காதலனுக்காக குடும்பத்தை விட்டு பாகிஸ்தான் சென்ற அஞ்சு.. மீண்டும் இந்தியா திரும்புகிறார்! என்னாச்சு
இஸ்லாமாபாத்: ஆன்லைன் காதலுக்காகத் தனது குடும்பத்தை விட்டுவிட்டு பாகிஸ்தான் சென்ற பெண் திடீரென இந்தியா திரும்ப உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
இந்த நவீனக் காலத்தில் ஆன்லைன் மூலம் தான் எல்லாமே நடக்கிறது. ஷாப்பிங் முதல் உணவு டெலிவரி வரை இப்போது அனைத்துமே இணையம் வாயிலாகவே நடைபெறுகிறது. பல காதல் சம்பவங்களும் கூட இணையத்தில் மலர்ந்துள்ளது.

அதிலும் குறிப்பாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது இந்தியக் காதலனைச் சந்திக்க நேபாளம் வழியாக இந்தியா வந்திருந்தார். அது அப்போதோ பரபரப்பைக் கிளப்பியிருந்தது.
அஞ்சு: அதேபோல பேஸ்புக் மூலம் எல்லைகளை கடந்து மலர்ந்த மற்றொரு காதல் தான் இது.. ராஜஸ்தான் மாநிலத்தில் வசித்து வந்த பெண் அஞ்சு. இவருக்கு அங்கே அரவிந்த் என்ற நபருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகளும் இருந்துள்ளான். கடந்த 2019இல் இவருக்கு பேஸ்புக் மூலம் நஸ்ருல்லா என்ற நபருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் பேஸ்புக்கிலேயே பேசி பழகி வந்துள்ளனர்.
நாளடைவில் அந்த பேச்சு அப்படியே காதலாக மாறியுள்ளது. நஸ்ருல்லா பாகிஸ்தானில் இருப்பதைத் தெரிந்த அஞ்சு, அவரை திருமணமும் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். தனது கணவரையும் மகனையும் தனியாக விட்டுவிட்டு அஞ்சு பாகிஸ்தானுக்குச் சென்றார். உரிய விசா எடுத்துவிட்டே அவர் பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார். அங்குச் சென்ற அஞ்சு இஸ்லாமிய மதத்திற்கு மாறியுள்ளார். இதையடுத்து கடந்த ஜூலை மாதம் அஞ்சு நஸ்ருல்லா திருமணம் நடந்துள்ளது.
பாகிஸ்தான் அரசு: பாகிஸ்தான் அரசு அஞ்சுவின் விசாவை நீட்டித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. இதற்கிடையே 34 வயதான அஞ்சு விரைவில் இந்தியாவுக்கு வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் அரசின் அனுமதி பெற்ற பிறகு அஞ்சு இந்தியாவுக்கு வர உள்ளதாக அவரது பாகிஸ்தான் கணவர் தெரிவித்தார்.
இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிறகு பாத்திமா என்று தனது பெயரை அஞ்சு மாற்றியுள்ள நிலையில், பாகிஸ்தான் அரசு அவரது விசாவை ஒரு ஆண்டு நீட்டித்துள்ளது. இந்தச் சூழலில் தான் அவர் இந்தியா திரும்ப உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அவரது பாகிஸ்தான் கணவர் நஸ்ருல்லா சில முக்கிய தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.
நோ ஆப்ஜெக்ஷன் சான்றிதழ்: இது தொடர்பாக நஸ்ருல்லா மேலும் கூறுகையில், "நாங்கள் பாகிஸ்தான் அரசிடம் இருந்து நோ ஆப்ஜெக்ஷன் சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ளோம். அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறோம். இந்த பிராசஸ் நீண்ட காலம் எடுக்கும் என எங்களுக்குத் தெரியும். இந்த அனுமதி கிடைத்தவுடன் அவர் இந்தியாவுக்குச் செல்வார்.
இந்த ஆவணங்கள் எல்லாம் ரெடியான உடன் வாகா எல்லை வழியாக அஞ்சு இந்தியா செல்கிறார். அவர் தனது குழந்தைகளைச் சந்திக்கவே இந்தியா வருகிறார். குழந்தைகளைச் சந்தித்துவிட்டு, அவர் மீண்டும் பாகிஸ்தானுக்கு வந்துவிடுவார். குழந்தைகளைப் பார்க்க மட்டுமே அவர் இந்தியா செல்கிறார். சீக்கிரம் அவர் மீண்டும் பாகிஸ்தான் வந்துவிடுவார்.
முன்னதாக கடந்த மாதமே அஞ்சுவின் நஸ்ருல்லா, தனது மனைவி பாத்திரமா அவரது குழந்தைகளை மிஸ் செய்வதாகவும் இதனால் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார். அப்போதே அவர் இந்தியா வரக்கூடும் என சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் தான் அஞ்சு மீண்டும் இந்தியா திரும்ப உள்ளதாக நஸ்ருல்லா தெரிவித்துள்ளார்.
-
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications