For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனாவில் உள்ள இந்திய வங்கிகள் கூட பழைய ரூபாய் நோட்டுக்களை வாங்குவதில்லையாம்

சீனாவில் செயல்பட்டு வரும் இந்திய வங்கி அண்மையில் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500,1000 ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் வாழும் இந்தியர்கள் அண்மையில் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்களை அங்குள்ள இந்திய வங்கிகளில் டெப்பாசிட் செய்ய இயலவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

சீனா அல்லது ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் இந்திய வங்கிக் கிளைகளில் 500, 1000 ரூபாய் பழைய நோட்டுக்களை டெப்பாசிட் செய்ய இயலாது என இந்திய தூதரக அதிகாரிகள் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

Indian banks in China not to accept demonetised bank notes

ஆனாலும் இந்தியாவில் உள்ள யாரேனும் ஒருவருடைய வங்கிக் கணக்கில் அவரது அனுமதியுடன் பழைய நோட்டுக்களை டெபபாசிட் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அதற்கு சம்பந்தப்பட்ட நபர்கள் வழங்கும் அனுமதி கடிதமும் தங்களுடைய அடையாள ஆவணங்களும் எடுத்துச் சென்று குறிப்பிட்ட பணத்தை டெப்பாசிட் செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அதில் பெரும்பாலானோர் பெய்ஜிங், சாங்காய்,காங்குழு ஆகிய நகரங்களில் வசிக்கின்றனர். அங்குள்ள 7 இந்திய வங்கிகளில் இரண்டு தனியார் வங்கிகளாகும்.

சீன இந்திய வங்கிகளின் நடவடிக்கையால் அங்கு வாழும் இந்திய மக்கள் பழைய நோட்டுக்களை மாற்ற முடியால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதுகுறித்து பெய்ஜிங்கில் உள்ள இஷா லூத்ரா என்ற பெண் கூறியிருப்பதாவது: இந்த நடவடிக்கை ஏற்புடையதக இல்லை என்று தெரவித்தார்.

வரும் டிசம்பர் மாதம் 30-ஆம் தேதிக்கு முன்பாக இந்தியா சென்று வர இருப்பதாக அவர் கூறினார். 500 ,1000 ரூபாய் பழைய நோட்டுக்களை வங்கியில் மாற்றுவதற்கு டிசம்பர் 30 தேதிதான் கடைசி நாளாகும்.

கடந்த 8 ஆம் தேதி நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். இந்நிலையில் சாதாரண மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

English summary
Beijing: Indians living in China cannot deposit the scrapped currency notes of Rs 500 and 1,000 at Indian bank branches here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X