சுற்றுலா பயணிகளுக்கு வாடகை மனைவிகளாகும் பெண்கள்! ஒவ்வொரு பெண்ணுக்கும் 15, 20 கல்யாணம் ஆகியிருக்காமே
ஜகார்த்தா: வறுமையின் நிறம் சிகப்பு என்பார்கள். ஒரு ஜான் வயிற்றுக்காக மக்கள் எத்தனை பாடுபட்டு சம்பாதிக்கிறார்கள் என்பதை வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. இதில் யாசகம் கேட்போர், பட்டினி கிடப்போரின் நிலை மேலும் பரிதாபத்துக்குரியது.
வயிற்று பிழைப்புக்காக பல நாடுகளில் பாலியல் தொழிலும் அனுமதிக்கப்படுகிறது. அது போல் இந்தியாவிலும் மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் இதற்கென தனியிடங்கள் உள்ளன. அது போல் பாலியல் தொழில் சட்டப்படி குற்றம் என அறிவிக்கப்பட்ட மாநிலங்களில் போலீஸுக்கு தெரியாமல் இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் இது எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு இந்தோனேசியாவில் ஒரு சம்பவம் நடைபெறுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புன்காக் என்ற பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.
இது மேற்கு ஜாவாவில் உள்ள பிரசித்தி பெற்ற மலையாகும். இது போகர் மற்றும் பான்டுங் ஆகிய இரு நகரங்களை இணைக்கிறது. இது எப்போதும் குளிர்ச்சியான சூழலும் தேயிலை தோட்டங்களும் மனதிற்கு இதமளிக்கும் விஷயங்களும் நடைபெறும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் குதிரை சவாரி செய்வர், முயல்களுக்கு உணவளிப்பர், பசுக்களில் இருந்து பால் கறப்பர்.
இந்த இடத்திற்கு சுற்றுலா வர ஏற்ற காலம் மார்ச் முதல் மே மாதம் வரையாகும். இந்த காலகட்டத்தில் ஹோட்டல் அறைகளின் வாடகை குறைவாக இருக்கும். ஆனால் செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்த ஹோட்டல்களில் தங்கும் அறைகளின் வாடகை பல மடங்கு அதிகரிக்கும்.
இந்த புன்காக் பகுதி ஜகார்த்தாவின் தெற்கு பகுதியில் இருந்து 100 கி.மீ. தூரத்தில் உள்ளது. புன்காக் என்றால் சிகரம் என்று அர்த்தம். கோட்டா புங்கா என்ற இடத்தில் மலை பகுதியில் ரிசார்ட் இருக்கிறது. இங்கு தங்கி புன்காக்கின் அழகை ரசிக்க மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளில் குடும்பத்தினருடன் வராமல் நண்பர்களுடன் , உடன் பணியாற்றுவோருடன் வரும் ஆண்களுக்கு அங்குள்ள ஏஜென்சிகள் மூலம் இளமையான உள்ளூர் பெண்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். அவ்வாறு அறிமுகமாகும் பெண்களில் ஆண்களுக்கு யாரை பிடிக்கிறதோ அவர்களுக்கு அந்த பெண்ணுடன் தற்காலிகமாக திருமணம் செய்து வைக்கிறார்கள்.
இதற்காக அந்த பெண்ணுக்கு ஒரு அதிக தொகை கொடுக்கப்படுகிறது. இதையடுத்து புதுமணத் தம்பதிகள் தாம்பத்யத்தில் ஈடுபடுவார்கள். அந்த ஆண் பயணி எத்தனை நாட்களுக்கு அங்கு தங்குகிறாரோ அதுவரை இருவரும் குடும்பம் நடத்துவார்கள்.
ஆனால் அந்த ஆண் எப்போது தனது நாட்டிற்கு செல்கிறாரோ அப்போதே அந்த திருமண பந்தம் முறிந்துவிடும். அதன் பிறகு அவர் யாரோ இவர் யாரோ! அடுத்தது இதே போல் இன்னொரு திருமணம் நடக்கும். அந்த நபருடன் தங்கியிருக்கும் கால கட்டத்தில் பாலியல் இச்சைகளை தீர்த்து வைப்பது இல்லாமல் அந்த நபருக்கு சமைத்து போடுவது, துணி துவைத்து போடுவது, அறையை சுத்தப்படுத்துவது என வீட்டு வேலைகளையும் செய்வார்கள்.
இதெல்லாம் அந்த பெண்கள் ஏழ்மையை போக்க செய்யும் கொடூரமான ஒப்பந்தமாகும். இது குறித்து ஒரு பெண் கூறுகையில், "எனக்கு 17 வயது இருக்கும் போது நானும் தற்காலிக திருமணம் செய்துக் கொண்டேன். அது போல் இதுவரை 15 முறை திருமணம் செய்து கொண்டேன். எனது 17 வயதில் முதல் முதலில் தற்காலிக கணவராக வந்த சவுதி அரேபியாவை சேர்ந்த 50 வயது நபர் , எனக்கு 850 அமெரிக்க டாலர்களை விலையாக கொடுத்தார்.
அந்த பணத்தில் எனக்கு பாதி தொகைதான் வந்தது. மீதமுள்ளதை ஏஜென்ட்டுகள் பறித்துக் கொண்டார்கள். 5 நாட்கள் அந்த நபருடன் குடும்பம் நடத்திய நிலையில் அவர் தனது நாட்டிற்கு திரும்பியவுடன் அந்த திருமணம் செல்லாததாகிவிட்டது. ஒரு திருமணத்திற்கு 300 முதல் 500 அமெரிக்க டாலர்களை நான் சம்பாதிப்பேன். அதைக் கொண்டு என் தாத்தா பாட்டியை பார்த்துக் கொள்கிறேன் என்றார். அது போல் இன்னொரு பெண் கூறுகையில், எனக்கு இதுவரை 20 திருமணங்கள் நடந்துள்ளன. பிறகு எனக்கு உண்மையில் திருமணம் நடந்து இரு குழந்தைகள் இருக்கிறார்கள். இனி நான் என் பழைய வாழ்க்கைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications