உஸ்பெகிஸ்தானை தொடர்ந்து.. ஈராக்கிலும் அம்பலமான இந்திய இருமல் மருந்து! நச்சு தாராளம்.. ஆய்வில் ஷாக்
பாக்தாத்: இந்தியாவிடமிருந்து வாங்கப்பட்ட இருமல் மருந்தில் 'நச்சு' ரசாயனங்கள் அதிக அளவில் இருப்பதாக ஈராக்கில் செயல்படும் அமெரிக்காவை சேர்ந்த ஆய்வகம் ஒன்று அதிர்ச்சி ரிப்போர்ட்டை வெளியிட்டிருக்கிறது. ஏற்கெனவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இருமல் மருந்தை சாப்பிட்ட உஸ்பெகிஸ்தானை சேர்ந்த 18 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்திருந்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது இந்த ரிப்போர்ட்ட வெளியாகியுள்ளது.
உஸ்பெகிஸ்தானில் கடந்த ஆண்டு டிசம்பரில் டாக்-1 மேக்ஸ்(Doc-1 Max) எனும் இருமல் சிரப்பை குடித்த குழந்தகளில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தியாவின் டெல்லி அருகே உள்ள நொய்டாவில் இந்த இருமல் மருந்து மரியான் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்த மருந்துகள் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இவ்வாறு இந்த மருந்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் உஸ்பெகிஸ்தானும் ஒன்று.

இந்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பரில் சில குழந்தைகள் உடல் நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன. இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் Doc-1 Max எனும் இருமல் மருந்தை இவர்கள் அதிக அளவில் எடுத்துக்கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. அதாவது இந்த சிரப்களில் 'எத்திலீன் கிளைகோல்' எனும் நச்சு பொருள் கலக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த சிரப்பை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் கிளினிக்கில் உள்ளவர்களின் பரிந்துரையின் பெயரில் குழந்தைகளுக்கு அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது இந்த சிரப்பை 2.5 முதல் 5 மில்லி அளவுகளில் ஒரு நாளைக்கு 3-4 வேளைகள் வரை வழங்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது பரிந்துரைக்கப்பட்ட அளவுகளை விட அதிகமான அளவாகும். இதன் காரணமாக சுமார் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஈரானில் விற்கப்பட்ட இதே போன்ற மற்றொரு இருமல் மருந்திலும் அனுமதிக்கப்பட்ட அளவை விட 'எத்திலீன் கிளைகோல்' எனும் ரசாயனம் 21 சதவிகிதம் அதிகமாக கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 'ப்ளூம்பெர்க்' நடத்திய சமீபத்திய தேடலில் இந்த உண்மை வெளியே வந்திருக்கிறது. அதாவது அமெரிக்காவை சேர்ந்த Valisure LLC எனும் ஆய்வு நிறுவனம் லாப நோக்கமின்றி இதுபோன்ற மருந்துகளை பரிசோதனை செய்து முடிவுகளை வெளியிட்டு வருகிறது.
இப்படி சமீபத்தில் இந்தியாவை சேர்ந்த இருமல் சிரப் ஒன்றை ஆய்வு செய்தபோதுதான் அதில் 'எத்திலீன் கிளைகோல்' அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கலந்திருப்பது தெரியவந்தது. இந்த ஆய்வறிக்கையைதான் ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ளது. மட்டுமல்லது ப்ளூம்பெர்க் இந்த அறிக்கையை உலக சுகாதார நிறுவனத்திடமும், ஈராக் மற்றும் இந்திய அதிகாரிகளிடமும் பகிர்ந்துக்கொண்டுள்ளது. இந்த சிரப்-ஐ சென்னையை சேர்ந்த Fourrts (India) Pvt Ltd எனும் நிறுவனம்தான் தயாரிக்கிறது.
அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் எத்திலீன் கிளைகோல் கலந்த மருந்தை இறக்குமதி செய்வது குறித்து ஈராக் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் மீடியாக்கள் கேட்டபோது பதில் ஏதும் கூறவில்லை. உலக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி இதுபோன்ற இருமல் சிரப்களில் எத்திலீன் கிளைகோல் வெறும் 0.1 சதவிகிதம் மட்டுமே இருக்க வேண்டும். இதை விட அதிகமாக கலந்தால் அது மருந்தை நச்சாக்கிவிடும்.
ஆனால் தற்போது Fourrts (India) Pvt Ltd நிறுவனத்தின் சிரப்பில் 2.1 சதவிகிதம் இது கலக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து தற்போது வரை இது போன்று எத்திலீன் கிளைகோல் அதிக அளவில் இருக்கும் மருந்துகளை உட்கொண்டதால் இந்தோனேஷியா தொடங்கி லைபிரியா வரை 5 நாடுகளை சேர்ந்த குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications