வாலை ஆட்டிய பாகிஸ்தான்.. ஒட்ட நறுக்கிய இந்தியா! டெல்லியில் கூடிய ’டாப்’ தலைகள்.. பரபர ஆலோசனை
டெல்லி: பாகிஸ்தான் இந்தியா மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவம், கப்பற்படை, விமானப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள தீவிரவாதிகளின் முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாதிகள் தவிர்த்து பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என இந்திய ராணுவமும் வெளியுறவுத் துறை அமைச்சகமும் விளக்கம் அளித்து இருந்தது.
அதே நேரத்தில் இந்தியாவின் தாக்குதல் போர் நடவடிக்கை தான் என்றும் அதற்கு தக்க பதிலடி வழங்கப்படும் என பாகிஸ்தான் கொக்கரித்தது எந்த நேரமும் இரு நாடுகளிடையே போர் ஏற்படலாம் என்ற சூழ்நிலையில் வியாழக்கிழமை அதிகாலையில் சீனா வழங்கிய ஏவுகணைகளை கொண்டு பாகிஸ்தான் இந்தியா எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்தியது.

அதே நேரத்தில் ரஷ்யா வழங்கிய பாதுகாப்பு அமைப்புகளை கொண்டு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. மேலும் பதிலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை இந்திய ராணுவம் அழித்தது. இதற்கிடையே வியாழக்கிழமை இரவு நேரத்தில் பாகிஸ்தான் திடீரென இந்திய எல்லைப் பகுதிகளில் தாக்குதலை நடத்த தொடங்கியது. இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதோடு பாகிஸ்தானின் எஃப் 16, ஜே எஃப் 17 ஆகிய போர் விமானங்கள் எல்லை பகுதிகளில் அத்துமீறி நுழைய முயன்றது. இதை அடுத்து இந்திய நிலைகளை குறிவைத்து வந்த பாகிஸ்தானின் மூன்று விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது.
இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்தியாவின் ராணுவம், விமானப்படை, கப்பற்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடியுடன் அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற நிலையில் பாதுகாப்புத் துறைகள் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தற்போதைய நிலை குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications