கதறுதே கராச்சி.. பாகிஸ்தானில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. பொதுமக்கள் கடும் அவதி

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றாக உள்ள கராச்சியில் மின்வெட்டு மற்றும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடிப்படை தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாததால் அங்குள்ள மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதன் பின்னணி குறித்த தகவல் வருமாறு:

நம் அண்டை நாடான பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தீனிப்போட்டு வளர்ப்பதை மட்டுமே வேலையாக வைத்துள்ளது. மாறாக அந்த நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தொடர்ந்து வருகிறது.

in-pakistan-water-crisis-in-karachi-due-to-power-cut-and-pumping-station-wire-problems

பாகிஸ்தானில் யார் ஆட்சியை பிடித்தாலும் கூட பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக நிற்பது, காஷ்மீருக்கு உரிமை கொண்டாடுவது உள்ளிட்டவற்றை தான் முன்னிறுத்தி மூக்குடைப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் தான் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலமாக நம்மிடம் அடிவாங்கிய பாகிஸ்தான் இன்னும் கூட திருந்தவில்லை. நம் நாட்டை அவ்வப்போது சீண்டி வருகிறது. இப்படியான சூழலில் தான் பாகிஸ்தானின் மிகவும் முக்கியமான நகரங்களில் ஒன்றாக இருக்கும் கராச்சியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அங்கு மக்களின் அடிப்படை தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லை.

அதாவது கராச்சியை எடுத்து கொண்டால் K-3 பம்பிங் ஸ்டேஷன்கள் உள்ளன. இந்த நீரேற்று நிலையங்கள் வழியாக தான் மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த வியாழக்கிழமை இரவில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட மின்வெட்டால் நீரேற்று நிலையங்களால் செயல்பட முடியவில்லை. 41 மணிநேரம் கழித்து மின்வெட்டு சரியானது.

ஆனால் அதற்குள் நீரேற்று நிலைய குழாய் மற்றும் வயரில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் பம்பிங் ஸ்டேஷன்கள் மூடப்பட்டுள்ளன. இந்த பம்பிங் ஸ்டேஷன்கள் செயல்படாததால் தற்போது பாகிஸ்தானின் கராச்சி நகரில் தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. போர்வெல் வைத்திருக்கும் மக்கள் மட்டும் தேவையான தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர்.

மாறாக ஏராளமான மக்கள் தண்ணீர் இன்றி பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். டேங்கர்களில் தண்ணீர் விற்பனை அதிகரித்துள்ளது. டிமாண்ட் அதிகரிப்பால் தண்ணீர் விலையும் எகிறியுள்ளது. இது பொதுமக்களுக்கு இன்னும் கூடுதல் சிரமத்தை கொடுக்கிறது. ஏற்கனவே கராச்சி மற்றும் அதனை சுற்றிய இடங்களில் சுத்தமான குடிநீர் இல்லாதாதல் பொதுமக்கள் அசுத்தமான தண்ணீரை குடித்து வருகின்றனர்.

சமீபத்தில் கூட கராச்சி புறநகரான பஹ்ரியா டவுன் அருகே உள்ள ஃபைஸ் முஹம்மது பர்ரோ கோத் என்ற கிராமத்தில் அசுத்தமான குடிநீரை குடித்து குழந்தைகள் உள்பட 9 பேர் இறந்தனர். இவர்கள் இரைப்பை குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர். தற்போது கராச்சியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்களும் அசுத்தமான தண்ணீரை குடிக்கும் நிலைக்கு தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியை தொடங்கி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+