அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக் கொன்ற 16 வயது கொள்ளையன்
நியூயார்க்: அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இந்தியர் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் 16 வயது சிறுவனும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் வசித்து வந்தவர் இந்தியரான மானவ் தேசி. 30களில் இருக்கும் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரும், அவரது வருங்கால மனைவியும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கரோலினாவில் இருந்து புளோரிடா மாநிலத்திற்கு வந்துள்ளனர்.

புளோரிடாவின் புனித அகஸ்டின் பகுதியில் உள்ள பலசரக்கு கடையில் கிளார்க்காக மானவ் வேலை பார்த்து வந்தார். நேற்று 16 வயது சிறுவன் முகத்தில் கைக்குட்டையை கட்டிக் கொண்டு கடைக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றார்.
இதை பார்த்த மானவ் அவரை தடுக்க முயன்றபோது சிறுவன் அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் மானவ் சம்பவ இடத்திலேயே பலியானார். தப்பியோடிய சிறுவன் மற்றும் அவரது நண்பரை போலீசார் விரட்டிச் சென்று கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த மானவின் பெற்றோர் இந்தியாவில் இருந்து புளோரிடாவுக்கு கிளம்பிச் சென்றுள்ளனர். முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் கனக்டிகட் மாநிலத்தில் கேஸ் நிலையத்தில் பணிபுரிந்த 39 வயது சஞ்சய் பட்டேல் 2 கொள்ளையர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications