இந்திய ராணுவம் திரும்பி போகாவிட்டால் பெரும் விலை கொடுக்க வேண்டிவரும்.. சீன அரசு நாளிதழ் கொக்கரிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெய்ஜீங்: சிக்கிம் பகுதியில் உள்ள இந்திய - சீன எல்லையில் உள்ள ராணுவ படையை திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் விரட்டியடிப்போம் என்று சீன அரசு நாளிதழ் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

சிக்கிம் மாநிலத்தை ஒட்டி இந்தியா - சீன எல்லை அமைந்துள்ளது. வரையறுக்கப்படாத இந்த எல்லையில் டோக்லாம் பகுதியில் கடந்த 3 வாரங்களுக்கு முன், அதாவது ஜூன் 6-ஆம் தேதி சீன ராணுவத்தினர் சாலை போடும் பணியில் ஈடுபட்டனர்.

இதை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். சாலை அமைக்கும் பணியை நிறுத்த இந்தியா சீனா எல்லையை தாண்டியது அத்துமீறல் என்றுசீன ராணுவம் கூறிவருகிறது.

கடந்த 1962-ஆம் ஆண்டில் இருந்த இந்தியா வேறு , தற்போது 2017-இல்வை உள்ள இந்தியா வேறு என்று இந்தியா சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கடந்த 20 நாள்களாக சிக்கிம் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

சீன நாளிதழ்

சீன நாளிதழ்

பதற்றம் நிலவிய சிக்கிம் எல்லையில் இந்திய வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து சீனாவின் அரசு நாளேடான குளோபல் டைம்ஸ் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சிக்கிம் எல்லையில் இந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளது ஏற்றுக் கொள்ளமுடியாதது.

விரட்டியடிப்போம்

விரட்டியடிப்போம்

எல்லையில் சீனா போர் தொடுத்தால் கடந்த 1962-ஆம் ஆண்டில் ஏற்பட்ட இழப்பைக் காட்டிலும் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். இந்தியாவுக்கு கசப்பான அனுபவத்தையும் கற்றுக் கொடுப்போம்.

இவர்களே போதுமானவர்கள்

இவர்களே போதுமானவர்கள்

இந்திய ராணுவத்தினரை சீன எல்லையில் இருந்து விரட்டியடிக்க ராணுவம் எல்லாம் தேவையில்லை, சீன மக்கள் விடுதலை ராணுவம் என்ற அமைப்பே போதுமானது என்று நாங்கள் நம்புகிறோம். இந்திய எல்லைக்கு அந்த நாட்டு ராணுவத்தினர் கண்ணியத்துடன் செல்ல விரும்புங்கள். இல்லாவிடில், சீன ராணுவத்தினரால் விரட்டியடிக்கப்படுவர் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவுக்கு உரிமை

சீனாவுக்கு உரிமை

சாலை அமைக்கும் சிக்கிமின் டோக்லாம் பகுதி பூடான் சொந்தம் கொண்டாடும் பகுதியாகும். அங்கு சீனா சாலை அமைப்பது விதிமீறல் என்கிறது இந்தியா. ஆனால் சீனாவோ, சாலை போடும் பகுதி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் போது கடந்த 1890-இல் தங்கள் கட்டுப்பாட்டில் வர பிரிட்டன் நாட்டுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதால் சாலை அமைக்க அனைத்து உரிமைகளும் உள்ளதாக சீனா அழுத்தந்திருத்தமாக கூறுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
China warned India that it will offer "no compromise" on the stand-off at the Sikkim border, its state-run media declared that Delhi should either withdraw its troops "with dignity or be kicked out
Please Wait while comments are loading...