எட்டு கால் பூச்சியைப் பார்த்து 9 வயது மகனை காரிலேயே விட்டுவிட்டு பயந்து ஓடிய பெண்!
நியூயார்க்: அமெரிக்காவில் காரில் எட்டுக் கால் பூச்சி இருந்த காரணத்தினால் 9 வயது மகனை காரிலேயே விட்டுவிட்டு பெண் ஒருவர் ஓடிய சம்பவம் கலகலப்பினையும், பரபரப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏஞ்சலா கிப் தனது ஒன்பது வயது மகனுடன் அமெரிக்காவின் வட இந்தியானா மாநிலத்தில் உள்ள சைராக்யூஸ் நகரத்தில் காரில் பயணித்துக் கொண்டிருந்தார்.

உணவு இடைவெளிக்காக நிறுத்தியிருந்த காரை ரிவர்ஸ் கியரில் இயக்கி கிளம்பத் தயாரானார். அப்போது தனது தோள் மீது ஏதோ ஏறுவதை உணர்ந்த ஏஞ்சலா திடுக்கிட்டார்.
அலறியடித்த ஏஞ்சலா:
தோளில் ஏறிய எட்டுக்கால் பூச்சியப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் மகன் காரில் இருப்பதையும் மறந்து, அலறியடித்தபடி காரிலிருந்து சட்டென எகிறி வெளியில் குதித்தார்.
பள்ளி வாகனம் மீது மோதிய கார்:
பின்நோக்கி சென்று கொண்டிருந்த காரில் இருந்த அவரது மகன் அருகிலிருந்த பள்ளி வாகனத்தின் மீது கார் மோதப்போவதை உணர்ந்து அவசரமாக காரை நிறுத்தும் முயற்சியில் பிரேக் போட முற்பட்டபோது தவறுதலாக ஆக்ஸிலேட்டரை அழுத்திவிட முன்பைவிட அதிக வேகம் பிடித்த கார் அந்தப் பள்ளி வாகனத்தின் மீது மோதியே விட்டது.
தலையில் சிறிய காயம்:
மோதிய வேகத்தில் காரின் பின்பகுதி அப்பளமாக நசுங்கியது. நல்ல வேளையாக அந்தப் பள்ளி வாகனத்தில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் உண்டாகவில்லை. ஏஞ்சலாவின் மகனுக்கு மட்டும் தலையில் சிறிய காயம் ஏற்பட்டது.
பயத்தால் தண்டனை இல்லை:
பொதுவாக அமெரிக்காவில் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும்படி நடந்துகொள்ளும் பெற்றோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். ஆனால், ஏஞ்சாலா விவாகாரத்தைப் பொறுத்தவரை அவரே பயந்துபோய் இப்படி செய்தார் என்பதால் தண்டனைகள் ஏதும் இல்லை என அப்பகுதி போலீசார் தெரிவித்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications