வெடித்த ராணுவ புரட்சி.. அதிகரிக்கும் பதற்றம்! நைஜர் நாட்டு இந்தியர்களுக்கு மேஜர் ‛அட்வைஸ்’
நியாமே: நைஜர் நாட்டில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில் மக்களாட்சி வீழ்த்தப்பட்டுள்ளது. அங்குள்ள விமான நிலையங்கள் மூட வாய்ப்பு உள்ளதால் தேவையின்றி அங்கிருக்கும் இந்தியர்கள் சீக்கிரமாக வெளியேற வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக நைஜர் உள்ளது. இந்த நாட்டின் அதிபராக முகமது பாசும் உள்ளார். இந்நிலையில் தான் சில மாதங்களாக அங்கு ராணுவ புரட்சி ஏற்படலாம் என்ற சூழல் நிலவி வந்தது.
அதாவது அதிபர் முகமது பாசுக்கு எதிராக ராணுவம் திரண்டு கிளர்ச்சி செய்யலாம் என்ற தகவல்கள் பரவின. இதனால் அந்த நாட்டில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதற்கிடையே தான் கடந்த மாதம் இறுதியில் நைஜர் நாட்டில் ராணுவ புரட்சி ஏற்பட்டது. அந்நாட்டு ராணுவம் திடீரென ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் ஏற்பட்டது. மேலும் அதிபர் முகமது பாசுமை அந்தநாட்டு ராணுவம் அதிரடியாக கைது செய்தது. அதிபர் கைது செய்யப்பட்டு இருப்பதன் மூலம் அந்த நாடு தற்போது ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
நைஜர் நாட்டு ராணுவத்தின் இந்த செயலுக்கு ஐநா, ஆப்பிரிக்கா ஒன்றியம் உள்பட பல்வேறு உலக அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தான் நைஜர் நாட்டில் இருக்கும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முக்கிய அட்வைஸ் வழங்கி உள்ளது. இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:

நைஜர் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் தேவையின்றி அங்கிருக்கும் இந்தியவர்கள் விரைவில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். நாட்டை விட்டு வெளியேறும்போது மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும். அங்கு நிலைமை மோசமாக உள்ளது. இதனால் நைஜர் நாட்டுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளவர்கள் அதனை ஒத்திவைக்க வேண்டும். நிலைமை சீரான பிறகு அங்கு பயணம் செய்வது சிறந்த முடிவாக இருக்கும்.
நைஜர் நாடு என்பது பிற ஆப்பிரிக்க நாடுகளை போலவே பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. மேற்கு, மத்திய ஆப்பிரிக்காவில் பல நாடுகளில் தற்போது ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கை அரங்கேறியுள்ளது. அதாவது கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் நைஜர் நாட்டுடன் சேர்ந்து மொத்தம் 7 இடங்களில் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications