரர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

    ஆனால் தொடரும்

    ஆனால் தொடரும்

    ஆனால் இந்த ஹாங்காங் போராட்டம் தொடர்ந்து நடக்கும் என்று கூறுகிறார்கள். மேலும் உள்ள 4 கோரிக்கைகளை ஏற்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று கூறி உள்ளனர். இதனால் ஹாங்காங் அரசு என்ன செய்வது என்று தெரியாமல் பெரிய குழப்பத்திற்கு உள்ளாகி உள்ளது.

    English summary
    Hong Kong youths protest wins a BIG: Carrie Lam to withdraw the extradition bill fully.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X