எப்போதுமே "இந்தியன்" தான்! 9 ஆண்டு ஜெர்மனி வாழ்க்கை.. இந்திய குடியுரிமையை துறக்க மறுத்த தொழிலதிபர்
பெர்லின்: கடந்த 9+ ஆண்டுகளாக ஜெர்மனியில் வசிக்கும் ஒருவர், இதுவரை ஜெர்மனி குடியுரிமை கோரி விண்ணப்பிக்கவில்லையாம். இத்தனை ஆண்டுகள் ஜெர்மனியில் வசித்தாலும் ஒருபோதும் ஜெர்மனி நாட்டவராக உணரவில்லை என்றும் தான் இந்தியராகவே உணர்வதாகவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே ஜெர்மனி குடியுரிமைக்குத் தகுதி பெற்றாலும் விண்ணப்பிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு, குறிப்பாக மேற்குலக நாடுகளுக்கு, செல்லும் பலரும் அங்கேயே செட்டிலாகவே விரும்புவார்கள். குறிப்பிட்ட ஆண்டுகள் அங்கு வசித்தால் குடியுரிமை பெற முடியும் என்பதால் அப்படிக் குடியுரிமை பெறவே விரும்புவார்கள். இருப்பினும், பல ஆண்டுகளாக அப்படி வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் நேர் எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவரது போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

பிரபலத் தொழிலதிபர்
ஜெர்மனி நாட்டில் வசித்து வரும் ஆய்வாளர் மயுக் மஞ்ஜா.. இவர் அங்குச் சுமார் 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். முனைவர் பட்ட ஆய்வுக்காக ஜெர்மனிக்குச் சென்று இவர், பின்னர் அங்கேயே ஒரு ஏஐ நிறுவனத்தையும் தொடங்கினார். 10 ஆண்டுகளாக இவர் அங்கு வசிக்கும் நிலையில், ஜெர்மனி குடியுரிமைக்கு இவர் தகுதி பெற்றவராக மாறிவிட்டார். இருந்த போதிலும், அவர் ஜெர்மன் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கவில்லையாம். இந்தியா உடனான பிணைப்பு மற்றும் தேச அடையாளம் ஆகியவையே இந்த முடிவுக்குக் காரணம் என அவர் குறிப்பிடுகிறார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் ஜெர்மனி நாட்டில் 9+ ஆண்டுகளாக வசித்து வருகிறேன். ஓராண்டிற்கு முன்பே ஜெர்மனி பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்க நான் தகுதி பெற்றுவிட்டேன். என்னால் ஓராண்டிற்கு முன்பே குடியுரிமை பெற்றிருக்க முடியும். ஆனாலும், நான் அதை வாங்கவில்லை. இது குறித்து நீண்ட காலம் யோசித்தேன்.. அதன் பிறகே என்னால் ஜெர்மன் குடிமகனாக மாற முடியாது.. எனவே, ஜெர்மனி குடியுரிமை வேண்டாம் என முடிவெடுத்தேன்.
ஜெர்மனி
நான் என்னை ஜெர்மன் நாட்டவராக உணரவில்லை. இது (குடியுரிமை என்பது) வெறுமன ஆவணம் மட்டுமே என்பது புரிகிறது. ஆனாலும் நான் ஒரு இந்தியன். ஜெர்மன் குடியுரிமை பெறுவது விசித்திரமாகத் தோன்றும்.. ஜெர்மன் வரலாறு, மொழி, கலாச்சாரத்துடன் என்னால் ஒன்றிப்போக முடியவில்லை. என்னால் அதைப் புரிந்து கொள்ள முடிகிறது.. ஆனால், அதை உணர்வது ஒன்றிப்போக முடியவில்லை.
பெர்லினில் உள்ள சர்வதேச மற்றும் அறிவியல் ஆய்வாளர்களிடையே எளிதில் பேசவும் கலந்துரையாடவும் முடிகிறது. ஆனால், உள்ளூர் சமூகத்துடன் முழுமையாக ஒன்றிணைய முடியவில்லை.. உதாரணத்திற்கு ஜெர்மனி கால்பந்து போட்டியில் தோற்றாலும், வென்றாலும் நான் எதையும் உணருவதில்லை. அதேநேரம் இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றி என்னை உற்சாகத்தில் ஆழ்த்தும். அது எப்போதும் அப்படித்தான் இருக்கும்.
முக்கியமானது
நான் என்னை ஜெர்மனியின் நண்பனாகப் பார்க்கிறேன்.. ஆனால் அதன் ஒரு பகுதியாக ஒருபோதும் பார்க்கவில்லை.. இது ஒரு நுட்பமான அதேநேரம் முக்கியமான வேறுபாடு.. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நான் ஜெர்மனி குடியுரிமை பெற்றால், இந்த நாட்டின் லட்சியங்கள், மதிப்புகளுக்கு ஏற்ப நான் மாற வேண்டும். அப்படிச் செய்வது தான் சரியாக இருக்கும். பல நூற்றாண்டு (ஜெர்மனி) கலாச்சாரம் எனக்கு ஏற்ப மாற்ற வேண்டும் என நான் நினைக்கவில்லை. ஆனால், நான் அதற்கேற்ப மாறுவது சரியாக இருக்கும் என்றும் தோன்றவில்லை.
எப்போதும் இந்தியர்
அதேநேரம் இதற்கு மாறாக இந்தியாவில் அப்படி இல்லை. அங்கு என்னுடைய கருத்துக்கள் பெரும்பான்மையான மக்களுடன் ஒத்துப்போகாவிட்டாலும், என் நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கவும், நான் உணர்வதைச் சொல்லும் உரிமையும் எனக்கு இருப்பதாக என்று நினைக்கிறேன். நான் இந்தியாவின் ஒரு பகுதி. என்னுடைய கருத்துக்கள் வரையறையின்படி இந்தியக் கருத்துக்கள். உங்களுக்கு அவை பிடிக்காமல் இருக்கலாம். இந்திய பாஸ்போர்ட் எனக்கு அந்த உரிமையைப் பெறத் தருகிறது. அது எனக்கு ரொம்வே முக்கியமானது" எனப் பதிவிட்டுள்ளார்.
ஜெர்மனி நாடு இரட்டைக் குடியுரிமையை அனுமதிக்கிறது. அதாவது வேறு ஒரு நாட்டில் குடியுரிமை பெற்ற ஒருவர், அதை இழக்காமல் ஜெர்மனி நாட்டிலும் குடியுரிமையைப் பெற முடியும். இருப்பினும், இந்தியாவில் இரட்டைக் குடியுரிமைக்கு அனுமதி இல்லை. எனவே, மயுக் ஜெர்மனி குடியுரிமையைப் பெற விரும்பினால் அதற்கு இந்தியக் குடியுரிமையை அவர் துறந்தே தீர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications