“இந்தியா எங்கள் நண்பன்”.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களை அனுமதிக்கும் ஈரான்! ஸ்பெஷல் பவர்!
தெஹ்ரான்: கடும் மோதல்களுக்கு மத்தியில், 'ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பான வழித்தடம் வழங்கப்படும்' என்று இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபத்தாலி உறுதி அளித்துள்ளார்.
அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பது உட்பட பல்வேறு காரணங்களை முன்வைத்து ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இருதரப்புக்கும் இடையில் சமரசம் ஏற்படவில்லை.

ஈரான் கடல் பகுதியை ஒட்டியுள்ள ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடப்பதால், பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த வழியாகவே கச்சா எண்ணெய் வருவதால், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக இந்தியாவில் எல்பிஜி கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அரபிக் கடலில் பெர்சியன் வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் ஹார்முஸ் ஜலசந்தி இணைக்கிறது. இது 167 கி.மீ நீளம், 50 கி.மீ அகலம் கொண்டது. இந்த ஜலசந்தியின் குறிப்பிட்ட சில பகுதிகளில் 33 கி.மீ. அகலம் மட்டுமே உள்ளது. அதிலும் கடல் ஆழமாக உள்ள 3 கி.மீ. அகலம் கொண்ட பகுதி வழியாகவே சரக்கு கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது. இது ஈரான் கடல் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.
தற்போது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவம் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்தை ஈரான் ராணுவம் முழுமையாக முடக்கி உள்ளது. இதன் காரணமாக இந்தியா உட்பட உலகம் முழுவதும் எல்பிஜி, சிஎன்ஜி, கச்சா எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் சுதந்திரமான சரக்கு கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக அப்பகுதியில் அமெரிக்க போர்க் கப்பல்கள் குவிக்கப்பட்டு உள்ளன. ஈரான் கடற்படையின் 60 கப்பல்கள், ஏராளமான படகுகளை அமெரிக்க ராணுவம் குண்டுகளை வீசி அழித்து உள்ளது.
இந்த சூழலில் ஹார்முஸ் ஜலசந்தியில் நூற்றுக்கணக்கான கண்ணிவெடிகளை ஈரான் ராணுவம் வீசி உள்ளது. கடலுக்கு அடியில் மூழ்கியிருக்கும் இந்த கண்ணிவெடிகளை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்க முடியும். எதிரிகளின் போர்க்கப்பல்கள், சரக்கு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் வரும்போது கண்ணி வெடிகளை வெடிக்கச் செய்து கப்பல்களை தகர்ப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சியுடன் தொலைபேசி வாயிலாக தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையின் அத்தியாவசியத்தை ஜெய்சங்கர் எடுத்துரைத்தார். இரு நாடுகளுக்கும் உள்ள நீண்ட கால உறவு மேம்பட இந்திய கப்பல்களுக்கு வழிவிட வேண்டும் என்று அப்பாஸ் அரக்ச்சியை ஜெய்சங்கர் கேட்டுக் கொண்டார்.
இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி தேவையில் 80 சதவீதத்துக்கும் மேலாக இறக்குமதியைச் சார்ந்தே உள்ளது. இந்த வழித்தடத்தில் பாதிப்பு ஏற்பட்டால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியக் கப்பல்களுக்கு விலக்கு அளிக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக, இந்தியக் கப்பல்களைப் பாதுகாப்பாகக் கடந்து செல்ல ஈரான் அனுமதிக்குமா என்ற கேள்விக்குப் பதிலளித்த இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபத்தாலி, "ஆமாம்.. ஏனெனில் இந்தியாவும் நாங்களும் நண்பர்கள். இதை நீங்கள் சிறிது நேரத்தில் பார்ப்பீர்கள். ஏனெனில், ஈரானும் இந்தியாவும் நட்பு நாடுகள் என்று நாங்கள் நம்புகிறோம். எங்களுக்குப் பொதுவான நலன்களும், பொதுவான எதிர்காலமும் உள்ளன.
இந்திய மக்களின் துன்பம் எங்கள் துன்பமே. அதுபோலவே எங்கள் துன்பமும் இந்திய மக்களின் துன்பம். இந்தக் காரணத்தினால், இந்திய அரசு எங்களுக்கு உதவுகிறது; நாங்களும் இந்திய அரசாங்கத்துக்கு உதவ வேண்டும். இந்தியாவில் உள்ள தூதர்களாகிய நாங்கள், இந்தப் பிராந்தியத்தில் எங்களுக்குப் பொதுவான எதிர்காலம் இருப்பதாக நம்புகிறோம். இந்தக் காரணத்தினால், ஈரானின் அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும், இந்திய அரசாங்கத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்து வழிவகை செய்யுமாறு இந்தியாவில் உள்ள ஈரானியத் தூதரகத்துக்கு அறிவுறுத்தியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள ஈரானின் உச்சத் தலைவரின் பிரதிநிதியான அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹி, ஹார்முஸ் நீரிணையை மூடிவிட வேண்டும் என்று தங்கள் நாடு ஒருபோதும் விரும்பியதில்லை என்றும், சில கப்பல்கள் இப்போதும் அந்த வழியாகச் சென்று கொண்டிருக்கின்றன என்றும் கூறியிருந்தார்.
-
Trump: எல்லாரும் ரெடியா இருங்க.. அடுத்த அட்டாக் பலமா இருக்கணும்.. ஈரானுக்கு எதிராக புது அறிவிப்பு! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
"ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கிறோம்.." ஈரான் அறிவிப்பு.. ஓவர்நைட்டில் முடிவுக்கு வந்த வளைகுடா போர் -
எங்களை தொட்டால்.. டிரம்புக்கு எதிராக ஈரான் கையில் 2 பெரிய பிளான்.. சவுதி - கத்தாரும் தப்பாது -
டிரம்பை ஏமாற்றும் ஈரான்? ஆங்கிலத்தில் ஒன்று, உள்ளூர் மொழியில் வேறு ஒன்று! வெளியான இருவேறு ரிப்போர்ட் -
அடிசக்க.. பிட்காயின் விலை 72000 டாலர்.. ஈரான் போர் நிறுத்தம் எப்படி வேலை செய்யுது பாருங்க! -
தங்கம், வெள்ளி விலையில் தடாலடி உயர்வு.. அப்போ சென்னை மார்கெட்டில் 'தீபாவளி பரிசு' உண்டு! -
நாளை மறுநாள் முக்கியமான மீட்டிங்! களத்தில் அமெரிக்க அதிகாரிகள்! வளைகுடா எதிர்காலமே இதில்தான் இருக்கு -
ஈரான் அமெரிக்கா போர் நிறுத்தம்.. சிலிண்டர் பிரச்சனை எப்போதுதான் தீரும்? இப்படி ஒரு சிக்கல் இருக்கா? -
ஈரானை காப்பாற்றிய ரஷ்யா - சீனா.. ‘வீட்டோ'வால் வீழ்த்தப்பட்ட தீர்மானம்.. ஐநாவில் என்ன நடந்தது? -
எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் நெதன்யாகு.. லெபனானை தொடர்ந்து தாக்குவோம் என இஸ்ரேல் திட்டவட்டம் -
ஈரான் மீது அணு ஆயுத தாக்குதலுக்கு ரெடியாகிறதா அமெரிக்கா? வெள்ளை மாளிகை சொன்ன மேட்டர்!












Click it and Unblock the Notifications