லெபனானில் குண்டு மழை.. ஐநா படைகள் மீதும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. சர்வதேச நாடுகள் கண்டனம்
டெல் அவிவ்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மத்திய பகுதிகளில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் டாப் தலைவர்களை குறிவைத்து இந்த தாக்குதலை இஸ்ரேல் படைகள் முன்னெடுத்துள்ளன. இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு லெபனானில் உள்ள யுனிபில் தலைமையகம் மற்றும் அதன் அருகில் உள்ள ஐநா அமைதிப்படை தளம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஒராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இஸ்ரேலுக்கு எதிரான இந்த போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஈரான் ஆதரவுடன் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா ஆதரவு அளித்து வருகிறது. ஹமாஸ்க்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், ஹிஸ்புல்லா அமைப்பினரின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதிகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், லெபனானின் தலைநகர் பெய்ரூட்டின் மத்திய பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியது. இது ஒருபக்கம் என்றால் இஸ்ரேலின் தரைவழி படைகள் ஐநா அமைதி குழு தலைமை தலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் இதில் இருவர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்வழி தக்குதலால் பெய்ரூட் நகரத்தில் பல இடங்களில் நேற்று பலத்த சத்தம் கேட்டது. லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கிய பிறகு நடத்தப்படும் மூன்றாவது தாக்குதல் இதுவாகும். லெபனான் சுகாதார அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "பெய்ரூட்டில் இஸ்ரேல் எதிரிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். 117 பேர் காயம் அடைந்தனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக லெபனான் பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா மற்றும் அவருக்கு அடுத்த கட்ட தலைவர்கள் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டனர். ஹிஸ்புல்லாவை ஒழித்து கட்டும் வரை ஓய மாட்டோம் எனக் கூறி இஸ்ரேல் தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளது.
தெற்கு லெபனானில் உள்ள யுனிபில் தலைமையகம் மற்றும் அதன் அருகில் உள்ள ஐநா அமைதிப்படை தளம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர். எனினும், காயம் அடைந்த ஐநா அமைதிப்படை வீரர்கள் எநத நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விவரம் வெளியாகவில்லை. லெபனானில் நிவாரணப்பணிகளுக்காக பல்வேறு நாடுகளின் ராணுவ வீரர்களை உள்ளடக்கிய அமைதிப்படை குழு உள்ளது. இந்த படையில் இந்தியா உள்ளிட்ட வீரர்கள் சேவையாற்றி வருகிறார்கள்.
-
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications