For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாம "மேகி" மேல கை வச்சா.. அவங்க "ஹால்திராமுக்கு" ஆப்பு வச்சுட்டாங்களே!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்தியாவில் மேகி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அமெரி்க்காவில், இந்தியாவின் பிரபலமான ஹால்திராம் நிறுவன தயாரிப்புகளுக்கு அமெரிக்க உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு தடை விதித்துள்ளது.

ஹால்திராமின் 86 வகையான ஸ்னாக்ஸுகள் சாப்பிடும் தரத்தில் இல்லை என்றும் மிகவும் கேவலமாக இருப்பதாகவும், அது கூறியுள்ளது. ஆனால் அமெரிக்க உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் குற்றச்சாட்டை ஹால்திராம் திட்டவட்டமாக மறுத்துளளது.

இந்தியாவின் பல மாநிலங்களிலும் மேகிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரி்க்காவில் ஹால்திராமுக்கு சிக்கல் வந்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல உணவுகள்

பல உணவுகள்

ஆனால் ஹால்திராம் மட்டுமல்லாமல் வேறு பல இந்திய உணவு வகைகளுக்கும் அமெரி்க்காவில் வந்திருப்பதாக வால்ஸ்டிரீட் ஜர்னல் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹால்திராமில் பூச்சி மருந்து

ஹால்திராமில் பூச்சி மருந்து

ஹால்திராம் உணவுகளைப் பொறுத்தவரை அதில் பூச்சி மருந்து இருப்பதாகவும், உடலுக்கு அபாயத்தை ஏற்படுத்தக் கூடிய பாக்டீரியா அதிக அளவில் இருப்பதாகவும், அமெரிக்க உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு கூறியுள்ளது.

பிரிட்டானியாவுக்கும் சிக்கல்

பிரிட்டானியாவுக்கும் சிக்கல்

அதேபோல பிரிட்டானியாவின் சில வகை பண்டங்களுக்கும் கூட இதேபோன்ற சிக்கல் எழுந்து அவையும் விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன.

86 வகைப் பொருட்கள்

86 வகைப் பொருட்கள்

ஹால்திராமின் 86 வகைப் பொருட்களை அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்ய தடை உள்ளதாம். இதனால் ஹால்திராம் கடும் சிரமத்தைச் சந்தித்துள்ளது.

அசிங்கமா இருக்காம்

அசிங்கமா இருக்காம்

ஹால்திராம் குறித்து அமெரிக்க உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு அறிக்கை கூறுகையில், இந்தப் பொருட்கள் சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல. அசிங்கமாக இருக்கிறது. மிகவும் மோசமாக இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

எல்லாம் பொய்

எல்லாம் பொய்

ஆனால் ஹால்திராம் இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அனைத்தும் தவறான குற்றச்சாட்டு. அமெரிக்க நாட்டு உணவுத் தரத்திற்கு பொருத்தமான வகையில்தான் ஹால்திராம் படைப்புகள் உள்ளன என்று அது கூறியுள்ளது.

என்னவோ போடா மாதவா!

English summary
Days after the Maggi ban in several states of India, now other Indian food products are also under the scanner, not only in India, but also in abroad. Recently, according to a Wall-street journal report, many Indian snack products have been declared unsuitable for sale by the food safety inspectors in the US.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X