For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா வைரஸ்.. 6 நாட்களில் பிரம்மாண்ட மருத்துவமனை கட்டும் சீனா.. எப்படி சாத்தியம்.. மாஸ் பின்னணி!

கொரோனா வைரசுக்கு எதிராக சீனாவில் கட்டப்படும் மருத்துவமனை எப்படிவெறும் 6 நாட்களில் கட்டி முடிக்கப்படும் என்ற விவரம் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    6 நாட்களில் பிரம்மாண்ட மருத்துவமனை கட்டும் சீனா| How China will build a hospital in 6 days ?

    பெய்ஜிங்: கொரோனா வைரசுக்கு எதிராக சீனாவில் கட்டப்படும் மருத்துவமனை எப்படிவெறும் 6 நாட்களில் கட்டி முடிக்கப்படும் என்ற விவரம் வெளியாகி உள்ளது.

    சீனாவில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த சில வாரங்களாகவே பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இது வரை சுமார் 3 ஆயிரம் பேர் வரை இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை 106 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

    மருந்து இல்லாமல் உயிர்பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அவல நிலை நீடிக்கிறது. கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சீனாவில் வெறும் 6 நாட்களில் பிரம்மாண்ட மருத்துவமனை கட்டிமுடிக்க பக்காவாக திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குரிய வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    83 பேரின் உயிர்.. எதையோ மூடி மறைக்கும் டிரம்ப்.. ஈரானை தொடர்ந்து ஆப்கானில் அடிவாங்கிய அமெரிக்கா!83 பேரின் உயிர்.. எதையோ மூடி மறைக்கும் டிரம்ப்.. ஈரானை தொடர்ந்து ஆப்கானில் அடிவாங்கிய அமெரிக்கா!

    எப்போது முடிக்கப்படும்

    எப்போது முடிக்கப்படும்

    சீனாவில் நவீன முறையில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுவரும் இந்த கொரோனா மருத்துவமனை வருகின்ற பிப்ரவரி 2ம் தேதி இரவில் இருந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 25000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுவரும் இந்த மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 1000 பேர் சிகிச்சை பெறலாம். கொரோனா நோயாளிகள் மற்ற நோயாளிகளுடன் சேர கூடாது என்பதற்காக இந்த துரித நடவடிக்கையை சீன அரசு மேற்கொண்டுள்ளது . சீனாவின் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை உலக நாடுகளும், உலக சுகாதார மையமும் பாராட்டி உள்ளது.

    திட்டம் என்ன

    திட்டம் என்ன

    கடந்த 2003 ஆம் ஆண்டு இதே சீனாவில் தான் சார்ஸ் (SARS ) என்ற கொடிய வைரஸ் பரவியது. இந்த SARS வைரஸ் தொற்றுக்கு மட்டும் மொத்தம் 700 க்கும் மேல் மக்கள் பலியாகினர். இந்த SARS வைரஸை சமாளிக்கவும், மக்களை பாதுகாக்கவும், சீன அரசு பெய்ஜிங்கில் வெறும் 7 நாட்களில் ஒரு மருத்துவமனையை கட்டி உலக சாதனை படைத்தது. அப்போது இந்த மருத்துவமனை பெரிய அளவில் மக்களுக்கு உதவியது. சார்ஸ் நோயை கட்டுப்படுத்த இந்த மருத்துவமனை பெரிதாக உதவியது.

    அதனால் என்ன??

    அதனால் என்ன??

    இப்பொழுது இந்த சாதனையை முறியடிக்கும் வகையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளது. இதனால், வெறும் 6 நாட்களில் ஒரு பிரம்மாண்ட மருத்துவமனையை கட்டி முடிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மருத்துவமனை 2003 ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் அமைக்கப்பட்ட மருத்துவமனையை அடிப்படையாகக் கொண்டே கட்டப்பட்டு வருகிறது. ஆனால் அதைவிட வேகமாக இதை கட்ட போகிறார். இதற்காக வேகமாக பணிகள் நடந்து வருகிறது.

    எப்படி ஆறு நாட்களில்?

    எப்படி ஆறு நாட்களில்?

    உலக சுகாதார கவுன்சில், மூத்த உறுப்பினர் சக யான்ஷோங் ஹுவாங் குறிப்பிடுகையில், "இது போன்ற நினைவுச்சின்ன திட்டங்களுக்கு மிக விரைவாக செய்து முடித்த சாதனை சீனாவிடம் உள்ளதாகவும், கட்டுமானத்தை சரியான நேரத்தில் முடிக்க நாடு முழுவதும் இருந்து பொறியாளர்கள் கொண்டு வரப்படுவார்கள்" என்றும் தெரிவித்துள்ளார். இந்த பணியை 24 மணி நேரமும் செய்ய உள்ளனர். ஷிப்ட் அடிப்படையில் மாறி மாறி ஆட்கள் பணியை மேற்கொள்வார்கள். இதனால் ஒரு நிமிடம் கூட பணி தாமதம் ஆகாது.

    நேரடி சவால்

    நேரடி சவால்

    முன்னதாக ஏழு நாட்களில் கட்டப்பட்ட மருத்துவமனையின் சாதனையை, இப்பொழுது மக்களின் நலன் கருதி வெறும் ஆறு நாட்களில் கட்டி முடித்து முந்தைய சாதனை முறியடிக்கப்படும் என்று சவால் விடுத்துள்ளார். மேலும் இந்த மருத்துவமனையில் எக்ஸ்ரே அறை, சி.டி அறை, தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் தனியே ஆய்வக அறை கொண்டு கட்டப்படும் என்றும் ஒவ்வொரு வார்டிலும் தனியே பாத்ரூம் வசதிகளும் இருக்கும் என்று கூறினார். இதற்காக ஏற்கனவே கட்டப்பட்ட சுவர்களை பயன்படுத்தவும் உள்ளனர்.

    சீனா தான் பெஸ்ட்

    சீனா தான் பெஸ்ட்

    ஆம் ரெடிமேட் சுவர்களை இதற்காக பயன்படுத்த உள்ளனர். மேலும் இது பற்றி குறிப்பிடுகையில், பொறியியல் துறையில் சீனா சிறந்தது என்றும் குறுகிய காலத்தில் வானளாவிய கட்டிடங்களை கட்டுவதில் சீனர்கள் கில்லாடி, இதனை மேற்கத்தியர்கள் கற்பனை செய்வது மிகவும் கடினம் கூறியுள்ளார். மேலும் மருத்துவப் பொருட்களைப் பொறுத்தவரை, வுஹான் மற்ற மருத்துவமனைகளிலிருந்து பொருட்களை எடுத்துக் கொள்ளலாம் அல்லது தொழிற்சாலைகளில் இருந்து எளிதாக ஆர்டர் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

    ஒன்றிணைந்து செயல்படுவோம்

    ஒன்றிணைந்து செயல்படுவோம்

    சீன பிரதமர், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு, தக்க நிவாரணத்தை செய்து வருகிறார். மேலும் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில், முக்கிய பொறுப்பாளர்களிடம் நிவாரண தொகையை கொடுத்து உதவி செய்ய உத்தரவிட்டுள்ளார். வுஹன் நகரம் முழுக்க ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் இருக்கும் மருத்துவ துறையினர்தான் இங்கு நோயாளிகளை கவனித்து வருகிறார்கள். ராணுவத்தில் இருக்கும் மருத்துவர்கள், பாதுகாக்கப்பட்ட உடையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதற்காக பிரத்யேக உடையும் தயார் செய்யப்பட்டுள்ளது.

    எப்படி சிகிச்சை முறை

    எப்படி சிகிச்சை முறை

    சீனாவில் மட்டுமின்றி வேறு சில நாடுகளிலும் இந்த வைரஸ் பரவி வருகிறது. சீனாவில் இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் நோய் தாக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. அதனால் நாடு முழுக்க இருக்கும் எல்லா கொரோனா வைரஸ் நோயாளிகளும் இங்கே கொண்டு வரப்பட்டு அவர்களுக்கு இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    How China will build a hospital in 6 days against Coronavirus? - Here are the details.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X