ஐநா அலுவலகத்தை தாக்கி, கட்டுப்பாட்டில் எடுத்தது ஹவுதி அமைப்பு! ஏமனில் உச்சக்கட்ட பதற்றம்
சனா: ஏமனில் ஹவுதி பிரதமரை இஸ்ரேல் நேற்று போட்டு தள்ளியது. இதனையடுத்து அங்கு பதற்றம் நிலவி வரும் நிலையில் தற்போது ஏமனில் உள்ள ஐநா அலுவலகத்தை ஹவுதிக்கள் கைப்பற்றியுள்ளனர். அங்கு பணியாற்றும் பலரையும் ஹவுதிக்கள் கைது செய்திருக்கின்றனர்.
இது குறித்து ஏமனுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதர் ஹான்ஸ் கிரண்ட்பெர்க் கூறுகையில், "ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் 11 ஐ.நா. ஊழியர்களை கைது செய்து வைத்திருக்கிறார்கள். சனா மற்றும் ஹோடைடாவில் ஐ.நா. ஊழியர்களை தன்னிச்சையாக கைது செய்ததையும், ஐ.நா. வளாகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, ஐ.நா.வின் சொத்துக்களை பறிமுதல் செய்ததையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் போரில், ஹமாஸுக்கு ஆதரவாக செங்கடல் பகுதியில் இஸ்ரேலுக்கு செல்லும் சர்வதேச நாடுகளின் கப்பல்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அழித்து வந்தனர். மட்டுமல்லாது, வெளியலிருந்து இஸ்ரேலுக்குள் அவர்கள் தாக்குதல் நடத்தி வந்தனர். இந்நிலையில் இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஹவுதி பிரதமரை இஸ்ரேல் போட்டு தள்ளியது. இதற்கு ஈரான் தவிர வேறு எந்த நாடுகளும் கண்டனம் தெரிவிக்கவில்லை. இப்படி இருக்கையில்தான் ஐநா அலுவலகத்தை ஹவுதிக்கள் கட்டுப்பாட்டில் எடுத்திருக்கின்றனர்.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைது செய்து வைத்திருக்கும் தங்களது ஊழியர்க மீட்கும் பணியில் ஐநா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு வெற்றிகரமாக நடக்கும் என்பது சந்தேகம்தான்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications