1000 சிறுவர்களின் ஆபாசப் படம் வைத்திருந்த இந்தியரை 10 ஆண்டுகள் கண்காணிக்க உத்தரவு
அமெரிக்காவில் 1000 சிறுவர்கள் ஆபாசப் படம் வைத்திருந்த இந்திய இளைஞரை 10 ஆண்டுகள் கண்காணிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பென்சில்வேனியா: அமெரிக்காவில் வசிக்கும் இந்திய இளைஞர் ஒருவர் 1000 சிறுவர்களின் ஆபாசப் போட்டோக்களை வைத்திருந்ததற்காக அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. தண்டனைக் காலம் முடிந்தபின்னர், அந்த இளைஞரை 10 ஆண்டுகள் கண்காணிக்க வேண்டும் அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலகம் முழுவதும் பல நாடுகளில் சிறுவர்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள் நடந்துவருகிறது. அதில் குழந்தைகள், சிறுவர்களை பாலியல் ரீதியாக ஆபாசப் படம் எடுத்து இணையத்தில் வெளியிடுவது ஒரு பெரும் வணிகமாகவே நடந்துவருகிறது. சிறுவர்களை ஆபாசப் படம் எடுத்து வெளியிடுவதை தடுக்க சட்டமும் உள்ளது. ஆனாலும், அதையும் மீறி சிறுவர்களின் ஆபாசப் படம் ஒரு பெரும் வணிகமாக பரவி வருகிறது. அதற்கு காரணம் சிறுவர்களின் ஆபாசப் படம் பார்க்கும் பீடோஃபைல் நபர்கள் இருப்பதே காரணம்.

இந்தியாவைச் சேர்ந்த அபிஜீத் தாஸ் என்ற 28 வயது இளைஞர் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ் பர்க் என்ற இடத்தில் வசித்து வந்துள்ளார்.
அபிஜீத் தாஸ் தனது கணினியில் 1000 குழந்தைகள் ஆபாச போட்டோக்கள், 380 சிறுவர்கள் ஆபாச வீடியோக்களை வைத்திருந்துள்ளார்.
பதினெட்டு வயதுக்கு குறைவான சிறுவர்களின் ஆபாச படங்கள் வைத்திருப்பது குற்றம் என்பதால், அபிஜீத் தாஸ் சிறுவர்களின் ஆபாசப் படங்கள் கண்டறியப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் அபிஜீத் தாஸுக்கு சிறுவர்கள் ஆபாசப் படம் வைத்திருந்ததற்காக அந்நாட்டு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது.
அபிஜீத் தாஸ் அமெரிக்காவில் 4 ஆண்டு சிறைதண்டனையை முழுமையாக அனுபவித்த நிலையில், அவரை விடுதலை செய்வது குறித்து நீதிமன்றம் பரிசீலனை செய்தது. பரிசீலனைக்குப் பிறகு, அபிஜீத் தாஸ் தண்டனை முழுவதையும் அனுபவித்திருந்தாலும், அவர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறாரா என்று அவருடைய செயல்பாடுகளை போலீஸார் 10 ஆண்டுகளுக்கு கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்கா குற்றவாளிகள் தண்டனை காலத்தை முடித்துவிட்டால் அப்படியே விட்டுவிடுவது இல்லை. குற்றம் செய்தவர்கள் விடுதலையான பிறகும் அவர்களை கண்காணிப்பதால் அவர்கள் மீண்டும் குற்ற நடவடிக்கையில் ஈடுபடுவது தடுக்கப்படுகிறது.
-
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு












Click it and Unblock the Notifications