ரஷ்யாவை கைவிடாத இந்தியா.. கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதா மத்திய அரசு? புதின் தரப்பு விளக்கம்
மாஸ்கோ: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கான வரியை 18 சதவீதமாக குறைத்துள்ளார். மேலும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும். அதற்கு பதில் அமெரிக்கா, வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் தான் ரஷ்யா முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது.
நம் நாடும், ரஷ்யாவும் நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. இந்த நட்பு பல தசாப்தங்களாக தொடர்ந்து வருகிறது. நம் நாட்டின் ராணுவ தளவாடங்களில் பெரும்பாலானவை ரஷ்யாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இப்படி சிறப்பான நட்பு இன்று வரை தொடர்ந்து வருகிறது. அதேபோல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் பிரதமர் மோடி இடையே இருக்கும் நல்ல உறவு தொடர்ந்து வருகிறது.

உறவை பிரிக்கும் டிரம்ப்
உக்ரைன் போரால் ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்தாலும் நம் நாடு அதனை செய்யவில்லை. பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண வேண்டும் இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
இதற்கிடையே தான் நம் நாட்டுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான உறவை சீர்குலைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முயன்று வருகிறார். டிரம்ப் அதிபரானதுமே நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை விதித்தார்.
50 சதவீத வரி
இதில் வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி 25 சதவீதமும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி இன்னொரு 25 சதவீதம் என்று 50 சதவீத வரியை விதித்தார்.
மேலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் நம் நாடு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது.
வரியை குறைக்கும் டிரம்ப்
இதற்கிடையே தான் நேற்று முன்தினம் டிரம்ப் - பிரதமர் மோடி ஆகியோர் தொலைபேசியில் பேசினர். இருதரப்பு வர்த்தகம் பற்றி விவாதித்தனர். இதுபற்றி டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் வலைதளத்தில் கூறியுள்ளதாவது:
‛‛இந்தியா மீது விதிக்கப்பட்ட வர்த்தக பற்றாக்குறைக்கான வரி 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு பதில் அமெரிக்கா, வெனிசுலாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும். மேலும் எரிசக்தி, விவசாயம் உள்பட பல்வேறு துறைகளில் 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தை செய்வதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
ரஷ்யாவை கைவிடுகிறதா இந்தியா?
இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் ரஷ்யா நம்முடைய நெருக்கமான அதேவேளையில் நம்பிக்கையான நண்பன். ஆனால் அமெரிக்கா அப்படி கிடையாது. அமெரிக்காவை பல நாடுகளை பாதியில் கைவிட்டுள்ளது.
இதனால் அமெரிக்காவுக்காக நம் நாடு, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்துகிறதா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இதுபற்றி டிரம்ப் தான் இப்படி கூறி உள்ளாரே தவிர பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு சார்பில் இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை.
ரஷ்யா தந்த விளக்கம்
இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்ப் கூறி வரும் தகவலை ரஷ்யா முற்றிலுமாக மறுத்துள்ளது. ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‛‛ கச்சா எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்துவதாக இந்தியாவிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் வரவில்லை'' என்று கூறியுள்ளார்.
அதேபோல் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் டிமிட்ரி பெஸ்கோவ், ‛‛இந்தியா உடன் எங்களின் கூட்டணி மிகவும் முக்கியமானது. எங்கள் நாடுகளுக்கு இடையேயான எரிசக்தி ஒப்பந்தங்களில் இப்போது வரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதோடு இந்தியாவுடன் எங்களின் உறவை தொடர்ந்து வளர்ப்பது தான் ரஷ்யாவின் நோக்கமாக உள்ளது'' என்று கூறியுள்ளார்.
இந்தியா கைவிட்டால் ரஷ்யா என்னவாகும்?
இந்தியாவை எடுத்து கொண்டால் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வாய்ப்பில்லை. மாறாக தற்காலிகமாக குறைக்கலாம் என்று சர்வதேச அரசியல் வல்லுநர்கள் நினைக்கின்றனர். ஆனால் ரஷ்யாவை முற்றிலுமாக புறக்கணிக்கும்படி டிரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பார். ஒருவேளை இந்தியா, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் அது அந்த நாட்டுக்கு பெரும் இழப்பாக அமையும்.
ஏனென்றால் உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இப்படி இருக்கும்போது நம் நாடு உடனான கச்சா எண்ணெய் வர்த்தகம் ரஷ்யாவுக்கு மிகவும் முக்கியம். இதனை ரஷ்யா , இந்தியாவுக்கும் தெரியும். இதனால் இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கிறது? என்பதை அறிய நாம் கொஞ்சம் வெயிட் செய்ய வேண்டும்.
-
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
ஒட்டுமொத்த இணையமும் முடங்கும்.. ஆட்டம் காட்டும் டெலிகிராம்.. தடைக்கு பிறகும் இயங்குவது எப்படி -
இந்தியாவுக்கு சிக்கல் தொடரும்.. ஹார்முஸ் திறக்கப்பட்டாலும் கூட எல்லா பிரச்சனையும் உடனே தீராது! -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
நான் வந்துட்டேன்னு சொல்லு.. தலைநிமிர்ந்த தங்கம்! ஒரே அறிவிப்பால் திடுக்குனு உயர்ந்த விலை! என்னாச்சு? -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி












Click it and Unblock the Notifications